045. பெரியாரைத் துணைக்கோடல் --- 01. அறன்றிந்து மூத்த

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "அறத்தினது நுட்பத்தை அறிந்து,தன்னின் மூத்த அறிவினை உடையாரது நட்பினைஅந் நட்பின் அருமையை ஆராய்ந்து அறிந்துஅதனைக் கொள்ளும் திறத்தையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     அறத்தினது நுட்பத்தைச்  சாத்திரங்களின் வாயிலாகவே ஆராய்ந்து அறிதல் அல்லாமல்உலக நடையினையும் ஆராய்ந்து அறிதல் வேண்டும். 

 

     மூத்தலாவதுஅறிவாலும்ஒழுக்கத்தாலும்காலத்தாலும் முதிர்தல். அறிவுடைமையாவதுநீதியையும் உலக இயலையும் அறிதலை உடையது. 

 

     திறன் அறிதலாவதுஅறிவு உடையாரை நன்கு மதித்தல்,அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்அவர் சொல்வழி நடத்தல் முதலானவைகளால் அவர் தன்வசம் ஆகும் திறத்தை ஆறிதல். 

 

     அறிவுடையார் தன் வசம் ஆதல் என்பதுதனது அன்பினால் அவர் நீங்காமல் இருக்கும்படி நடத்தல்.

 

திருக்குறளைக் காண்போம்....

 

அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை,

திறன் அறிந்து தேர்ந்து கொளல்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை--- அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை

 

     தேர்ந்து திறன் அறிந்து கொளல்--- அரசன் அதனது அருமையை ஓர்ந்துகொள்ளும் திறன் அறிந்து கொள்க.

            

     (அறநுண்மை நூலானேயன்றிஉய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்துஎன்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல்அறிவு உடையார் நீதியையும் உலக இயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல்உயரச் செய்தல்அவர் வரை நிற்றல்என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...