36. ஆரியக் கூத்தாடுகினும் காரியத்தில் கண்ணாக
இருப்பது அறிவு.
பேர்
இசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்மா
தரும்சூழப் பிரபஞ் சத்தே,
பார்இயைபு
உற்று இருந்தாலும், திருநீற்றில்
கழல்காய்போல் பற்று இல்லாமல்,
சீர்
இசைக்கும் தண்டலையார் அஞ்செழுத்தை
நினைக்கின் முத்தி சேரல் ஆகும்;
ஆரியக்கூத்து
ஆடுகினும் காரியமேல்
கண்ணாவது அறிவு தானே.
இதன் பொருள் ---
ஆரியக்கூத்து ஆடுகினும் காரியம் மேல் கண்
ஆவது அறிவு --- ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தின் மேல் கண்ணாக இருப்பது
அறிவுடைமை ஆகும், என்பது போல்,
பேர் இசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்
மாதரும் சூழ
--- புகழ்ந்து சொல்லத்தக்க உறவினருடன் மக்களும் பெண்டிரும் சூழ்ந்திருக்க,
பிரபஞ்சத்தே பார் இயைபு உற்று இருந்தாலும் - உலகத்திலே பொருந்தி வாழ்வதாக
இருந்தாலும்,
திருநீற்றில் கழல்காய் போல் பற்று
இல்லாமல் --- திருநீற்றில் இருந்தாலும் கழல் காயானது திருநீற்றில் பற்று இல்லாமல்
இருப்பது போல, உலகப் பற்றுக்களிலே
மனதை வைத்து விடாமல், (கடமை உணர்வோடு வாழ்ந்துக் கொண்டு)
சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்சு எழுத்தை
நினைக்கின் முத்தி சேரலாகும் --- சிறப்புப் பொருந்திய திருத்தண்டலையாரின் நாமமாகிய
திருவைந்தெழுத்தினையும் நினைத்து வாழ்ந்தால் முத்தி இன்பத்தைப் பெறமுடியும்.
கருத்து
--- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின்மேல் கண்ணாயிரு' என்பது பழமொழி. உலக வாழ்விலே ஈடுபட்டு இருந்தாலும், அதில் பற்று வைக்காமல், உலக இன்பத்தைப் பொருளாக
மதிக்காமல்,
திருவைந்தெழுத்தைச்
செபித்து வந்தால் முத்தி பெறல் ஆகும்.
No comments:
Post a Comment