"அள்ளித்தெண் ணீறணியும் தண்டலையார்
வளநாட்டில் ஆண்மை யுள்ளோர்,
விள்ளுற்ற கல்வியுள்ளோர், செல்வமுள்ளோர்,
அழகுடையோர் மேன்மை நோக்கி
உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லை
எனவுரைத்திங் குழல்வார் எல்லாம்
பிள்ளைபெற் றவர்தமைப் பார்த் திருந்துபெரு
மூச்செறியும் பெற்றி யாரே."
இதன் பொருள் ---
தெள் நீறு அள்ளி அணியும் தண்டலையார் வளநாட்டில் - தூய திருநீற்றை எடுத்து த் திருமேனி முழுதும் அணிகின்ற திருத் தண்டலை இறைவரின் வளமுடைய நாட்டில், ஆண்மை உள்ளோர் - வீரம் உடையோர், விள்ளுற்ற கல்வி உள்ளோர் - விளக்கிக் கூறப்படும் கல்வி கற்றோர், செல்வம் உள்ளோர் - செல்வம் உடையோர், அழகு உடையோர் - வனப்பு உள்ளவர் (ஆகியவரின்), மேன்மை நோக்கி - உயர்வைப் பார்த்து, நமக்கு இல்லை என உள்ளத்தில் அழன்று இங்கு உழல்வார் எல்லாம் - நமக்கு இவை கிடைக்கவில்லையே என்று மனத்தில் வெதும்பி வெதும்பித் திரிபவர்கள் எல்லோரும், பிள்ளை பெற்றவர் தமைப் பார்த்து - பிள்ளை பெற்றவர்களை நோக்கி, இருந்து பெருமூச்சு எறியும் பெற்றியார் - அமர்ந்து பெருமூச்சு விடும் தன்மை உள்ளவர்.
No comments:
Post a Comment