“இத்தரையோர் தன்னில் இருவரே மேலானோர்;
சித்தி ரசவாதி சிவயோகி, - முத்தனையாய்!
நல்குரவும் உற்பவமும் நாசம் புரிவாரே,
அல்லவரே வீரியக் கீடம்.” -- நீதிவெண்பா.
முத்துப்போல் அழகியவளே! இந்த உலகத்தில் உள்ளவர்களில் வறுமையையும் பிறப்பையும் ஒழிப்பவர்களாகிய சித்தாகிய இரசவாதம் செய்யும் சித்தர்களும், சிவனை எண்ணி யோகம் பயில்பவர்களும் என்னும் இரண்டு வகையானவர்களே மேன்மையானவர்கள். இவ்விருவரும் அல்லாத மற்றையவர்கள் பொறிபுலன்களால் ஆன புழுக்களே.
(சித்திரசவாதி - சித்து ரசவாதி - இரும்பைப் பொன்னாக்கும் வித்தை தெரிந்தவர். நல்குரவு - வறுமை. உற்பவம் - பிறப்பு. கீடம் - புழு.)
No comments:
Post a Comment