அரவினை ஆட்டுவாரும்

அரவினை ஆட்டுவாரும், அரும் களிறு ஊட்டுவாரும்,
இரவினில் தனிப்போவாரும், ஏறியும் நீர் நீந்துவாரும்,
விரைசெறி குழலியான வேசையை விரும்புவாரும்,
அரசனைப் பகைத்திட்டாரும், ஆர்உயிர் இழப்பார் தாமே.

பாம்பினை ஆட்டுகின்ற பாம்பாட்டிகளும்,

அருகில் நெருங்க முடியாத யானைக்கு ஊட்டி வளர்க்கின்ற பாகரும்,

இரவுக் காலத்தில் துணை இல்லாமல் தனியாகப் போகின்றவர்களும்,

அலைகள் மோதுகின்ற நீர் நிலையில் நீந்திச் செல்பவரும்,

மணம் நிறைந்த கூந்தலை உடைய பரத்தையை விரும்பிச் சேர்பவர்களும்,

தம்மை ஆளுகின்ற அரசனைப் பகைத்துக் கொண்டவர்களும்,

ஆகிய இவர்கள் எல்லாம், தமது அருமையான உயிரை இழப்பார்கள்.No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...