67. நல்லதே ஆயினும் காலம் இடம் அறிந்து சொல்லுக.

 இதம்அகித வார்த்தை எவர்க்கேனும் மேலாம்,

இதம்எனவே கூறில்இதம் அன்றே, - இதம்உரைத்த

வாக்கினால் ஏரண்ட மாமுனியும் சோழனொடு

தேக்குநீர் வீழ்ந்து ஒழிந்தான் சேர்ந்து.” -- நீதிவெண்பா


நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னதன் காரணமாக ஏரண்டர் என்னும் பெரிய முனிவரும் சோழமன்னனோடு கூடத் தாமும் தேங்கியிருந்த மிகுந்த நீரில் வீழ்ந்து உயிர் நீத்தார். ஆதலால், நல்லவரோ தீயவரோ அவர் எவராய் இருந்தாலும், நல்லவர்களுக்கு நல்ல சொற்களையும், தீயவர்களுக்குத் தீய சொற்களையும் உயர்ந்த நன்மை என்றே சொல்லுதல் நல்லது. அல்லவா?


(இதம் - நன்மை பயக்கும் சொற்கள்.  அகிதம் - தீமை பயக்கும் சொற்கள்.  தேக்கு நீர் - தேங்கி இருந்த நீர்.)


இதில் வரும் கதை-----  திருவலஞ்சுழி என்னும் சிவத்தலத்திற்குப் பக்கத்தில் காவிரி ஆறு பாய்ந்து நீர தேங்கி, நிலத்தினுள் சுழித்துச் சென்றது.  அதனை அறிந்த அந்நாட்டு வேந்தனான சேழ அரசன், நாட்டுக்குப் பயன்படாமல் அந்நீர் வீணாகின்றதே எனக் கவலை உற்றான்.  பெரிய முனிவராகிய ஏரண்டர் என்பவரிடம் தன் கவலையை வெளியிட்டான்.  அம் முனிவர், அந்த நீர்ச் சுழியில் யாரேனும் ஒருவர் தலையைப் பலி கொடுத்தால், நீர் நாட்டில் பாய்ந்து பயன்படும் என்றார்.  உடனே அரசனும் உலகம் நன்மை அடைய விரும்பித் தன் தலையைப் பலி கொடுத்து இறந்தான். நாம் உபாயம் சொன்னதால் அன்றோ அரசன் உயிரிழக்க நேரிட்டது என வருந்தி, அம் முனிவரும் அச் சுழியில் வீழ்ந்து இறந்தார்.


அரசன் கருணை உடையவனாதலால், அவனிடத்தில் உண்மையான உபாயத்தைச் சொன்னால், என்ன நேருமோ என ஆராயாமல், நல்லவரிடத்தில் நல்ல சொல்ல வேண்டும் என்பதே தம் கருத்தாகக் கொண்டு முனிவர் சொன்னமையால், மன்னன் இறந்து நாடு கெட்டதோடு, தாமும் உயிர் துறக்க நேர்ந்தது.


No comments:

மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...