பொருள் இல்லையேல் எதுவுமில்லை




பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை,
     புண்ணியம் இல்லை, என்றும்
மருவிய கீர்த்தி இல்லை,
     மைந்தரில் பெருமை இல்லை,
கருதிய கருமம் இல்லை,
     கதிபெற வழியும் இல்லை,
பெருநிலம் தனில் சஞ்சாரப்
     பிரேதமாய்த் திரிகுவாரே.

     இதன் பொருள் ---

     பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை --- செல்வம் இல்லாத வறியவர்களுக்கு இவ்வுலக இன்பம் இல்லை,

     புண்ணியம் இல்லை ---  அப் பொருளைக் கொண்டு நல்லறம் செய்வதால் உண்டாகும் புண்ணியம் இல்லை,

     என்றும் மருவிய கீர்த்தி இல்லை --- பொருந்திய புகழ் என்பது எக்காலத்தும் இல்லை,

     மைந்தரில் பெருமை இல்லை --- மக்களில் அவருக்கு நன் மதிப்பு இல்லை,

     கருதிய கருமம் இல்லை --- எண்ணிய செயல் முடிவது இல்லை,

     கதிபெற வழியும் இல்லை --- நல்ல நிலைமையை அவர்களால் அடையவும் முடியாது,

     பெருநிலம் தனில் சஞ்சாரப் பிரேதமாய்த் திரிகுவாரே --- பரந்த இந்தப் பூமியில் அவர்கள் நடைப்பிணமாய் பயனில்லாமல் திரிவார்கள்.

     கருத்து --- "அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகி ஆங்கு" என்னும் திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...