36. மூதேவி வாழும் இடங்கள்
சோரமங் கையர்கள், நிசம்உரையார்கள் வாயினில்;
     சூதகப் பெண்கள்
நிழலில்;
சூளையில் சூழ்தலுறு புகையில்; களேபரம்
     சுடுபுகையில்; நீசர்நிழலில்;
காரிரவில்; அரசுநிழ லில்;கடா நிழலினொடு
     கருதிய
விளக்குநிழலில்;
காமுகரில்; நிட்டையில் லாதவர் முகத்தினில்;
     கடுஞ்சினத்
தோர்சபையினில்;
ஈரமில் லாக்களர் நிலத்தினில்; இராத்தயிரில்;
     இழியுமது
பானர்பாலில்;
இலைவேல், விளாநிழலில்; நிதமழுக் கடைமனையில்;
     ஏனம்நாய் அசம்கரம்தூள்
வாரிய முறத்தூள் பெருக்குதூள் மூதேவி
     மாறாது இருப்பள்
என்பர்.
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு
குமரேசனே.
        இதன் பொருள் ---
     மயில் ஏறி
விளையாடு குகனே --- 
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
     புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
     சோர மங்கையர்கள் --- பிற ஆடவரைக் கூடும், பரத்தைத் தொழில் உடைய பெண்கள் இடத்தில், 
     நிசம் உரையார்கள்
வாயினில் --- உண்மை பேசாதவரின் வாயில், 
     சூதகப் பெண்கள்
நிழலில் --- வீட்டுவிலக்கு ஆ
பெண்களின் நிழலில், 
     சூளையில் சூழ்தல் உறு
புகையில் --- சூளையில்
உண்டாகும் புகையில், 
     களேபரம் சுடு புகையில் --- பிணத்தைச் சுடுகின்ற புகையில், 
     நீசர் நிழலில் --- இழிந்த குணம் உடையோரது நிழலில், 
     கார் இரவில் --- கரிய இரவில், 
     அரச நிழலில் --- அரசமரத்தின் நிழலில், 
     கடா நிழலினொடு --- எருமைக்கடாவின் நிழலில், 
     கருதிய விளக்கு
நிழலில் --- இருளை நீக்கக் கருதி
ஏற்றிய விளக்கின் நிழலில், 
     காமுகரில் --- காம உணர்வு கொண்டவர் இடத்தில்,
     நிட்டை இல்லாதவர்
முகத்தினில் --- தியானம், யோகம்
பயிலாதவர் முகத்தில்,
     கடும் சினத்தோர்
சபையினில் --- கொடிய சீற்றம் உடையோர்
உள்ள சபையில்,
     ஈரம் இல்லாத
களர் நிலத்தினில் --- ஈரம் தங்காத உவர்
நிலத்தில்;
     இராத்
தயிரில் --- இரவில் உண்ணப்படும் தயிரில், 
     இழியும் மதுபானர்
பாலில் --- 
இழிந்த கள்ளை உண்போர் இடத்தில், 
     இலைவேல் விளா நிழலில் --- இலைகளை உடைய வேலமரத்தின் நிழலில், விளாமரத்தின்
நிழலில், 
     நிதம் அழுக்கு அடை
மனையில் --- எப்போதும் அழுக்குச்சேர்ந்து
இருக்கும் வீட்டில், 
     ஏனம் நாய் அசம்
கரம் --- பன்றி நாய் ஆடு
கழுதை ஆகிய இவைகளின் இடத்தில், 
     தூள் --- புழுதியில், 
     வாரிய முறத் தூள் --- முறத்தில் வாரிய தூளில், 
     பெருக்கு தூள் --- பெருக்கிய குப்பையில், 
     மூதேவி
மாறாது இருப்பள் என்பர் --- மூதேவி விலகாது
இருப்பாள் என்பார்கள்.
No comments:
Post a Comment