கடுகம் 17

“மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்

பூப்பின்கண் சாராத் தலைமகனும், - வாய்ப்பகையுள்

சொல்வென்றி வேண்டும் இலிங்கியும், இம்மூவர்

கல்விப் புணைகைவிட் டார். “ -- திரிகடுகம்.


முதுமை வந்த பின்னரும் பற்றுக்களை துறக்காது இருப்பவனும், கற்புடைய மனைவியைக் குறித்த காலத்தில் சேராத கணவனும்,  பயனற்ற சொற்களைப் பேசுகின்ற தவ வேடத்தானும் கல்வியறிவைக் கைவிட்டவர் ஆவர்.

பூப்பு - மகளிர் சூதகம். இதுகண்ட முதல் மூன்று நாளும் சேராது, நான்காம் நாள்முதல் பதினாறாம் நாள்வரை பூப்புற்ற மனைவியை கணவன் சேர்ந்து வாழ்தலே முறை என்பது உடலியல் நூலோர் கூற்று. "பூத்த காலைப் புனையிழை மனைவியை, நீராடியபின் ஈராறு நாளும், கருவயிற்று உறூஉங் காலம் ஆதலிற், பிரியப் பெறாஅன் பரத்தையில் பிரிவோன்," என்பது அகப்பொருள் விளக்கத்தின்படி, நீராடிய பின் பன்னிரண்டு நாளுங் கருப்படுங்காலமாதலிற் பரத்தையிற் பிரிந்த தலைமகனும் அப் பன்னிரண்டு நாளும் தலைவியைப் பிரிந்து உறைதல் ஆகாது என்பது விளங்கும்.  "தீண்டா நாள் முந் நாளும் நோக்கார் நீராடியபின், ஈராறு நாளும் இகவற்க என்பதே, பேரறிவாளர் துணிவு" என்று ஆசாரக் கோவை கூறும்.

இலிங்கி – இலிங்கம் அணிந்தவர். தவ வேடத்தில் உள்ளவர்.

No comments:

மூலம் 17

 “நட்டாரை ஆக்கி, பகைபணித்து, வை எயிற்றுப் பட்டுஆர் அகல்அல்கு லார்படிந்து, - ஒட்டித் தொடங்கினார், இல்லகத்து அன்பில் துறவா உடம்பினான் ஆய பயன்....