நடுநிலை தவறினால் அழிவு உறுதி.




நாரிகள் வழக்கானாலும் நடு அறிந்து உரைப்போர் சுத்தர்,
ஏரிபோல் பெருகி மண்மேல் இருகண்ணும் விளங்கி                                                                வாழ்வார்,
ஓரமே சொல்வார் ஆகில், ஓங்கிய கிளையும் மாண்டு,
தீரவே கண்கள் இரண்டும் தெரியாமல் மாழ்குவாரே.


     இதன் பொருள் ---

     நாரிகள் வழக்கு ஆனாலும் --- தனது வழக்கை எடுத்துப் பயமில்லாமல் பேசும் திறம் அற்ற ஏழைப் பெண்களின் வழக்காக இருந்தாலும்,

     நடு அறிந்து உரைப்போர் சுத்தர் --- அந்த வழக்கை நடுவு நிலை தவறாமல் தீர விசாரித்துத் தீர்ப்பு சொல்பவரே உள்ளத்தால் தூய்மையானவர்கள்.

     ஏரி போல் பெருகி --- அவர்கள் நீர் நிறைந்து விளங்கும் ஏரியினைப் போலப் பல வளங்களும் விளங்கப் பெற்று,

     மண்மேல் இருகண்ணும் விளங்கி வாழ்வார் --- இந்த உலகத்தில் தனது இரு கண்களும் ஒளி பொருந்தி இருக்க வாழ்வார்கள்.

     ஓரமே சொல்வார் ஆகில் ---  நடுவு நிலை தவறி, ஒருதலையாகத் தீர்ப்புக் கூறுவார்களே ஆகில்,

     ஓங்கிய கிளையும் மாண்டு --- அவர்களது உயர்ந்த சுற்றத்தார்களும் மாண்டு,

     தீரவே கண்கள் இரண்டும் தெரியாமல் மாழ்குவாரே --- தனது கண்கள் இரண்டும் விளங்காமல் கெட்டுப் போய், துன்பத்தில் உழன்று இறப்பார்கள்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...