57. புண்ணியத்தாலேயே நல்வாழ்வு

 “புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தால் அன்றியே,

மத்தமிகு பாவத்தால் வாழ்வு ஆமோ? - வித்துபயிர்

தாயாகியே வளர்க்கும் தண்புனலால் அல்லாது,

தீயால் வளருமோ செப்பு?” -- நீதிவெண்பா.


விதைத்து உண்டாகும் நெற்பயிரானது, தாயைப் போலவே இருந்து தன்னை வளர்க்கும் குளிர்ந்த நீரால் விளைவது அல்லாமல், நெருப்பினால் வளருமோ? நீ சொல். அதுபோலத்தான், அறிவையும் வீடுபேற்றையும் கொடுக்கும் நல்வினையால் அல்லாமல், அறியாமை மிகுகின்ற தீவினையால் ஒருவருக்கு நல்வாழ்வு உண்டாகுமோ? உண்டாகாது. நல்வினையாலேயே உண்டாகும்.


(முத்தி - வீடுபேறு.  மத்தம் - அறியாமை.  தண்புனல் - தண்ணீர்.)


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...