மூப்பு
இலாக் குமரி வாழ்க்கை,
முனை இலா அரசன் வீரம்,
காப்பு
இலா விளைந்த பூமி,
கரை இலாது இருந்த ஏரி,
கோப்பு
இலான் கொண்ட கோலம்,
குருஇலான் கொண்ட ஞானம்,
ஆப்பு
இலா சகடுபோலே
அழியும் என்று உரைக்கல் ஆமே.
தனக்கு
மூத்தோர் ஒருவர் இருந்து, அவருக்கு அடங்கி வாழாத இளம் பெண்ணின் வாழ்க்கை,
கோபம்
கொள்ளாத அரசனின் வீரம்,
காத்தல்
இல்லாத, நெல் விளைந்த நிலம்,
வலிமையான
கரை இல்லாமல் இருந்த ஏரி, (குளம் என்றும் கொள்ளலாம்),
பெருமைக்கு
உரிய செல்வத்தைத் தன்னிடம் கொண்டு இராத ஒருவன் செய்துக் கொண்ட ஆடம்பரமான அலங்காரம்,
குருநாதர்
ஒருவர் மூலம் அறிந்துகொள்ளாமல், ஒருவன் தானே கற்றுக் கொண்ட கல்வி அறிவு, (குரு இல்லா வித்தை பாழ்)
இவை
எல்லாம், அச்சாணி இல்லாத வண்டி போல, பயன்றறவையாய்
அழிந்து போகும் என்று உறுதியாகச் செல்லலாம்.
No comments:
Post a Comment