044. குற்றம் படிதல் --- 10. காதல காதலர்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்

 

     உயிர்க்குசிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்)மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்)மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

 

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழந்தைப் பருவத்தே முளைத்துஇளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக."கன லோபம்"நில்லாது செல்லும் செல்வத்தின் மீது உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் எனப்படும். . செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்ததுஅது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால்அதனை "ஏமம் அறும் மாற்சரியம்என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிரஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவன் தான் விரும்பிய பொருளைத் தனது பகைவர் அறியாமல் நுகரவல்லவனானால்மற்றவர் அறியாதபடி தன்னைக் கெடுக்கும் பகைவரது சூழ்ச்சிகள் பழுது ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் தான் விரும்பிய பொருள்களைத் தனது பகைவர் அறியாமல் அனுபவிப்பானாயின்அப் பகைவர் தன்னை வஞ்சித்துஅதனை அனுபவியாமல் தடுத்தல் கூடாமையாகும். காமம்வெகுளிஉவகை என்கின்ற மூன்று குற்றங்களும் முழுவதும் நீக்குவதற்கு முடியாத குற்றங்களாக உள்ளன. மேலும் காம நுகர்ச்சி என்பதுஇல்லறத்தார் யாவர்க்கும் உள்ளதால்ஓரு வேளை ஒருவன் காம நுகர்வை விரும்பினான் ஆயின்அவன் அதைத் தனது பகைவர் அறியாமல் நுகரவேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்,

ஏதில ஏதிலார் நூல்.              

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்--- தான் காதலித்த பொருள்களை அவர் அக் காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்

 

     ஏதிலார் நூல் ஏதில்--- பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.

 

     (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின்அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம்வெகுளிஉவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின்இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறிஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

தானம் கொடுக்கும் தகைமையும்,மானத்தார்

குற்றங் கடிந்த ஒழுக்கமும்,- தெற்றெனப்

பல்பொருள் நீங்கிய சிந்தையும்,இம்மூன்றும்

நல்வினை ஆர்க்கும் கயிறு.            ---  திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     தானம் கொடுக்கும் தகைமையும் --- தானத்தைக் கொடுக்கின்றபெருஞ் செய்கையும்மானத்தார் குற்றம் கடிந்த ஒழுக்கமும் --- பழிக்கு நாணுதல் உடையாரதுகுற்றத்தை நீக்கிய நல்லொழுக்கமும்தெற்றென பல் பொருள் நீங்கிய சிந்தையும் --- தெளிய (உண்மையாக)பல விடயங்களினின்றும்ஒழிந்த எண்ணமும்இ மூன்றும் நல்வினை ஆர்க்கும் கயிறு --- ஆகிய இம் மூன்றும்அறத்தின் பயனை நீங்காதபடி கட்டுகின்ற கயிறாம்.

 

 

தான் இனிது இயற்றும் மனுநெறிப் படிமுன்

            தான் நடந்து அறவழிகாட்டி,

ஞானநற் குணத்தின் மேன்மையால் எவர்க்கும்

            நாயகம் தான் எனத் தெரித்து,

தானமும் தயையும் மெய்ம்மையும் தவமும்

            தற்பரன் வணக்கமும் பொறையும்

மானமும் மிகுத்து நரர் எலாஞ் செழிக்க

            மகிழ் அரசு அளிப்பவன் மன்னே.  ---  நீதிநூல்.

 

இதன் பொருள் ---

 

     முறை தவிராமல் தான் நடந்து குடிகளையும் நடத்துவோன்நல் அறிவாலும் நற்பண்பாலும் எல்லாருக்கும் தலைவன் ஆவோன்,  தானம்கண்ணோட்டம்மெய்ம்மை தவம் தெய்வ வணக்கம்பொறுமைமானம் முதலியன இயல்பாய் அமைந்துமக்கள் எல்லாம் செழிப்புடன் மகிழ்வுற ஆள்வோன் வேந்தன்.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...