கோபுர தரிசனம்
"கோபுர தரிசனம் பாவ விமோசனம்"
-----

இவ்வாறு சொல்லக் கேட்டுள்ளோம். இது செவிவழியாக வரும் வழக்குச் சொல்லாகவே உள்ளது. பெரியவர்கள் இவ்வாறு சொன்னதாக ஆதாரம் உள்ளதா என்று பலகாலம் தேடினேன். இறையருளால் கிடைத்தது.

கோபுரத்தைத் தூலலிங்கம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். தூலம் என்றால் பெரியது. கருவறையில் உள்ள இலிங்கத்தை விடப் பெரியதாக கோபுரம் உள்ளதால், அது "தூலலிங்கம்" ஆயிற்று. இந்த வழக்குச் சொல்லுக்கு ஆதாரம் திருப்புகழில் உள்ளது.

திருத்தணிகைத் திருப்புகழில், "தூரத் தொழுவார் வினை சிந்திடு தாது உற்று எழு கோபுரம்" என்று அருணகிரிநாதர் பாடி உள்ளார்.

அப்பர் பெருமான் ஐந்தாம் திருமுறையில், "ஆரூரரைத் தூரத்தே தொழுவார் வினை தூளியே" என்று பாடி உள்ளார்.

தூரத்தில் இருந்து, தூல லிங்கமாகிய கோபுரத்தைத் தரிசித்து வணங்கினாலும் நமது வினைகள் பொடி ஆகும். எனவே தான், நமது பெரியவர்கள் தூரத்தில் கோபுரத்தைக் கண்டாலே வணங்குவார்கள். நமக்கும் அது பழக்கம் ஆகவேண்டும். திருக்கோயிலின் உள்ளே சென்று இறைவனை வணங்க வாய்ப்பு இல்லாத காலத்தில், கோபுரத்தை வணங்கலாம்.

தூளியே --- தூள் ஆகும்.  பொடி ஆகும். சாம்பல் ஆகும்.
பொடி, சாம்பல் என்னும் சொற்களுக்கு, வடமொழியில் பஸ்பம் என்று பொருள்படும்.

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...