“மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாட் பெற்றானும், - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும், இம்மூவர்
சாவா உடம்பு எய்தினார்.” -- திரிகடுகம்.
மண்ணுலகத்தில், தனக்குப் பெரும்புகழை நிலைநிறுத்தினவனும், பெண்களுள் குற்றமற்ற சிறப்பு உடைய கற்புடையவளை மனைவியாகப் பெற்றவனும், உண்ணப்படுகின்ற நீர் குறைவு இன்றிக் கிடைக்குமாறு கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம் மூவரும் எக்காலத்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர் ஆவார்.
(பூத உடம்பு அழிந்தாலும், புகழுடம்பு அழியாது இருத்தல், சாவா உடம்பினைப் பெற்ற நிலை ஆகும்.)
No comments:
Post a Comment