047. தெரிந்து செயல்வகை --- 05. வகையறச் சூழாது

 வவ


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "செயல் வகைகளைச் சிக்கல் அற ஆராய்ந்துமுற்றும் முடிபு செய்து கொள்ளாமல்செயல்மேல் செல்லுதல்பகைவரை அவர் வளரும் இடத்தில் நிறுத்துவதாகிய ஒரு வழியாகி விடும்" என்கின்றார் நாயனார்.

 

     செயலைச் செய்யும் வகையாவதுவலிகாலம்இடம் என்னும் மூவகையால் தனக்கும்பகைவர்க்கும் உண்டாகும் நிலைமைகளையும்தொழில் தொடங்கும் விதமும்அதற்கு வரக்கூடிய தடைகளும்அத் தடைகளை ஒழிக்கும் விதமும்பகைவரை வெல்லும் விதமும்அதனால் வரும் பயனும் ஆகிய இவைகள். இவைகளை முழுதும் எண்ணாதுதொழிலைத் தொடங்கினால்எடுத்த தொழில் அழிவதுடன்பகைவரால் வெல்லப்பட்டுதான் அழிய நேரும். எனவேமுற்றும் எண்ணியே செயலைத் தொடங்கவேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

வகைஅறச் சூழாது எழுதல்பகைவரைப்

பாத்திப் படுப்பது ஓர் ஆறு.                  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      வகை அறச் குழாது எழுதல்--- சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாதுசிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்

 

     பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு--- அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.

 

      (அத்திறங்களாவன : வலிகாலம்இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும்,வினை தொடங்குமாறும்அதற்கு வரும் இடையூறுகளும்அவற்றை நீக்குமாறும்வெல்லுமாறும்அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும்ஒழியா வழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.)

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...