041. கல்லாமை --- 06. உளர் என்னும்

 

                                                                     திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     அறிவு நூல்களைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளை, "கல்வி" என்னும் அதிகாரத்துள் விளக்கி அருளிய நாயனார்கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் கேட்டினை இந்த அதிகாரத்துள் அறிவுறுத்துகின்றார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "உயிரோடு இருக்கின்றனர் என்று சொல்லும் அளவினர் அல்லாமல்தமக்கும் பிறர்க்கும் பயன் தராமையால்கல்லாதவர்கள் பயன் விளையாத களர் நிலத்தைப் போன்றவர்கள்" என்கின்றார் நாயனார்.

 

     களர் நிலம் என்பது நெல் முதலியன பயிரிடுவதற்குத் தகுதியாகாத பயனற்ற நிலம். கல்லாதவரும் தம்மைப் பிறரால் மதிக்கப்படுதல் இல்லாமையோடுபிறர்க்கும் அறிவினை உதவப் பயன்படார் என்றார்.

 

திருக்குறளைக் காண்போம்...                  

 

உளர்என்னும் மாத்திரையர் அல்லால்பயவாக்

களர் அனையர்கல்லாதவர்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     கல்லாதவர்--- கல்லாதவர்

 

     உளர் என்னும் மாத்திரையர் அல்லால்--- காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி

 

     பயவாக் களர் அனையர்--- தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.

 

            (களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்துபிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)

 

     "களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்என்கின்றதுநாலடியார்உவர் நிலத்தில் தோன்றிய உப்பைபெரியவர்கள்விளை நிலத்தில் உண்டாகும் நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர் என்று களர் நிலத்தில் விளையும் உப்பின் பெருமையைக் கூறி உள்ளது.

 

     "கால் ஆழ் களர்" என்று நாயனார் பிறிதொரு திருக்குறளில் (500) காட்டியபடிமேல் திருக்குறளில் காட்டிய களர் நிலம் என்பதுகால் ஆழுகின்ற களர் நிலமாகஅதாவது புதைசேறு நிலமாக இருக்கலாம் எனவும் கொள்ள இடம் உண்டு. புதைசேறாக உள்ள நிலத்தையும், நிலம் என்று வகைப்படுத்தலாமே ஒழியஅது எதற்கும் பயன்படாத நிலம் ஆகும்.

 

     ஆறறிவு மனிதனாகப் பிறந்தவன் ஏதாவது ஒருவகையில் தன்னைச் சார்ந்த குடும்பத்திற்கோ,அல்லது சமுதாயத்திற்கோநாட்டிற்கோ பயன் உடையவனாக இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில்ஏதோ பெயருக்கு மனிதன் ஆக இருக்கின்றான் என்று கொள்ளலாம். அந்த நிலையில் அவன், "கால் ஆழ் களர்" நிலமாகவே கருதப்படுவான். மனிதனாகப் பிறந்தும்மனிதனுக்கு உரிய நல்லறிவு இன்மையால் அவன் அவ்வாறு கருதப்படுவான். மதிக்கபடமாட்டன்.

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...