56. சிவனடியார்க்கு அல்லல் இல்லை

“காளவிடப் பாந்தள் கருடனைக் கட்டுமோ?

வாள் எரியைக் கட்டுமோ வன்கயிறு? - நீளும்

பவம் அருளும் பாசம்வெம் பஞ்சேந் திரியம்

சிவயோகியைப் பிணியாவே.” -- நீதிவெண்பா


கருமையான நஞ்சினை உடைய பாம்பு கருடனைக் கட்டுமோ? வலிமையான கயிறு ஒளி மிகுந்த நெருப்புக் கொழுந்தைக் கட்டுமோ? கட்ட முடியாது. அவைபோல, வளரும் தீவினையைக் கொடுக்கும் பாசங்களும், அப் பாசங்களுக்கு உதவியாக இருக்கும் கொடிய ஐம்பொறிகளும், சிவனை நோக்கித் தவம் புரியும் அடியார்களைத் துன்புறுத்த மாட்டா.


(காளம் - கருமை.  பாந்தள் - பாம்பு.  வாள் - ஒளி.  பவம் - தீவினை.  பாசம் - மலக்கட்டு, ஆணவம் மாயை கன்மம்.   பஞ்சேந்திரியம் - மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகிய ஐந்து பொறிகள்.)


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...