ஒழுக்கக் கேடு கூடாது.




34. சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?

சின்னமெங்கே? கொம்பெங்கே? சிவிகையெங்கே?           
        பரியெங்கே? சிவியார் எங்கே?
பின்னைஒரு பாழும்இல்லை! நடக்கைகுலைந்
     தால்உடனே பேயே அன்றோ?
சொன்னவிலும் தண்டலையார் வளநாட்டிற்
     குங்கிலியத் தூபம் காட்டும்
சன்னதமா னதுகுலைந்தாற் கும்பிடெங்கே?
     வம்பர்இது தனையெண் ணாரே!

         இதன் பொருள் ---

     சொல் நவிலும் தண்டலையார் வள நாட்டில் --- புகழ்ந்து போற்றப்பெறும் திருத்தண்டலை இறைவரின் வளமிக்க  நாட்டிலே, 

     நடக்கை  குலைந்தால் --- ஒருவருடைய நன்னடத்தையானது கெட்டுப் போகும் காலத்து,

     சின்னம் எங்கே --- அவரது வெற்றிச் சின்னம் எங்கே?

     கொம்பு எங்கே -- அவரது வருகையைத் தெரிவிக்கும் ஊதுகொம்பு எங்கே?

     சிவிகை எங்கே --- அவர் ஊர்ந்து வந்த பல்லக்கு எங்கே?

     பரி எங்கே --- அவர் ஏறி வந்த குதிரை எங்கே?

     சிவியார் எங்கே --- பல்லக்குத் தூக்குவோர் எங்கே?

     பின்னை ஒரு பாழும் இல்லை --- ஒழுங்கு கெட்டபிறகு எந்த மதிப்பும் இல்லை.

     உடனே பேயே அன்றோ --- எல்லாம் ஒழுக்கக் கேட்டோடு போன உடனே பேய் போலவே ஆகி விடுவர்,

     குங்கிலியத் தூபம் காட்டும் சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே --- குங்கிலியப் புகை காட்டும் முயற்சியை விட்டு விட்டால் திருக்கோயிலுக்கு மக்கள் வந்து மக்கள் கும்பிடுவது இருக்குமா?,

     வம்பர் இது தனை எண்ணார் --- பயனற்றவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிச் சிந்திக்கமாட்டார்கள்.

     விளக்கம் --- திருக் கோயிலுக்குக் குங்கிலியப் புகை இடுவது வழிபாட்டு நிகழ்வுகளில் ஒன்று. அது குறைந்தால் என்பது, பிற வழிபாட்டு நிகழ்வுகளையும் குறிக்கும். வழிபாட்டு நிகழ்வுகள் இல்லாத நிலையில், அது திருக்கோயிலாக மதிக்கப்படாது. எனவே, மக்கள் வரமாட்டார்கள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...