தந்தை
உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்
அந்தமுறு
தேசிகர் தம் ஆணையை மறந்தோன்
சந்தமுறு
வேத நெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின்
வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர்.
இதன்
பொருள் ---
தந்தை உரை தட்டினவன் --- தந்தையின் சொல்லை மறுத்து, அதற்கு மாறாக நடந்தவன்,
தாய்
உரை இகழ்ந்தோன் --- தாயார் கூறும் அறிவுரைகளை அவமதித்து நடந்தவன்,
அந்தம் உறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன் --- அழகு பொருந்திய குருநாரின்
கட்டளையை மறந்தவன்,
சந்தம் உறு வேத நெறி தாண்டின இந்நால்வர் --- சந்தசுக்களோடு கூடிய வேதங்களிலே
சொல்லப்பட்ட நன்னெறிகளைக் கடந்தவன்,
ஆகிய
இந்த நால் வகையானவர்களும்,
செந்தழலின் வாயின் இடைச் சேர்வது மெய்
கண்டீர் --- சிவந்த
நெருப்பு வடிவமான நரகத்தினை அடைவது உண்மையாகும் என்பதை அறிந்து கொள்வீர்.
No comments:
Post a Comment