திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 1148
வாழிவளர்
புறம்பணையின் மருங்குஅணைந்து வரிவண்டு
சூழுமலர்
நறுந்தீப தூபங்க ளுடன்தொழுது
"காழிநகர் சேர்மின்" எனக்
கடைமுடிந்த திருப்பதிகம்
ஏழ்இசையின்
உடன்பாடி எயில்மூதூர் உட்புகுந்தார்.
பொழிப்புரை : ஊழிக்காலத்திலும் அழியாது வளர்கின்ற
புறம்பணையின் அருகில் வந்து, வரிவண்டுகள் மொய்க்கின்ற மலர்களாலும், நல்ல
மணமுடைய நறும்புகை, ஒளி விளக்கு ஆகியவற்றாலும், வழிபட்டுத்
தொழுது `சீகாழி
நகரினுள் சேர்மின்கள்\' எனும் நிறைவுடைய இறுதிச் சீர்களால்
அமைந்த திருப்பதிகத்தை ஏழிசைகளுடனே பாடியருளியவாறே, மதிலையுடைய அப்பழைய நகரினுள்
புகுந்தார்.
குறிப்புரை : இவ் அரும் குறிப்புக்களையுடைய பதிகம், `நம்
பொருள் நம்மக்கள்' (தி.2 ப.97) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில்
அமைந்ததாகும். `காழிநகர் சேர்மினே' எனவரும் நிறைவுத் தொடர் இப்பதிகப்
பாடல்தொறும் வருகின்றது. `தீபமாலை தூபமும் செறிந்தகையராகிச்
சேர்மினே\' எனும் அருளுரை இரண்டாவது பாடலில் வருகின்றது. இவற்றை யெல்லாம்
முகந்து நிற்ப இப்பாடலை அருளியுள்ளார் ஆசிரியர்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
2.097 சீகாழி பண்
- நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நம்பொருள்
நம்மக்கள்என்று நச்சி,இச்சை செய்து,நீர்
அம்பரம்
அடைந்துசால அல்லல்உய்ப்ப தன்முனம்,
உம்பர்நாதன்
உத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு
நல்நகர் நலங்கொள்காழி சேர்மினே.
பொழிப்புரை :நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர்
அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன்
எழுந்தருளிய நன்னகராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
பாடல்
எண் : 2
பாவமேவும்
உள்ளமோடு, பத்திஇன்றி நித்தலும்,
ஏவமான
செய்து,சாவ தன்முனம், இசைந்துநீர்
தீவமாலை
தூபமும் செறிந்தகையர் ஆகி, நம்
தேவதேவன்
மன்னும்ஊர் திருந்துகாழி சேர்மினே.
பொழிப்புரை :பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறை
வனிடம் பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர்
சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம் முதலியன ஏந்திய கையராகித் தேவர்
தலைவனாகிய அவ் விறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக.
பாடல்
எண் : 3
சோறுகூறை
இன்றியே, துவண்டுதூர மாய்நுமக்கு
ஏறுசுற்றம்
எள்கவே, இடுக்கண் உய்ப்ப தன்முனம்,
ஆறும்ஓர்
சடையினான், ஆதியானைச் செற்றவன்,
நாறுதேன்
மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.
பொழிப்புரை :உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற
சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய சடையினனும், நான்முகன்
தலையைக், கொய்தவனும்
ஆகிய சிவபெருமான் உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப்
பதியை அடைவீர்களாக.
பாடல்
எண் : 4
நச்சிநீர்
பிறன்கடை நடந்துசெல்ல, நாளையும்
உச்சிவம்
எனும்உரை உணர்ந்துகேட்ப தன்முனம்,
பிச்சர், நச்
சுஅரவுஅரைப் பெரியசோதி, பேணுவார்
இச்சைசெய்யும்
எம்பிரான், எழில்கொள்காழி சேர்மினே.
பொழிப்புரை :பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை
நடந்து சென்று அடையக்கண்டும் அச்செல்வர் `நாளை நண்பகற்போதில் வருக `எனக்
கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல் ஈடு பாடுடையவரும், விடம்
பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு
செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
பாடல்
எண் : 5
கண்கள்காண்பு
ஒழிந்து, மேனி கன்றி, ஒன்று அலாதநோய்
உண்கிலாமை
செய்து, நும்மை உய்த்துஅழிப்ப தன்முனம்,
விண்குலாவு
தேவர்உய்ய வேலைநஞ் சுஅமுதுசெய்
கண்கள்மூன்
றுஉடையஎம் கருத்தர்காழி சேர்மினே.
பொழிப்புரை :கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி
ஒன்றல்லாத பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத் தேவர் உய்யக்
கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ண ராகிய எம் தலைவர் விளங்கும் காழிப்பதியை
அடைவீர்களாக.
பாடல்
எண் : 6
அல்லல்வாழ்க்கை
உய்ப்பதற்கு, அவத்தமே பிறந்து, நீர்
எல்லையில்
பிணக்கினில் கிடந்திடாது எழும்மினோ,
பல்இல்வெண்
தலையினில் பலிக்குஇயங்கு பான்மையான்
கொல்லைஏறு
அதுஏறுவான் கோலக்காழி சேர்மினே.
பொழிப்புரை :துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு
வீணாகப் பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது
புறப்படுவீர்களாக. பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து
ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவ பிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.
பாடல்
எண் : 7* * * * *
பாடல்
எண் : 8
பொய்மிகுத்த
வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்,
ஐமிகுத்த
கண்டராய், அடுத்துஇரைப்ப தன்முனம்,
மைமிகுத்த
மேனிவாள் அரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த
பாம்புஅரைப் பரமர்காழி சேர்மினே.
பொழிப்புரை :மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப்
பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு
அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ்
நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய
சிவபிரானது காழியை அடைவீர்களாக.
பாடல்
எண் : 9
காலினோடு
கைகளும் தளர்ந்து,காம நோய்தனால்
ஏலவார்
குழலினார் இகழ்ந்துஉரைப்ப தன்முனம்,
மாலினோடு
நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு
கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.
பொழிப்புரை :கைகால்கள் தளர்ந்து, விரும்பி
உடலைப் பற்றிய நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு
முன்னமே, திருமால்
பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.
பாடல்
எண் : 10
நிலைவெறுத்த
நெஞ்சமோடு நேசம்இல் புதல்வர்கள்,
முலைவெறுத்த
பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்,
தலைபறித்த
கையர்தேரர் தாம்தரிப்ப அரியவன்
சிலைபிடித்து
எயில்எய்தான் திருந்துகாழி சேர்மினே.
பொழிப்புரை :பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற
முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலா னோர் முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து
வாழும் சமணர், தேரர் ஆகியோர் நினைதற்கும் அரியவனும்,
சிலைபிடித்து
முப்புரம் எரித்தவனும் ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக.
பாடல்
எண் : 11
தக்கனார்
தலையஅரிந்த சங்கரன், தனதுஅரை
அக்கினோடு
அரவுஅசைத்த அந்திவண்ணர், காழியை
ஒக்கஞான
சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்பம்
எய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.
பொழிப்புரை :தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது
இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது
காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள்
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும்.
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 1149
சேண்உயர்ந்த
திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த
ஆதரவின் தலைப்பாடு தனை உன்னி,
நீள்நிலைக்கோ
புரம்அணைந்து, நேர்இறைஞ்சிப் புக்கு அருளி,
வாள்நிலவு
பெருங்கோயில் வலங்கொண்டு முன்பணிந்தார்.
பொழிப்புரை : வானளாவ உயர்ந்து நிற்கும் திருத்தோணியில்
வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை, நினைந்த அன்பின் மேன்மையை எண்ணியவராய், நீண்ட
நிலைகளையுடைய கோபுரத்தை அடைந்து, எதிரில் நிலத்தில் பொருந்த விழுந்து
வணங்கி எழுந்து, உள்ளே புகுந்து, ஒளி விளங்கும் பெருந்திருக்கோயிலை வலமாக
வந்து, வணங்கி
முன்னின்று தொழுதார்.
பெ.
பு. பாடல் எண் : 1150
முன்இறைஞ்சித்
திருவருளின் முழுநோக்கம் பெற்றுஏறி,
பொன்இமயப்
பாவையுடன் புணர்ந்துஇருந்த புராதனரைச்
சென்னிமிசைக்
குவித்தகரம் கொடுவிழுந்து, திளைத்து, எழுந்து,
மன்னுபெரு
வாழ்வுஎய்தி, மனங்களிப்ப வணங்குவார்.
பொழிப்புரை : கோயிலுள் ஞானசம்பந்தர், பிரமபுரீசர்
திருமுன்பு வணங்கி, அவரது திருவருளின் முழுநோக்கமும் பெற்று, திருத்தோணியான
மலையின் மீது ஏறிச் சென்று, பொன்மலை எனும் இமயமலை அரசனின் மகளாரான
திருநிலை நாயகியம்மையாருடன் வீற்றிருந்தருளுகின்ற தோணியப்பரைத் தலைமீது கூப்பிய
கைகளுடன் நிலம் பொருந்த விழுந்து வணங்கித் திளைத்தெழுந்து,
நிலை பெற்ற
வாழ்வையடைந்து, மனம் மகிழ வணங்குபவராய்,
பெ.
பு. பாடல் எண் : 1151
பரவுதிருப்
பதிகங்கள் பலவும்இசை யினில்பாடி,
விரவியகண்
அருவிநீர் வெள்ளத்தில் குளித்துஅருளி,
அரவுஅணிந்தார்
அருள்பெருகப் புறம்புஎய்தி, அன்பருடன்
சிரபுரத்துப்
பெருந்தகையார் தம்திருமா ளிகைசேர்ந்தார்.
பொழிப்புரை : போற்றுகின்ற திருப்பதிகங்கள்
பலவற்றையும் பண்ணுடன் பொருந்தப் பாடி, பொருந்திய கண்ணீர் வெள்ளத்தில் முழுதும்
தோய்ந்தருளி, பாம்பை அணியாய் அணிந்த இறைவரின் திருவருள் பெற்று, வெளியே
வந்து, அன்பர்களுடன்
சீகாழிப் பதியினரான ஞானசம்பந்தர் தம் திருமாளிகையுள் சேர்ந்தார்.
குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகங்கள் எவை எனத்
தெரிந்தில.
பெ.
பு. பாடல் எண் : 1152
மாளிகையின்
உள்அணைந்து , மறையவர்கட்கு அருள்புரிந்து,
தாள்பணியும்
பெருங்கிளைக்குத் தகுதியினால் தலையளிசெய்து,
ஆள்உடைய
தம்பெருமான் அடியவர்கள் உடன்அமர்ந்து,
நீளவரும்
பேரின்பம் மிகப்பெருக நிகழுநாள்.
பொழிப்புரை : சம்பந்தப் பெருமான் தம் மாளிகையுள்
புகுந்து, தம்மைக்
காண வந்த அந்தணர்களுக்கெல்லாம் அருள்விடை தந்து, தம் திருவடிகளை வணங்கி நின்ற பெரிய சுற்றத்தவர்களுக்குத்
தகுதிக்கு ஏற்றவண்ணம் தலையளி செய்து, விடை
தந்து, தம்மை
ஆள்கின்ற இறைவரின் அடியாருடனே விரும்பி எழுந்தருளியிருந்து, நீண்டு
பெருக வரும் பேரின்பமானது மேன்மேலும் பெருகும்படி நிகழ்ந்து வரும் நாள்களில்,
பெ.
பு. பாடல் எண் : 1153
காழிநா
டுஉடையபிரான் கழல்வணங்கி மகிழ்வுஎய்த
ஆழியினும்
மிகப்பெருகும் ஆசையுடன், திருமுருகர்,
வாழிதிரு
நீலநக்கர், முதல் தொண்டர், மற்றுஏனையோர்,
சூழுநெடும்
சுற்றமுடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்.
பொழிப்புரை : சீகாழி நாட்டின் தலைவரான ஞானசம்பந்தரின்
திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி எய்த எண்ணி, கடலை
விடப் பெரிதாகப் பெருகும் ஆசையுடன், திருமுருக நாயனார், வாழ்வு
பெருகும் திருநீலநக்க நாயனார் முதலிய தொண்டர்களும், மற்றவர்களும் தம்மைச் சூழ்ந்த பெரிய
சுற்றத்துடனே வந்து, திருத்தோணிபுரத்தை வணங்கி, பிள்ளையார்பால்
வந்தார்கள்.
பெ.
பு. பாடல் எண் : 1154
வந்தவரை
எதிர்கொண்டு மனமகிழ்ந்து, சண்பையர்கோன்,
அந்தம்இல்சீர்
அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து,
சுந்தர
ஆரணங்கினுடன் தோணியில் வீற் றிருந்தாரைச்
செந்தமிழின்
பந்தத்தால் திருப்பதிகம் பலபாடி.
பொழிப்புரை : அங்ஙனம் வந்தவர்களை எதிரேசென்று அழைத்து, திருவுள்ளம்
மகிழ்ந்து, சீகாழிப் பெருமான், அளவில்லாத சிறப்புக்களை உடைய
அவ்வடியவர்களுடனே இனிதாக விரும்பியிருந்து, அழகின் நிலைக்களமான பெரிய
நாயகியம்மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் தோணியப்பரைச் செந்தமிழ்
யாப்பால் பல பதிகங்களையும் பாடி,
குறிப்புரை : இதுபொழுது அருளிய திருப்பதிகங்கள்:
1. கறையணி வேல் (தி.2
ப.65) - காந்தாரம்.
2. கரமுனம் மலரால் (தி.3
ப.37) - கொல்லி.
3. இறையவன் ஈசன் (
தி.3
ப.56) - பஞ்சமம்.
4. நிலவும் புனலும் (தி.2
ப.17) - இந்தளம்.
5. பூதத்தின் படையினீர் (
தி.2
ப.81) - காந்தாரம்
6. விதியாய் விளைவாய் (தி.1
ப.30) - தக்கராகம்.
7. ஆடல் அரவசைத்தான் (தி.1
ப.104) - வியாழக்குறிஞ்சி.
8. உகலியாழ்கடல் (தி.
2
ப. 25) - இந்தளம்.
9. உருவார்ந்த (தி.2
ப.54) - காந்தாரம்.
10. விடையதேறி (தி.2
ப.122) - செவ்வழி.
11. கண்ணுதலானும் (
தி.3
ப .7) - காந்தாரபஞ்சமம்.
12. காலைநன்மாமலர் (தி.1
ப.75) - குறிஞ்சி.
13. வண்டரங்க (தி.1
ப.60) - பழந்தக்கராகம்.
14. கரும்பமர் (தி.3
ப.100) - பழம்பஞ்சுரம்.
15. செந்நெலங்கழனி (தி.2
ப.1) - இந்தளம்.
16. பந்துசேர்விரலாள் (தி.3
ப.2) - காந்தாரபஞ்சமம்.
17. மின்னன (தி.3
ப.13) - காந்தாரபஞ்சமம்.
18. பல்லடைந்த (தி.1 ப.47) - பழந்தக்கராகம்.
19. வாருறு (தி.1
ப.109) - வியாழக்குறிஞ்சி.
20. எய்யாவென்றி (தி.1
ப.97) - குறிஞ்சி.
21. பங்கமேறு (தி.1
ப.66) - தக்கேசி.
22. அடலேறமரும் (தி.1
ப.34) - தக்கராகம்.
23. நல்லார் தீமேவும் (தி.1 ப.81) - குறிஞ்சி.
24. உரவார்கலை (தி.1
ப.102) - குறிஞ்சி.
25. நல்லானை (தி.2 ப.11) - இந்தளம்.
26. பண்ணின் நேர் (தி.2
ப.49) - சீகாமரம்.
27. நலங்கொள் (தி.2 ப.59) - காந்தாரம்.
28. விண்ணியங்கு (தி.2
ப.75) - காந்தாரம்.
29. பொங்குவெண்புரி (தி.2 ப.96) - பியந்தைக்காந்தாரம்.
30. பொடியிலங்கு (தி.2
ப.113) - செவ்வழி.
31. சந்தமார் (தி.3
ப.43) - கௌசிகம்.
32. நீலநன் (தி.2 ப.83) -
பியந்தைக்காந்தாரம்.
33. அறையும் (தி.2
ப.89) - பியந்தைக்காந்தாரம்.
34. திருந்துமா (தி.3 ப.89) - சாதாரி.
35. அயிலுறு படையினர் (தி.1 ப.79) - குறிஞ்சி.
36. சேவுயரும் (தி.1 ப.129) - மேகராகக்குறிஞ்சி.
37. மடல்மலி (தி.3
ப.118) - புறநீர்மை
38. ஆரூர்
தில்லை (தி.2 ப.39) – இந்தளம்.
39. கல்லால் நீழல் (தி.3
ப.40) - கொல்லி.
திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்
2.065 திருப்பிரமபுரம் பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கறைஅணி
வேல்இலர் போலும், கபாலம் தரித்துஇலர் போலும்,
மறையும்
நவின்றுஇலர் போலும், மாசுணம் ஆர்த்துஇலர் போலும்,
பறையும்
கரத்துஇலர் போலும், பாசம் பிடித்துஇலர் போலும்,
பிறையும்
சடைக்குஇலர் போலும், பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பிரமபுரம் அமர்ந்த பெருமான்
சொரூபநிலையில் எல்லாம் அற்றவராக இருப்பினும், தடத்த நிலையில் கறை பொருந்திய வேலை
உடையவர். கபாலம் தரித்தவர். வேதங்களை அருளியவர். பாம்புகளை இடையில் கட்டியவர்
உடுக்கைப்பறை ஏந்திய கரத்தினர். கயிற்றைக்கையில் பிடித்தவர். பிறையணிந்த
சடைமுடியினர். போலும் என்பதனை வினாப்பொருளதாகக் கொண்டு இங்குக் கூறிய
செய்திகள்யாவும் உறுதிப்படுமாற்றை உணரலாம்.
பாடல்
எண் : 2
கூர்அம்பு
அதுஇலர் போலும், கொக்கின் இறகுஇலர் போலும்,
ஆரமும்
பூண்டுஇலர் போலும் , ஆமை அணிந்துஇலர் போலும்,
தாரும்
சடைக்குஇலர் போலும், சண்டிக்கு அருளிலர் போலும்,
பேரும்
பலஇலர் போலும், பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய
அம்பினை உடையவர். கொக்கின் இறகை அணிந்தவர். ஆரங்கள் பூண்டவர். ஆமையோட்டைத்
தரித்தவர். சடைமுடியில் மாலை அணிந்தவர். சண்டேசுரருக்கு அருள்புரிந்தவர்.
பலபெயர்களை உடையவர்.
பாடல்
எண் : 3
சித்த
வடிவுஇலர் போலும், தேசம் திரிந்துஇலர் போலும்,
கத்தி
வருங்கடும் காளி கதங்கள் தவிர்த்துஇலர் போலும்,
மெய்த்த
நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்துஇலர் போலும்,
பித்த
வடிவுஇலர் போலும், பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பிரமபுரம் அமர்ந்த பெருமான், சித்தர்
வடிவம் போன்ற உருவினர், பலதேசங்களுக்கும் சென்று திரிந்தவர், சத்தமிட்டு
வந்த காளியின் கோபாவேசத்தைத் தவிர்த்தவர், தன் உடம்பிலுள்ள கண்களில் ஒன்றைப்
பெயர்த்தணிவித்த திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். பித்தர் வடிவம் போன்ற
வடிவினர்.
பாடல்
எண் : 4
நச்சுஅரவு
ஆட்டிலர் போலும், நஞ்சம் மிடற்றுஇலர் போலும்,
கச்சுத்
தரித்துஇலர் போலும், கங்கை தரித்துஇலர் போலும்,
மொய்ச்சவன்
பேய்இலர் போலும், முப்புரம் எய்திலர் போலும்,
பிச்சை
இரந்துஇலர் போலும், பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சினை
உடைய பாம்பைப் பிடித்து ஆடச்செய்பவர். நஞ்சினை மிடற்றில் உடையவர். பாம்பைக் கச்சாக
அணிந்தவர். கங்கையை முடியில் தரித்தவர். சூழ்ந்துள்ள வலியபேய்க் கணங்களை உடையவர்.
முப்புரங்களை எய்து எரித்தவர். பிச்சை இரப்பவர்.
பாடல்
எண் : 5
தோடு
செவிக்குஇலர் போலும், சூலம் பிடித்துஇலர் போலும்,
ஆடு
தடக்கை வலிய யானை உரித்துஇலர் போலும்,
ஓடு
கரத்துஇலர் போலும், ஒள்அழல் கைஇலர் போலும்,
பீடு
மிகுத்துஎழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பீடுமிகுந்த செல்வப் பிரமபுரம் அமர்ந்த
பெருமான் ஒருசெவியில் தோடணிந்தவர். கையில்சூலம் பிடித்தவர். அசைகின்ற நீண்ட கையை
உடைய யானையை உரித்தவர். தலையோட்டைக் கையில் ஏந்தியவர். ஒளிபொருந்திய அழலைக் கையில்
உடையவர்.
பாடல்
எண் : 6
விண்ணவர்
கண்டுஇலர் போலும், வேள்வி அழித்திலர் போலும்,
அண்ணல்
அயன்தலை வீழ அன்றும் அறுத்துஇலர் போலும்,
வண்ண
எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்துஇலர் போலும்,
பெண்இனம்
மொய்த்துஎழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :மகளிர் கூட்டம் சூழ்ந்து போற்றும் பிரமபுரம்
அமர்ந்த பெருமான், தேவர்களால் அறியப்பெறாதவர். தக்கன்
செய்த வேள்வியை அழித்தவர். தலைமைத் தன்மையுடைய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவர்.
அழகிய எலும்புகளோடு உருத்திராக்க வடங்கள் தரித்தவர்.
பாடல்
எண் : 7
பன்றியின்
கொம்புஇலர் போலும், பார்த்தற்கு அருள்இலர் போலும்,
கன்றிய
காலனை வீழக் கால்கொடு பாய்ந்துஇலர் போலும்,
துன்று
பிணம்சுடு காட்டில் ஆடித் துதைந்துஇலர் போலும்,
பின்றியும்
பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பிற்காலத்தும் பெருமைகள் பெருகும்
பிரமபுரம் அமர்ந்த பெருமான், பன்றியின் கொம்பைத் தரித்தவர்.
பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர். சினந்துவந்த காலன் வீழுமாறு
கால்கொடு பாய்ந்தவர். பிணங்கள் செறிந்த சுடுகாட்டில் ஆடித் திளைப்பவர்.
பாடல்
எண் : 8
பரசு
தரித்துஇலர் போலும், படுதலை பூண்டுஇலர் போலும்,
அரசன்
இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்,
புரைசெய்
புனத்துஇள மானும் புலியின் அதள்இலர் போலும்,
பிரச
மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :தேன் பொருந்திய மலர்கள் செறிந்த பொழில்
சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்த பெருமான், கையில் மழுவைத் தரித்தவர். வீழ்ந்து
பட்ட பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவர். இலங்கையர் தலைவனாக விளங்கிய இராவணனை
அக்காலத்தே அடர்த்தவர். பரண் அமைத்துக் காக்கும் புனத்தில் வரும் இளமான் புலி
ஆகியவற்றின் தோல்களை உடுத்தவர்.
பாடல்
எண் : 9
அடிமுடி
மால்அயன் தேட அன்றும் அளப்புஇலர் போலும்,
கடிமலர்
ஐங்கணை வேளைக் கனல விழித்துஇலர் போலும்,
படிமலர்ப்
பாலனுக் காகப் பால்கடல் ஈந்துஇலர் போலும்,
பிடிநடை
மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பெண்யானை போன்ற நடையினை உடைய மாதர்கள்
பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் பிரமர்கள் அடிமுடிதேடி
அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட
மன்மதன் எரியுமாறு விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற
மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர்.
பாடல்
எண் : 10
வெற்றுஅரைச்
சீவரத் தார்க்கு வெளிப்பட நின்று இலர் போலும்,
அற்றவர்
ஆல்நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும்,
உற்றவர்
ஒன்றுஇலர் போலும், ஓடு முடிக்குஇலர் போலும்,
பெற்றமும்
ஊர்ந்துஇலர் போலும், பிரம புரம்அமர்ந் தாரே.
பொழிப்புரை :பிரமபுரம் அமர்ந்த பெருமான், வெற்றுடலோடும், சீவரம்
அணிந்தும் திரியும் சமண புத்தர்கட்குப் புலனாகாதவர். ஆல் நிழற்
கீழ்ப்பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர் நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும்
சார்ந்து நில்லாதவர். ஒன்றுமில்லாதாரைப் போலத்தோன்றுபவர். தலையோட்டை முடியில்
தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர்.
பாடல்
எண் : 11
பெண்உரு
ஆண்உரு அல்லாப் பிரம புரநகர் மேய
அண்ணல்செய்
யாதன எல்லாம், அறிந்து வகைவகை யாலே,
நண்ணிய
ஞானசம் பந்தன் நவின்றன பத்தும்வல் லார்கள்,
விண்ணவ
ரோடுஇனி தாக வீற்றுஇருப் பார்அவர் தாமே.
பொழிப்புரை :பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத
(மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை உடைய சிவபிரான் செய்யாத
செயல்களைச் செய்தனபோலக் கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய
ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு
இனிதாக வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
3. 037
திருப்பிரமபுரம் பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கரம்முனம்மல
ரால்புனல்மலர் தூவியே கலந்து ஏத்துமின்,
பரமன்ஊர்பல
பேரினால்பொலி பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரம்உன்னவ்வருள்
செய்யவல்லஎம் ஐயன் நாள்தொறும் மேயசீர்ப்
பிரமனூர்பிர
மாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே.
பொழிப்புரை :யாவர்க்கும் மேலான பொருளான சிவபெருமானது
ஊரும் பல திருப்பெயர்களை உடையது . பக்தர்களும் , சித்தர்களும் போற்றி வணங்க , அவர்கள்
வேண்டும் வரங்களை நல்கி அருள் செய்ய வல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி
வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள
பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து , மலர்களைத்
தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக .
பாடல்
எண் : 2
விண்ணில்ஆர்மதி
சூடினான் விரும்பும் மறையவன் தன்தலை
உண்ணநன்பலி
பேணினான்உ,லகத்துள் ஊன்உயி ரான், மலைப்
பெண்ணின்ஆர்திரு
மேனியான், பிரமாபுரத்துஉறை கோயிலுள்
அண்ணலார்
அருளாளன்ஆய்அமர்கின்றஎம்முடை ஆதியே.
பொழிப்புரை :இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச்
சடையில் சூடியவர் . விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை
உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர் . உலகத்து உயிர்கட்கு உடம்பும் , உயிருமானவர்
. மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும் , திருப்பிரமபுரத்துறைகின்ற
கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே
ஆதிப்பிரான் ஆவார் .
பாடல்
எண் : 3
எல்லையில்புக
ழாளனும், இமை யோர்கணத்துடன் கூடியும்,
பல்லைஆர்தலை
யில்பலியது கொண்டு உகந்த படிறனும்,
தொல்லைவையகத்து
ஏறுதொண்டர்கள் தூமலர்சொரிந்து ஏத்தவே,
மல்லைஅம்பொழில்
தேன்பில்கும்பிரமாபுரத்து உறை மைந்தனே.
பொழிப்புரை :இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர் .
தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர் . பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில்
பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர் . அவர் பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து
ஏறிய தெளிந்த அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட , வளம்
மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில்
வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே யாவார் .
பாடல்
எண் : 4
அடையலார்புரம்
சீறி, அந்தணர் ஏத்த,மாமட மாதொடும்
பெடைஎலாம்கடல்
கானல்புல்கும்பிர மாபுரத்துஉறை கோயிலான்,
தொடையல்ஆர்நறுங்
கொன்றையான், தொழிலேபரவிநின்று ஏத்தினால்,
இடைஇலார்சிவ
லோகம் எய்துதற்கு ஈதுகாரணம் காண்மினே.
பொழிப்புரை :பகையசுரர்களின் மூன்று புரங்களையும்
கோபித்து அழித்து , அந்தணர்கள் போற்றி வணங்க , உமாதேவியோடு
, பெண்
பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய
திருப்பிரமாபுரத்தில் கோயில் கொண்டருளியவன் சிவபெருமான் . இடையீடில்லாதவர்களாய்ச்
சிவலோகம் சென்று அடைவதற்கு , நறுங்கொன்றை மலர்களை மாலையாக அணிந்த
சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச் செய்து , அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும்
நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக .
பாடல்
எண் : 5
வாய்இடைம்மறை
ஓதி,மங்கையர் வந்துஇடப்பலி கொண்டுபோய்,
போய்இடம்எரி
கான்இடைப்புரி நாடகம் இனிது ஆடினான்,
பேயொடும்குடி
வாழ்வினான், பிர மாபுரத்துஉறை பிஞ்ஞகன்,
தாய்இடைப்பொருள்
தந்தைஆகும்என்று ஓதுவார்க்கு அருள்தன்மையே.
பொழிப்புரை :இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச்
செய்தவன் . தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரமகபாலத்தில்
பலிஏற்று , சுடுகாட்டையே அரங்கமாக் கொண்டு நடனம் ஆடுபவன் . பேய்க்
கணங்களுடன் கூடி வாழ்பவன் . திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற
பிஞ்ஞகனாகச் சிவபெருமானே , பெற்ற தாயும், தந்தையும், மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய்
விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன் .
பாடல்
எண் : 6
ஊடினால்இனி
ஆவதுஎன், உயர் நெஞ்சமே,உறு வல்வினைக்கு
ஓடிநீஉழல்
கின்றது என், அழல் அன்றுதன்கையில் ஏந்தினான்,
பீடுநேர்ந்தது
கொள்கையான், பிர மாபுரத்துஉறை வேதியன்,
ஏடுநேர்மதி
யோடுஅராஅணி எந்தை என்றுநின்று ஏத்திடே.
பொழிப்புரை :உயர் நெஞ்சமே ! என் சொல்வழி நில்லாது
பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன ? வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி
உழல்வது தான் என்ன? பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில்
நெருப்பேந்தியவன் சிவ பெருமான் . தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை
வழங்கும் தன்மையன் . திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச்
செய்தவனும் , மலரை ஒத்த பிறைச் சந்திரனையும் , பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை
எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக .
பாடல்
எண் : 7
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும்ஏத்தி
நினைந்திட,
ஐயன், ஆண்தகை, அந்தணன், அரு மாமறைப்பொருள்
ஆயினான்,
பெய்யும்
மாமழை ஆனவன், பிர மாபுரம்இடம் பேணிய
வெய்யவெண்மழு
ஏந்தியைந் நினைந்து ஏத்துமின், வினை வீடவே.
பொழிப்புரை :இறைவன் சிவந்த திருமேனியுடையவன் . வெள்ளிமலை
எனப்படும் கயிலைக்கு நாயகன் . சிவஞானம் பெற்ற பெருமக்களால் எக்காலத்திலும்
போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன் . அளவில்லா ஆற்றலும் , எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன்
. அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன் . பெய்யும் மழைபோன்றவன் .
திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள்
வினைகள் நீங்க வழிபடுவீர்களாக !
பாடல்
எண் : 8
கன்றுஒருக்கையில்
ஏந்திநல்விள வின்கனிபட நூறியும்,
சென்றுஒருக்கிய
மாமறைப்பொருள் தேர்ந்தசெம்மல ரோனும்ஆய்,
அன்றுஅரக்கனைச்
செற்றவன் அடியும்முடி அவை காண்கிலார்,
பின்தருக்கிய
தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே.
பொழிப்புரை :ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி
விளமரத்தின் கனியை அழித்த திருமாலும் , தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு
கற்ற பிரமனும் , அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ்
நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும் , திருமுடியையும் தேடியும் காணாதவராயினர்
. அப்பெருமான் அருள் தன்மையும் , ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த
சோலைகளையுடைய திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான் .
பாடல்
எண் : 9
உண்டு
உடுக்கைவிட் டார்களும்,உயர் கஞ்சிமண்டைகொள் தேரரும்,
பண்டுஅடக்கு
சொல்பேசும், அப்பரிவு ஒன்று இலார்கள்சொல் கொள்ளன்மின்,
தண்டொடு அக்கு, வன்
சூலமும், தழல் மாமழுப்படை தன்கையில்
கொண்டு, ஒடுக்கிய
மைந்தன்எம்பிர மாபுரத்துஉறை கூத்தனே.
பொழிப்புரை :உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும் , மண்டை
என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும் மக்களிடம்
பரிவில்லாதவர்கள் . உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப்
பழித்துப் பேசுபவர் . அவர்கள் சொற்களைக் கொள்ள வேண்டா . வீணை , அக்குமாலை
, சூலம்
, நெருப்பு
, பெரிய
மழுப்படை இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகம் அனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமை
உடையவன் எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான் .
அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக !
பாடல்
எண் : 10
பித்தனை, பிர
மாபுரத்துஉறை பிஞ்ஞகன்கழல் பேணியே,
மெய்த்தவத்துநின்
றோர்களுக்குஉரை செய்துநன்பொருள் மேவிட,
வைத்தசிந்தையுள்
ஞானசம்பந்தன் வாய்நவின்றுஎழு மாலைகள்,
பொய்த்தவம்பொறி
நீங்கஇன்னிசை போற்றிசெய்யும் மெய்ம்மாந்தரே.
பொழிப்புரை :பித்தனும் , திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும்
ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு
உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில் , ஞானசம்பந்தன்
திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும்
புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
3. 056
திருப்பிரமபுரம் பண்
- பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
இறையவன்
ஈசன்எந்தை, இமை யோர்தொழுது ஏத்தநின்ற
கறைஅணி
கண்டன்,வெண்தோடு அணி காதினன், காலத்துஅன்று
மறைமொழி
வாய்மையினான், மலை யாளொடு மன்னுசென்னிப்
பிறைஅணி
செஞ்சடையான், பிர மாபுரம் பேணுமினே.
பொழிப்புரை : இறைவன் , ஈசன் , எம் தந்தை என்று வானவர்கள் தொழுது போற்ற
நின்று , நஞ்சுண்ட
கறுத்த கண்டத்தினன். சங்கினாலாகிய குழையணிந்த காதினையுடையவன். அக்காலத்தில்
வேதத்தின் பொருளை உபதேசித்தருளியவன் . மலைமகளான உமாதேவியோடு தலையில்
பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !
பாடல்
எண் : 2
சடையினன், சாமவேதன், சரி
கோவணவன், மழுவாள்
படையினன்
பாய்புலித்தோல் உடை யான்,மறை பல்கலைநூல்
உடையவன், ஊனம்இல்லி, உட
னாய்உமை நங்கை என்னும்
பெடையொடும்
பேணும்இடம் பிர மாபுரம் பேணுமினே.
பொழிப்புரை : இறைவன் சடைமுடியுடையவன் . சாமவேதத்தில்
விருப்பமுடையவன் . சரிந்த கோவண ஆடையை அணிந்தவன் . மழுவாகிய படை உடையவன் . பாயும்
புலியின் தோலை உடையவன் . வேதம் முதலான பல கலைநூல்களில் கூறப்படும் தலைவன் .
எத்தகைய குறைபாடும் இல்லாத அவன் , உமாதேவியோடு விரும்பி
வீற்றிருந்தருளுமிடமான திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக !
பாடல்
எண் : 3
மாணியை
நாடுகாலன் உயிர் மாய்தரச் செற்றுக்காளி
காணிய
ஆடல்கொண்டான், கலந்து ஊர்வழி சென்றுபிச்சை
ஊண்இயல்
பாகக்கொண்டுஅங்கு உடனே உமை நங்கையொடும்
பேணிய
கோயில்மன்னும் பிர மாபுரம் பேணுமினே.
பொழிப்புரை : இறைவன் பிரமசாரியான மார்க்கண்டேயரின்
உயிரைக் கவரவந்த காலனின் உயிரை மாய்த்தவன் . காளிதேவி காணுமாறு திருநடனம்
புரிந்தவன் . பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சையேற்று உண்ணுதலை
இயல்பாகக் கொண்டவன் . அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலாக
நிலைபெற்றுள்ள திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக .
பாடல்
எண் : 4
பாரிடம்
விண்ணும்எங்கும் பயில் நஞ்சு பரந்துமிண்டப்
பேர்இடர்த்
தேவர்கணம் "பெரு மான்இது கா" எனலும்,
ஓர்இடத்
தே கரந்துஅங்கு உமை நங்கையொ டும்உடனே
பேர்இட
மாகக்கொண்ட பிர மாபுரம் பேணுமினே.
பொழிப்புரை : நிலவுலகிலும், விண்ணுலகிலும் எங்கும் பயின்ற விடமானது
பரவிப் பெருக, அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட தேவர்கள் அனைவரும், `பெருமானே!
காப்பாற்றுவீர்களாக` என்று பிரார்த்திக்க, அவ்விடத்தைக்
கண்டத்தில் கரந்து அருள்புரிந்த அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற
பெருமை மிகுந்த திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக.
பாடல்
எண் : 5
நச்சுஅர
வச்சடைமேல் நளிர் திங்களும் ஒன்றவைத்துஅங்கு
அச்சம்
எழவிடைமேல் அழ கார்மழு ஏந்திநல்ல
இச்சை
பகர்ந்துமிக இடு மின்பலி என்றுநாளும்
பிச்சைகொள்
அண்ணல் நண்ணும் பிர மாபுரம் பேணுமினே.
பொழிப்புரை : இறைவன் விடம் பொருந்திய பாம்பைச் சடை
முடியில் தரித்து , குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும்
அதனுடன் ஒன்றி இருக்குமாறு செய்தவன் . அழகிய இடபவாகனத்தின் மீது அமர்ந்து அச்சம்
தரும் மழுப்படையை ஏந்தியவன் . இன்மொழிகள் பேசி ` மிக இடுங்கள் `
என்று நாள்தோறும்
பிச்சை ஏற்கும் தலைவனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும்
திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !
பாடல்
எண் : 6
பெற்றவன்
முப்புரங்கள் பிழை யாவண்ணம் வாளியினால்
செற்றவன்
செஞ்சடையில் திகழ் கங்கை தனைத்தரித்திட்டு
ஒற்றை
விடையினனாய் உமை நங்கையொ டும் உடனே
பெற்றிமை
யால்இருந்தான் பிர மாபுரம் பேணுமினே.
பொழிப்புரை : இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால்
பெற்ற வலிய மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால் அழித்தவன் . சிவந்த சடையில்
அழகிய கங்கையைத் தரித்தவன் . ஒற்றை இடபவாகனம் ஏறினவன் . உமாதேவியோடு அவன்
வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக !
பாடல்
எண் : 7
வேதம்
மலிந்தஒலி விழ வின்ஒலி வீணைஒலி
கீதம்
மலிந்துஉடனே கிள ரத்திகழ் பௌவம்அறை
ஓதம்
மலிந்துஉயர்வான் முகடு ஏறஒண் மால்வரையான்
பேதையொ
டும் இருந்தான் பிர மாபுரம் பேணுமினே.
பொழிப்புரை : வேதங்களை ஓதுகின்ற ஒலி , வீணையின்
இன்னொலி , கீதஒலி
இவை ஒருசேர எழுந்த கடல்ஒசையை அடக்குமாறு , வானத்தின் உச்சியை அடைவதாய் உள்ள , ஒளி
பொருந்திய பெரிய கயிலைமலையானாகிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .
பாடல்
எண் : 8
இமையவர்
அஞ்சிஓட எதிர் வார்அவர் தம்மைஇன்றி
அமைதரு
வல்அரக்கன் அடர்த் தும்மலை அன்றுஎடுப்பக்
குமையது
செய்துபாடக் கொற்ற வாளொடு நாள்கொடுத்திட்டு
உமையொடு
இருந்தபிரான் பிர மாபுரம் உன்னுமினே.
பொழிப்புரை : தேவர்கள் அஞ்சியோடத் தன்னை எதிர்ப்பவர்
யாருமில்லாது அமைந்த வல்லசுரனாகிய இராவணன் பண்டைக் காலத்தில் கயிலையைப் பெயர்த்து
எடுக்க , சிவபெருமான்
தன் காற்பெருவிரலை ஊன்றி அவன் அம்மலைக்கீழ் நசுங்கும்படி துன்பம் செய்து , பின்
அவன் தவறுணர்ந்து சாமகானம் பாடித் துதிக்க , அவனுக்கு வெற்றிதரும் வாளொடு , நீண்ட
வாழ்நாளும் கொடுத்து அருள்செய்து , உமாதேவியாரோடு வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
பாடல்
எண் : 9
ஞாலம்
அளித்தவனும் அரி யும்அடி யோடுமுடி
காலம்
பலசெலவும் கண்டி லாமையி னால்கதறி
ஓலம்
இடஅருளி உமை நங்கையொ டும் உடனாய்
ஏல
இருந்தபிரான் பிர மாபுரம் ஏத்துமினே.
பொழிப்புரை : இப்பூவுலகைப் படைத்த பிரமனும் , திருமாலும்
, பலகாலம்
இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து காண முடியாது கதறி ஓலமிட அவர்கட்கு
அருள்புரிந்த அச்சிவ பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .
பாடல்
எண் : 10
துவர்உறும்
ஆடையினார் தொக்க பீலியர் நக்கரையர்
அவர்வர்
தன்மைகள்கண்டு அணு கேன்மின், அருள்பெறுவீர்
கவர்உறு
சிந்தைஒன்றிக் கழி காலம்எல் லாம்படைத்த
இவர்அவர்
என்று இறைஞ்சிப் பிர மாபுரம் ஏத்துமினே.
பொழிப்புரை : மஞ்சட்காவி ஊட்டப்பட்ட ஆடையணிந்த
புத்தர்களும் , தொகுத்துக் கட்டிய மயிற்பீலியைக் கையிலேந்தியவராய் , ஆடையில்லாத
இடையையுடைய சமணர்களும் , இறையுண்மையை அறியாதவர்களாதலால் அவர்களை
அணுகாதீர் . திருவருள் பெற விரும்பும் அடியார்களே ! ஐயம் பல நிறைந்த மனத்தை
ஒருமுகப்படுத்தி , சென்ற காலம் முதலிய எல்லாக் காலத்தையும்
படைத்த முழுமுதற்கடவுள் சிவபெருமான் என்று வணங்கி , அப்பெருமான் வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
பாடல்
எண் : 11
உரைதரு
நான்மறையோர் புகழ்ந்து ஏத்தஒண் மாதினொடும்
வரைஎன
வீற்றுஇருந்தான் மலி கின்ற பிரமபுரத்து
அரசினை
ஏத்தவல்ல அணி சம்பந்தன் பத்தும்வல்லார்
விரைதரு
விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே.
பொழிப்புரை : சிவபெருமானது பெருமையை உரைக்கும் நான்கு
வேதங்களையும் பயின்றவர்கள் அப்பெருமானைப் புகழ்ந்து போற்ற , அழகிய
உமாதேவியோடு மலைபோன்று உறுதிப் பொருளாக விளங்கும் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற பிரமாபுரத்தில் அருளாட்சியைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களை நறுமணம் கமழும் விண்ணுலகத்துத் தேவர்கள்
எதிர்கொண்டழைத்துச் செல்ல விரும்புவர் .
திருச்சிற்றம்பலம்
2.017 திருவேணுபுரம் பண்
- இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நிலவும்
புனலும் நிறைவாள் அரவும்
இலகும்
சடையார்க்கு இடமாம், எழில்ஆர்
உலவும்
வயலுக்கு ஒளிஆர் முத்தம்
விலகுங்
கடல்ஆர் வேணு புரமே.
பொழிப்புரை :பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன விளங்கும்
சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர் உலாவுவதும், ஒளிபொருந்திய
முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான
வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 2
அரவுஆர்
கரவன், அமைஆர் திரள்தோள்
குரவுஆர்
குழலாள் ஒருகூ றன்இடம்,
கரவாத
கொடைக் கலந்தார் அவர்க்கு
விரவு
ஆக வல்லார் வேணு புரமே.
பொழிப்புரை :பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில்
போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒருகூறாக
உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம், மறையாதகொடையாளரும், தம்மோடு
பழகியவர்களை நட்புக்கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 3
ஆகம்
அழகா யவள்தான் வெருவ
நாகம்
உரிபோர்த் தவன்நண் ணுமிடம்
போகம்
தருசீர் வயல்சூழ் பொழில்கண்
மேகம்
தவழும் வேணு புரமே.
பொழிப்புரை :அழகிய மேனியை உடைய உமையம்மை வெருவுமாறு
யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் உறையும் இடம், மக்கட்கு விளைபொருள்களாகிய பயனைத்தரும்
வயல்கள் சூழ்ந்துள்ள உயரிய பொழில்களில் மேகங்கள் தவழும் வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 4
காசுஅக்
கடலில் விடம்உண் டகண்டத்து
ஈசர்க்கு
இடமா வதுஇன் நறவ
வாசக்
கமலத் தனம்வன் திரைகள்
வீசத்
துயிலும் வேணு புரமே.
பொழிப்புரை :முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில்
எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய ஈசனுக்கு இடமாவது; இனிய தேன் நிறைந்ததும் மணம்
நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம் அலைகள் காற்று வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த
வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 5
அரையார்
கலைசேர் அனமெல் நடையை
உரையா
உகந்தான் உறையும் இடமாம்
நிரையார்
கமுகின் னிகழ்பா ளையுடை
விரையார்
பொழில்சூழ் வேணு புரமே.
பொழிப்புரை :இடையில் மேகலை அணிந்தவளும், அன்னம்
போன்ற நடையினளும் ஆகிய உமையம்மையைப் புகழ்ந்து உரைத்து, சிவபிரான் மகிழ்வுடன் உறையும் இடம், வரிசையாக
வளர்ந்துள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள்
சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 6
ஒளிரும்
பிறையும் உறுகூ விளவின்
தளிரும்
சடைமேல் உடையான் இடமாம்
நளிரும்
புனலின் நலசெங் கயல்கள்
மிளிரும்
வயல்சூழ் வேணு புரமே.
பொழிப்புரை :ஒளிதரும் பிறையையும், வில்வத்
தளிர்களையும் சடைமிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம்,
குளிர்ந்த நீரில்
நல்ல செங்கயல்மீன்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 7
* * * * * * *
பாடல்
எண் : 8
ஏவும்
படைவேந் தன்இரா வணனை
ஆஎன்று
அலற அடர்த்தான் இடமாம்
தாவும்
மறிமா னொடுதண் மதியம்
மேவும்
பொழில்சூழ் வேணு புரமே.
பொழிப்புரை :இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடு
கூடிய விற்படையை உடைய இராவணனை `ஆ\' என்று அலறுமாறு அடர்த்தருளிய
சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த
பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 9
கண்ணன்
கடிமா மலரில் திகழும்
அண்ணல்
இருவர் அறியா இறை ஊர்
வண்ணச்
சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணில்
திகழும் வேணு புரமே.
பொழிப்புரை :திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில்
உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற இறைவனது இடம், அழகிய
சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல் கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம்
ஆகும்.
பாடல்
எண் : 10
போகம்
அறியார் துவர்போர்த்து உழல்வார்
ஆகம்
அறியா அடியார் இறை ஊர்
மூகம்
அறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம்
அறிவார் வேணு புரமே.
பொழிப்புரை :சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை
போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும் பாராத
சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின் சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும்
முத்தமிழ் நூல்களையும் கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.
பாடல்
எண் : 11
கலம்ஆர்
கடல்போல் வளமார் தருநல்
புலம்ஆர்
தருவே ணுபுரத்து இறையை,
நலம்ஆர்
தருஞா னசம்பந் தன்சொன்ன
குலம்ஆர்
தமிழ்கூ றுவர் கூர் மையரே.
பொழிப்புரை :மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய வளங்களை உடையதும், நன்செய்நிலங்கள் நிறைந்ததும் ஆகிய
வேணுபுரத்து இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச்
சொன்ன மேன்மைமிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம் புரிவோர் மதிநுட்பமும்
திருவருட்பெருக்கமும் உடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
2.081 திருவேணுபுரம் பண்- காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பூதத்தின்
படையினீர், பூங்கொன்றைத் தாரினீர்,
ஒதத்தின்
ஒலியொடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின்
இசைபாடி விரைமலர்கள் சொரிந்துஏத்தும்
பாதத்தீர், வேணுபுரம்
பதியாகக் கொண்டீரே.
பொழிப்புரை :பூதப்படைகளை உடையவரே! கொன்றை மலர் மாலை
அணிந்தவரே! கடல் ஒலியோடு உம்பரும் வானவரும் வந்து வேதகீதம் பாடி மணம் பொருந்திய
மலர்களைத் தூவி வழிபடும் திருவடிகளை உடையவரே! நீர் வேணுபுரத்தைப் பதியாகக்
கொண்டுள்ளீர்.
பாடல்
எண் : 2
சுடுகாடு
மேவினீர், துன்னம்பெய் கோவணம்தோல்
உடைஆடை
அதுகொண்டீர், உமையாளை ஒருபாகம்
அடையாளம்
அதுகொண்டீர், அங்கையினில் பரசுஎனும்
படை
ஆள்வீர், வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
பொழிப்புரை :சுடுகாட்டில் எழுந்தருளியிருப்பவரே, நைந்த
கோவணத்துடன் புலித்தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டவரே, அருள் வழங்கும் அடையாளமாக உமையம்மையை
ஒருபாகமாகக் கொண்டவரே, அழகிய கையில் மழுப்படையை உடையவரே, நீர்
வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.
பாடல்
எண் : 3
கங்கைசேர்
சடைமுடியீர், காலனைமுன் செற்றுஉகந்தீர்,
திங்களோடு
இளஅரவம் திகழ்சென்னி வைத்துஉகந்தீர்,
மங்கைஓர்
கூறுஉடையீர், மறையோர்கள் நிறைந்து ஏத்தப்
பங்கயம்சேர்
வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
பொழிப்புரை :கங்கையணிந்த சடைமுடியை உடையவரே காலனைச்
செற்றுப்பின் உகந்து அருள் செய்தவரே, திங்களையும் பாம்பையும் பகை
நீக்கித்திகழும் முடிமீது வைத்து மகிழ்பவரே, உமையம்மையை ஒருகூறாக உடையவரே, நீர்
மறைவல்ல அந்தணர்கள் நிறைந்து ஏத்தத் தாமரை பூத்ததடாகங்களும் வயல்களும் சூழ்ந்த
வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.
பாடல்
எண் : 4
நீர்கொண்ட
சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட
கொன்றையினோடு எழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட
மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்துஉரைப்பக்
கார்கொண்ட
வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.
பொழிப்புரை :கங்கையணிந்த சடைமுடிமேல் இருமுனையாக
நீண்ட பிறை, பாம்பு, அழகிய கொன்றை மலர், எழிலுடைய
ஊமத்தை மலர் ஆகியன இலங்க, நீர் அணிகலன் புனைந்த மகளிர்
மாளிகைகளின்மேல் ஏறி வாழ்த்த மேகம் தவழும் மூங்கிலைத் தலமரமாகக் கொண்ட
வேணுபுரத்தைப் பதியாகக்கொண்டு எழுந்தருளியுள்ளீர்.
பாடல்
எண் : 5
ஆலைசேர்
தண்கழனி அழகாக நறவுஉண்டு
சோலைசேர்
வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே
புகுந்துஇறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ்
வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
பொழிப்புரை :கரும்பாலைகளைக் கொண்ட தண்ணிய கழனிகளை
உடையதும், சோலைகளில்
வண்டுகள் தேனுண்டு இசைபாடி மகிழ்விப்பதும், காலை நேரங்களில் இனிய மொழிகள்
பேசுமகளிர் ஆலயம் வந்து கைகூப்பித்தொழ, பாலையாழ் ஒலிக்கும் சிறப்பினதுமாகிய
வேணுபுரத்தை நீர் உமையம்மையோடு கூடிய திருமேனியராய் எழுந்தருளும் பதியாகக்
கொண்டுள்ளீர்.
பாடல்
எண் : 6
மணிமல்கு
மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்துஇருந்தீர்,
துணிமல்கு
கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுஉகந்தீர்,
பணிமல்கு
மறையோர்கள் பரிந்துஇறைஞ்ச, வேணுபுரத்து
அணிமல்கு
கோயிலே கோயில்ஆக அமர்ந்தீரே.
பொழிப்புரை :மணிகள் பதித்த பெரிய திருத்தோணிமலை மீது
உமையம்மையாரோடு மகிழ்ந்து உறைபவரே, கிழித்த கோவண ஆடையை உடுத்தவரே, சுடுகாட்டில்
ஆடுவதை மகிழ்வாகக் கொள்பவரே, நீர் தொண்டில் விருப்புடைய அந்தணர்கள்
அன்புடன் வணங்க வேணுபுரத்தில் விளங்கும் தண்மை மிக்க கோயிலே நுமக்குரிய கோயில்
எனக்கொண்டு அமர்ந்துள்ளீர்.
பாடல்
எண் : 7
நீலம்சேர்
மிடற்றினீர், நீண்டசெஞ் சடையினீர்,
கோலஞ்சேர்
விடையினீர், கொடுங்காலன் தனைச்செற்றீர்,
ஆலஞ்சேர்
கழனி ஆழகார்வேணு புரம்அமரும்
கோலம்சேர்
கோயிலே கோயில்ஆக் கொண்டீரே.
பொழிப்புரை :நீல நிறம் சேர்ந்த கண்டத்தை உடையவரே, நீண்டு
சிவந்துள்ள சடைகளைக் கொண்டவரே, அழகிய விடையூர்தியை உடையவரே, கொடிய
காலனை அழித்தவரே, நீர், தண்ணீர் நிரம்பிய கழனிகளை உடைய அழகிய
வேணுபுரத்தில் உள்ள வேலைப்பாடுகளால் விளங்கித் தோன்றும் கோயிலையே நுமக்குரிய
கோயில் எனக்கொண்டு அமர்ந்துள்ளீர்.
பாடல்
எண் : 8
இரைமண்டிச்
சங்குஏறும் கடல்சூழ்தென் இலங்கையர்கோன்
விரைமண்டு
முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னில்,
கரைமண்டிப்
பேர்ஓதம் கலந்துஎற்றுங் கடல்கவின்ஆர்
விரைமண்டு
வேணுபுர மேஅமர்ந்து மிக்கீரே.
பொழிப்புரை :சங்குகள் இரைகளை மிகுதியாக உண்டு
கரைகளில் ஏறி இளைப்பாறும், கடலால் சூழப்பட்ட தென்திசையிலுள்ள
இலங்கையர் மன்னனாகிய இராவணனின் மணம் மிக்க முடிகள் பத்தும் நெரியுமாறு
கயிலைமலையின் கீழ் அகப்படுத்திக் கால் விரலை ஊன்றி அடர்த்தவரே, நீர்
ஓதம் பெருகி கரையை அலைக்கும் கடலை அடுத்துள்ள அழகிய மணம்மிக்க வேணுபுரத்தையே
நுமக்குரிய பதியாகக்கொண்டு அமர்ந்து பெருமையால் சிறந்து விளங்குகின்றீர்.
பாடல்
எண் : 9
தீஓம்பு
மறைவாணர்க்கு ஆதியாம் திசைமுகன்மால்
போய்ஓங்கி
இழிந்தாரும் போற்றஅரிய திருவடியீர்,
பாய்ஓங்கு
மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேய்ஓங்கு
வேணுபுரம் செழும்பதியாத் திகழ்ந்தீரே.
பொழிப்புரை :முத்தீயோம்பும் அந்தணர்கட்கு
முதல்வனாகிய பிரமன், திருமால் ஆகியோர் வானில்பறந்தும், நிலத்தை
அகழ்ந்தும் காணுதற்கு அரிய திருமுடி திருவடிகளை உடையவரே!,
நீர், அலைகளால்
மோதப்பெறும் பாய்மரக்கலங்களைக் கொண்ட கடலை அடுத்துள்ளதும் நீண்டு வளர்ந்த
மூங்கிலைத்தலமரமாகக் கொண்டுள்ளதுமாகிய வேணுபுரத்தையே நுமக்குரிய வளமையான பதியாகக்
கொண்டு விளங்குகின்றீர்.
பாடல்
எண் : 10
நிலைஆர்ந்த
உண்டியினர் நெடும்குண்டர் சாக்கியர்கள்
புலைஆனார்
அறவுரையைப் போற்றாது, உன் பொன்னடியே
நிலையாகப்
பேணீ, நீ சரண்என்றார் தமை, என்றும்
விலையாக
ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.
பொழிப்புரை :பெருமானே! நீர்,
நின்றுண்ணும்
இயல்பினராய இழிந்த சமணர்கள் சாக்கியர்கள் கூறும் அறிவுரைகளைப் பொருட்படுத்தாது உம்
பொன்னடிகளை விரும்பி நீயே சரண் என்று அடைந்தவர்களை எப்பொழுதும் நும்மைத் தந்து
அவர்களைக் கொள்ளும் விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக
விரும்பியுள்ளீர்.
திருச்சிற்றம்பலம்
1.030
திருப்புகலி பண் – தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
விதியாய், விளைவாய், விளைவின்
பயன்ஆகி,
கொதியா
வருகூற் றைஉதைத் தவர்சேரும்
பதிஆ
வது, பங் கயம்நின்று அலரத்தேன்
பொதிஆர்
பொழில்சூழ் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என
விதித்த விதியாகவும், அதன்காரணமாக வந்த மரணமாய், அவர்
இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த
கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள்
நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.
பாடல்
எண் : 2
ஒன்னார்
புரம்மூன் றும்எரித் தஒருவன்,
மின்ஆர்
இடையா ளொடும்கூ டியவேடம்,
தன்னால்
உறைவுஆ வது, தண் கடல்சூழ்ந்த
பொன்ஆர்
வயல்பூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :பகைவராய் மாறிய அசுரர்களின்
முப்புரங்களையும் எரித்தழித்த சிவபிரான் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு
கூடிய திருவுருவத்தோடு எழுந்தருளிய இடம், குளிர்ந்த கடல் ஒருபுறம் சூழ, பொன்
போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்களை உடைய புகலிநகராகும்.
பாடல்
எண் : 3
வலிஇல்
மதிசெஞ் சடைவைத்த மணாளன்,
புலியின்
அதள்கொண்டு அரைஆர்த் தபுனிதன்,
மலியும்
பதிமா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும்
புனல்பூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :கலைகளாகிய வலிமை குறைந்த பிறை மதியைச்
செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும், புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும்
ஆகிய சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து செறிந்து பொலியும்
நீர்வளம் சான்ற அழகிய புகலிநகராகும்.
பாடல்
எண் : 4
கயலார்
தடம்கண் ணியொடும் எருதுஏறி
அயலார்
கடையில் பலிகொண்ட அழகன்,
இயலால்
உறையும் இடம், எண் திசையோர்க்கும்
புயல்ஆர்
கடல்பூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய
உமையம்மையோடும் விடைமீது ஏறி, அயலார் இல்லங்களில் பலி கொண்டருளும்
அழகனாகிய சிவபிரான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து இடி ஓசையைக் கேட்கும்
கார்மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.
பாடல்
எண் : 5
காதுஆர்
கனபொன் குழைதோடு அதுஇலங்கத்
தாதார்
மலர்தண் சடை ஏறமுடித்து
நாதான்
உறையும் இடமா வதுநாளும்
போதுஆர்
பொழில்பூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :காதுகளில் அணிந்துள்ள கனவிய பொன்னால்
இயன்ற குழை, தோடு ஆகியன இலங்க மகரந்தம் மருவிய மலர்களைத் தண்ணிய சடையின்கண்
பொருந்தச்சூடி, எல்லா உயிர்கட்கும் நாதனாக விளங்கும் சிவபிரான் உறையுமிடம்
நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலிநகராகும்.
பாடல்
எண் : 6
வலம்ஆர்
படைமான் மழுஏந் தியமைந்தன்,
கலம்ஆர்
கல்நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம்ஆர்
பதிகொன் றைகள்பொன் சொரியத்தேன்
புலம்ஆர்
வயல்பூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :வெற்றி பொருந்திய சூலப்படை, மான், மழு, ஆகியவற்றை
ஏந்திய வலிமையுடையோனும், மரக்கலங்கள் உலாவும் கடலிடைத் தோன்றிய
நஞ்சினை அமுதாக உண்டவனும் ஆகிய சிவபிரான், அடியார் குழாத்தோடு உறையும் பதி, கொன்றை
மலர்கள் பொன் போன்ற இதழ்களையும் மகரந்தங்களையும் சொரிய, தேன் நிலத்தில் பாயும் வயல்களை உடைய
புகலி நகராகும்.
பாடல்
எண் : 7
கறுத்தான்
கனலால் மதில்மூன் றையும்வேவச்
செறுத்தான், திகழும்
கடல்நஞ்சு அமுதுஆக,
அறுத்தான்
அயன்தன் சிரம்ஐந்திலும் ஒன்றை,
பொறுத்தான்
இடம்பூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :மும்மதில்களும் கனலால் வெந்தழியுமாறு
சினந்த வனும், கடலிடை விளங்கித் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில்
தரித்தவனும், பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய
சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்.
பாடல்
எண் : 8
தொழிலால்
மிகுதொண் டர்கள்தோத் திரம்சொல்ல,
எழில்ஆர்
வரையால் அன்றரக் கனைச்செற்ற
கழலான்
உறையும் இடம், கண்டல்கள் மிண்டிப்
பொழிலால்
மலிபூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட
தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப்போற்ற, அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில்
இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவ பிரான் உறையும் இடம்,
தாழைமரங்கள் செறிந்து
விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.
பாடல்
எண் : 9
மாண்டார்
சுடலைப் பொடிபூசி, மயானத்து
ஈண்டா
நடம் ஆடியஏந்தல் தன்மேனி
நீண்டான்
இருவர்க்கு எரியாய், அரவுஆரம்
பூண்டான்
நகர், பூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :இறந்தவர்களை எரிக்கும் சுடலையில்
விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு, அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும்
தலைவரும், திருமால்
பிரமர் பொருட்டுத்தம் திருமேனியை அழலுருவாக்கி ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத்
தரித்தவருமான சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.
பாடல்
எண் : 10
உடைஆர்
துகில்போர்த்து உழல்வார் சமண்கையர்
அடையாதன
சொல்லுவர், ஆதர்கள் ஓத்தைக்
கிடையா
தவன் தன் நகர், நல் மலிபூகம்
புடைஆர்
தருபூம் புகலிந் நகர்தானே.
பொழிப்புரை :கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப்
போர்த்துத் திரியும் புத்தரும், சமணர்களும் ஆகிய கீழ்மக்கள்
பொருந்தாதவற்றைக் கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான்.
அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள்
சூழ்ந்த புகலிநகராகும்.
பாடல்
எண் : 11
இரைக்கும்
புனல்செஞ் சடைவைத் தஎம்மான்தன்
புரைக்கும்
பொழிற்பூம் புகலிந் நகர்தன்மேல்
உரைக்கும்
தமிழ்ஞான சம்பந்தன் ஒண்மாலை
வரைக்கும்
தொழில்வல் லவர்நல் லவர்தாமே.
பொழிப்புரை :ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த
சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின், உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய
புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த அழகிய இப்பதிகமாலையைத்
தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
1.104 திருப்புகலி பண்
- வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஆடல்
அரவு அசைத்தான், அருமாமறை தான்விரித்தான், கொன்றை
சூடிய
செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்தபிரான்,
ஏடுஅவிழ்
மாமலையாள் ஒருபாகம் அமர்ந்து, அடியார் ஏத்த
ஆடிய
எம் இறை ஊர் புகலிப் பதியாமே.
பொழிப்புரை :படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில்
கட்டியவனும், அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும், கொன்றை
மலர் மாலையைச் சூடிய செஞ்சடை முடியை உடையவனும், சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு
உறைபவனும், இதழ் அவிழும் மலர்கள் பூத்த பெரிய இமயமலை அரசனின் புதல்வியாகிய
பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று அடியவர் போற்ற நடனம் ஆடியவனும் ஆகிய எம்
இறைவனது ஊர் புகலிப் பதியாகும்.
பாடல்
எண் : 2
ஏல
மலிகுழலார் இசைபாடி எழுந்து, அருளால் சென்று,
சோலை
மலிசுனையில் குடைந்து ஆடித் துதிசெய்ய,
ஆலை
மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று, நல்ல
மாலை
அதுசெய்யும் புகலிப் பதியாமே.
பொழிப்புரை :மயிர்ச் சாந்தணிந்த கூந்தலினை உடைய
மகளிர் காலையில் எழுந்து இசை பாடிக்கொண்டு இறையருள் பெறும் வேட்கையோடு சென்று
சோலையின்கண் விளங்கும் சுனையில் துளைந்து நீராடித் துதி செய்ய, கரும்பு
ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை சென்று தேவர்கள் உறையும் வானகத்தை மூடி நின்று காலையை
நல்ல மாலைப் போதாகச் செய்வது புகலிப்பதியாம். மகளிர் நீராடித்துதி செய்ய
விளங்குவது புகலிப்பதி என முடிவு காண்க.
பாடல்
எண் : 3
ஆறுஅணி
செஞ்சடையான், அழகார்புரம் மூன்றும்அன்று வேவ
நீறுஅணி
யாகவைத்த நிமிர்புன்சடை எம் இறைவன்,
பாறுஅணி
வெண்தலையில் பகலேபலி என்றுவந்து நின்ற
வேறுஅணி
கோலத்தினான், விரும்பும் புகலியதே.
பொழிப்புரை :கங்கை சூடிய செஞ்சடையினை உடையவனும், அழகமைந்த
முப்புரங்களைத் தீயால் வேவச் செய்தவனும், திருநீற்றைத் தன் திருமேனியில் அழகாகப்
பூசியவனும், மேல்நோக்கிய சிவந்த சடையை உடைய எம் இறைவனும், பருந்து
சூழும் வெள்ளிய தலையோட்டை ஏந்திப் பகலில் பலி இடுக என்று வந்து நிற்பவனும்
வேறுபாடு உடையனவாய்ப் புனையப் பெற்ற கோலத்தினனும் ஆகிய சிவபிரான் விரும்பும் தலம்
புகலியாகும்.
பாடல்
எண் : 4
வெள்ளம்
அதுசடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள
எரிமடுத்தான், குறைவு இன்றி உறைகோயில்,
அள்ளல்
விளைகழனி அழகுார்விரைத் தாமரைமேல் அன்னம்
புள்இனம்
வைகி எழும் புகலிப் பதிதானே.
பொழிப்புரை :பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சடைமேல்
கரந்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரி மடுத்தவனும்
ஆகிய சிவபிரான் குறைவிலா நிறைவோடு உறையும் கோயில், சேறு நிறைந்த வயல்களில் முளைத்த அழகிய
மணங்கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும் பிற பறவைகளும் வந்து தங்கிச் செல்லும்
புகலிப் பகுதியாகும்.
பாடல்
எண் : 5
சூடு
மதிச்சடைமேல் சுரும்புஆர்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
ஆடும்
அமரர்பிரான், அழகுஆர் உமை யோடும் உடன்
வேடு
படநடந்த விகிர்தன், குணம்பரவித் தொண்டர்
பாட இனிது உறையும் புகலிப் பதியாமே.
பொழிப்புரை :மதி சூடிய சடையின் மீது வண்டுகள்
மொய்க்கும் கொன்றை மலர்களைப் பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடும் தேவர் பிரானும், அழகிய
உமையம்மையோடு உடனாய் வேட்டுவக் கோலத்தோடு தோன்றி அருச்சுனற்கு அருள்புரிய நடந்த
வேறுபாடுடையவனும் ஆகிய சிவபிரானின் குணங்களைப் போற்றித் தொண்டர்கள் பாட
அப்பெருமான் இனிதுறையும் பதிபுகலியாகும்.
பாடல்
எண் : 6
மைந்துஅணி
சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டுஇனங்கள் வந்து
நந்து
இசை பாடநடம் பயில்கின்ற நம்பன் இடம்,
அந்திசெய்
மந்திரத்தால் அடியார்கள் பரவிஎழ, விரும்பும்
புந்திசெய்
நான்மறையோர் புகலிப் பதிதானே.
பொழிப்புரை :இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய
சோலையின்கண் மலர்ந்த பூக்களின் தேனில் பரவிய வரி வண்டுகள் வந்து வளரும் இசையைப்
பாட நடம் பயிலும் பெருமானது இடம், அந்திக் காலங்களில் செய்யும்
சந்தியாவந்தன மந்திரங்களால் அடியார்களாய்ப் போற்றுவதற்கு நான்கு வேதங்களிலும் வல்ல
அந்தணர் விருப்போடு தமது புந்தியில் நினைக்கும் புகலிப்பதியாகும்.
பாடல்
எண் : 7
மங்கைஓர்
கூறுஉகந்த மழுவாளன், வார்சடைமேல் திங்கள்
கங்கை
தனைக் கரந்த கறைக்கண்டன் கருதும்இடம்,
செங்கயல்
வார்கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்
அங்கையி
னால் தொழுவார் அவலம் அறியாரே.
பொழிப்புரை :உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டு மகிழ்பவனும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவனும், நீண்ட
சடைமேல் திங்களையும் கங்கையையும் அணிந்தவனும், விடக் கறை பொருந்திய மிடற்றினனும் ஆகிய
சிவபிரான் கருதி உறையும் இடமாகிய சிவந்த கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு
விளங்கும் திருப்புகலிக்குச் சென்று தம் அழகிய கைகளைக் குவித்து வணங்குபவர் துன்பங்கள்
நீங்கப்பெறுவர்.
பாடல்
எண் : 8
வில்லிய
நுண்இடையாள் உமையாள் விருப்பன்அவன் நண்ணும்
நல்இடம்
என்று அறியான், நலியும் விறல் அரக்கன்
பல்லொடு
தோள்நெரிய விரல் ஊன்றிப் பாடலுமே, கைவாள்
ஒல்லை
அருள் புரிந்தான் உறையும் புகலியதே.
பொழிப்புரை :ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய
உமையவளிடம் பெருவிருப்பினனாகிய சிவபிரான் எழுந்தருளிய மேம்பட்ட இடம் என்று கருதாது
கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனாகிய இராவணனின் பற்களும் தோள்களும்
நெரியுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த அளவில் அவன் தன்னைப் புகழ்ந்து பாடக்கேட்டுக்
கையில் ஏந்திப் போர் செய்யும் வாளை விரைந்து அருள்புரிந்தவனாகிய சிவபிரான்
உறையுமிடம் திருப்புகலியாகும்.
பாடல்
எண் : 9
தாதுஅலர்
தாமரைமேல் அயனும் திருமாலும் தேடி
ஓதியும்
காண்பு அரிய உமைகோன் உறையும்இடம்,
மாதவி
வான்வகுளம் மலர்ந்துஎங்கும் விரைதோய வாய்ந்த
போதுஅலர்
சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.
பொழிப்புரை :மகரந்தம் விரிந்த தாமரை மலர் மேல்
உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் புகழ்ந்தும் காண்டற்கு அரியவனாய் நின்ற
உமைமணவாளனாம் சிவன் உறையுமிடம், மாதவி, வானளாவ உயர்ந்த மகிழமரம் ஆகியன மலர்ந்து
எங்கும் மணம் பரப்புமாறு பொருந்திய மலர் விரிந்த சோலைகள் சூழ்ந்த
புகலிப்பதியாகும்.
பாடல்
எண் : 10
வெந்துவர்
மேனியினார், விரிகோவணம் நீத்தார், சொல்லும்
அந்தர
ஞானம்எல்லாம், அவைஓர் பொருள் என்னேல்,
வந்துஎதி
ரும்புரம் மூன்று எரித்தான் உறைகோயில், வாய்ந்த
புந்தியி
னார் பயிலும் புகலிப் பதிதானே.
பொழிப்புரை :கொடிய மருதத்துவராடை உடுத்த
மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும் துறந்த திகம்பர சமணரும்
சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக் கொள்ளாதீர். தம்மை
வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், பொருந்திய
அறிவு உடையவர் வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.
பாடல்
எண் : 11
வேதம்ஓர்
கீதம்உணர் வாணர்தொழுது ஏத்த, மிகுவாசப்
போதனைப்
போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்,
நாதனை, ஞானமிகு
சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓதவல்லார்
உலகில் உறுநோய் களைவாரே.
பொழிப்புரை :வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர் தொழுது
ஏத்தவும், மிக்க
மணமுடைய தாமரை மலர் மேல் உறையும் நான்முகனைப் போல விளங்கும் மறையவர் போற்றவும், விளங்கும்
புகலியுள் உறையும் சிவபிரானை ஞானம் மிகும் சம்பந்தன் பாடிய இத்தமிழ் மாலையை
நாவினால் ஓதி வழிபட வல்லவர் மேம்பட்ட பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.
திருச்சிற்றம்பலம்
2.025 திருப்புகலி பண்
- இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
உகலி
ஆழ்கடல் ஓங்கு பார்உளீர்,
அகலி
யாவினை, அல்லல் போய்அறும்,
இகலி
யார்புரம் எய்த வன்உறை
புகலி
யாம்நகர் போற்றி வாழ்மினே.
பொழிப்புரை :`தாவிச்செல்லும்
அலைகளை உடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட உலகின்கண் வாழ்பவர்களே, தன்னோடு
மாறுபட்ட அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சிவபிரான் உறையும் புகலி எனப்பெயர்
பெற்ற சீகாழிப்பதியைப் போற்றி வழிபடுங்கள்`. வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போகும்.
பாடல்
எண் : 2
பண்ணி
ஆள்வதோர் ஏற்றர், பான்மதிக்
கண்ணி
யார்,கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி
யன் உறை யும்பு கலியை
நண்ணு
மின்நல மான வேண்டிலே.
பொழிப்புரை :நன்மைகள் பலவும் உங்களை அடைய
வேண்டுமாயின், அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால்
போன்ற வெண்மையான பிறைமதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும் கொன்றை மாலைசேர்ந்த
முடியினனும் ஆகிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து
வழிபடுங்கள்.
பாடல்
எண் : 3
வீசு
மின்புரை காதன், மேதகு
பாச
வல்வினை தீர்த்த பண்பினன்,
பூசு
நீற்றினன், பூம்பு கலியைப்
பேசு
மின்பெரிது, இன்பம் ஆகவே.
பொழிப்புரை :இன்பம் பெரிதாக விளையவேண்டின், ஒளிவீசும்
மின்னல் போன்ற அணிபூண்ட காதினனும், பற்றுக்கள், வலிய வினைகள் ஆகியவற்றைப் போக்கிய மேதகு
பண்பினனும், திருநீறு பூசியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய புகலிப்பதியை
அடைந்து அவனைப்புகழ்ந்து பேசுங்கள்.
பாடல்
எண் : 4
கடிகொள்
கூவிளம் மத்தம் வைத்தவன்,
படிகொள்
பாரிடம் பேசும் பான்மையன்,
பொடிகொள்
மேனியன், பூம்பு கலியுள்
அடிக
ளைஅடைந்து அன்பு செய்யுமே.
பொழிப்புரை :மணம் கமழும் வில்வம், ஊமத்தைமலர்
ஆகியவற்றை முடிமிசைச் சூடியவனும், பெரிதான இவ்வுலகில் உள்ளோர் புகழ்ந்து
போற்றும் தன்மையாளனும், திருநீற்றுப்பொடி பூசிய மேனியனும் ஆகிய
சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை அடைந்து அங்கு மேவிய பெருமானிடம் அன்பு
செய்யுங்கள்.
பாடல்
எண் : 5
பாதத்
துஆர்ஒலி பல்சி லம்பினன்,
ஓதத்
தார்விடம் உண்ட வன்,படைப்
பூதத்
தான், புக லிந்ந கர்தொழ
ஏதத்
தார்க்குஇடம் இல்லை என்பரே.
பொழிப்புரை :பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல
சிலம்புகளை அணிந்தவனும், பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை
உண்டவனும், பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப்பதியை அடைந்து
தொழ, துன்பங்கள்
வருதற்கு இடம் இல்லையாகும்.
பாடல்
எண் : 6
மறையி
னான்,ஒலி மல்கு வீணையன்,
நிறையின்
ஆர்நிமிர் புன்ச டையன், எம்
பொறை
யினான் உறை யும்பு கலியை
நிறையி
னால்தொழ நேச மாகுமே.
பொழிப்புரை :வேதங்களை அருளியவனும், ஒலி
நிறைந்த வீணையை உடையவனும், பூரணனாய் நிமிர்த்துக் கட்டிய சிவந்த
சடைமுடியை உடையவனும், எமது பொறுமையை மலராகக் கொள்பவனும் ஆகிய
சிவபிரான் உறையும் புகலியையே குறிக்கொண்டு தொழ, அதுவே அன்பு வழிபாடாக அமையும்.
பாடல்
எண் : 7
கரவி
டைமனத் தாரைக் காண்கிலான்,
இரவி
டைப்பலி கொள்ளும் எம்மிறை,
பொருவி
டைஉயர்த் தான்பு கலியைப்
பரவி
டப்பயில் பாவம் பாறுமே.
பொழிப்புரை :வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண
விரும்பாதவனும், இரவில் பலியேற்கும் இயல்பினனும், எம் இறைவனும், போர் வல்ல விடைபொறித்த கொடியினனும் ஆகிய
சிவபிரானது புகலியைப் பரவ நாம் செய்த பாவங்கள் அழியும்.
பாடல்
எண் : 8
அருப்பி
னார்முலை மங்கை பங்கினன்,
விருப்பி
னான்அரக் கன்உ ரம்செகும்
பொருப்பி
னான், பொழில் ஆர்பு கலியூர்
இருப்பி
னான்அடி ஏத்தி வாழ்த்துமே.
பொழிப்புரை :தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், தன்மீது விருப்பினன் ஆயினும்
செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்த்த கயிலைமலையினனும், பொழில்
சூழ்ந்த புகலியூரைத்தன் இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை
ஏத்தி வாழ்த்துங்கள்.
பாடல்
எண் : 9
மாலும்
நான்முகன் தானும் வார்கழல்
சீல
மும்முடி தேட நீண்டஎரி
போலும்
மேனியன், பூம்பு கலியுள்
பால்அது
ஆடிய பண்பன் நல்லனே.
பொழிப்புரை :திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட
திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய்
நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன்
நமக்கு நன்மைகள் செய்பவன்.
பாடல்
எண் : 10
நின்று
துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற
தாகவை யாஉ ணர்வினுள்
நின்ற
வன், நிக ழும்பு கலியைச்
சென்று
கைதொழச் செல்வ மாகுமே.
பொழிப்புரை :நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள், தேரர்களாகிய
பௌத்தர்கள் உரைகளை ஒருபொருளாகக் கொள்ளாத அன்பர்களின் உணர்வினுள் நிற்கும்
சிவபிரான் எழுந்தருளிய புகலியைச் சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம்.
பாடல்
எண் : 11
புல்லம்
ஏறிதன் பூம்பு கலியை,
நல்ல
ஞானசம் பந்தன் நாவினால்
சொல்லு
மாலை, ஈரைந்தும் வல்லவர்க்கு
இல்லை
யாம்வினை, இரு நிலத்துளே.
பொழிப்புரை :விடைமீது ஏறி வருபவனாகிய சிவபிரானது
அழகிய புகலியை நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால் போற்றிச் சொல்லிய தமிழ்
மாலையாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்க்கு அகன்ற இந்நிலவுலகத்தில்
வினைகள் இல்லை.
திருச்சிற்றம்பலம்
2.054 திருப்புகலி பண்
- காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
உருஆர்ந்த
மெல்லியல்ஓர் பாகம்உடையீர், அடைவோர்க்குக்
கருஆர்ந்த
வான்உலகங் காட்டிக்கொடுத்தல் கருத்து ஆனீர்,
பொருஆர்ந்த
தெண்கடல்ஒண் சங்கம்திளைக்கும் பூம்புகலித்
திருஆர்ந்த
கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
பொழிப்புரை :அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே!
தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர் கரையோடு பொரும்
தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக்
கொண்டீர் போலும்.
பாடல்
எண் : 2
நீர்ஆர்ந்த
செஞ்சடையீர், நிரையார்கழல்சேர் பாதத்தீர்,
ஊர்ஆர்ந்த
சில்பலியீர், உழைமான்உரிதோல் ஆடையீர்,
போர்ஆர்ந்த
தெண்திரைசென் றுஅணையுங்கானல் பூம்புகலிச்
சீர்ஆர்ந்த
கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
பொழிப்புரை :கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய்
அமைந்த கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும் பலியை ஏற்பவரே!
உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே! போர் போன்றுயர்ந்து வரும் அலைகள்
சென்றணையும் கடற்சோலைகளைக் கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது
இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.
பாடல்
எண் : 3
அழிமல்கு
பூம்புனலும் அரவும்சடைமேல் அடைவுஎய்த
மொழிமல்கு
மாமறையீர், கறைஆர்கண்டத்து எண்தோளீர்,
பொழில்மல்கு
வண்டுஇனங்கள் அறையுங்கானல் பூம்புகலி
எழில்மல்கு
கோயிலே கோயிலாக இருந்தீரே.
பொழிப்புரை :மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும்
பாம்பும் சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே! கறைக்கண்டமும்
எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள்
எழில் விளங்கும் கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
பாடல்
எண் : 4
கையில்ஆர்ந்த
வெண்மழுஒன்று உடையீர், கடிய கரியின்தோல்
மயில்ஆர்ந்த
சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்,
பயில்ஆர்ந்த
வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயில்ஆர்ந்த
கோயிலே கோயிலாக இசைந்தீரே.
பொழிப்புரை :கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில்
போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற
வேதியர்களின் பதியாய் விளங்கும் அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம்
இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
பாடல்
எண் : 5
நாஆர்ந்த
பாடலீர், ஆடல்அரவம் அரைக்குஆர்த்தீர்,
பாஆர்ந்த
பல்பொருளின் பயன்கள் ஆனீர், அயன்பேணும்
பூஆர்ந்த
பொய்கைகளும் வயலும்சூழ்ந்த பொழிற்புகலித்
தேஆர்ந்த
கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
பொழிப்புரை :நாவிற்பொருந்திய, பாடலைப்
பாடுகின்றவரே! ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும் பயனும்
ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த பொய்கைகளும் வயல்களும்
சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில் தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம்
கோயிலாகக் கொண்டு திகழ்கின்றீர்.
பாடல்
எண் : 6
மண்ஆர்ந்த
மண்முழவம் ததும்ப,மலையான் மகள்என்னும்
பெண்ஆர்ந்த
மெய்மகிழப் பேணி,எரிகொண்டு ஆடினீர்,
விண்ஆர்ந்த
மதியம் மிடை மாடத்துஆரும் வியன்புகலிக்
கண்ஆர்ந்த
கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
பொழிப்புரை :மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு -
வலந்தரை) மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்) ஒலிக்க, இமவான்
மகளாகிய பார்வதிதேவி திருமேனியிற் பொருந்தி விளங்க, விரும்பிக்கையில் அனல் கொண்டு ஆடுபவரே!
வானத்திற் பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில்
கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு கலந்துள்ளீர்.
பாடல்
எண் : 7
களிபுல்கு
வல்அவுணர் ஊர்மூன்று எரியக் கணைதொட்டீர்,
அளிபுல்கு
பூமுடியீர், அமரர்ஏத்த அருள்செய்தீர்,
தெளிபுல்கு
தேன்இனமும் மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு
கோயிலே கோயிலாக உகந்தீரே.
பொழிப்புரை :களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று
ஊர்கள் எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடையவரே! தேவர்கள்
வழிபட அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தெளிந்ததேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம்
கமழும் புகலியில் உள்ள ஒளி பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
பாடல்
எண் : 8
பரந்துஓங்கு
பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்டு
உரந்தோன்றும்
பாடல்கேட் டுஉகவை அளித்தீர், உகவாதார்
புரம்தோன்று
மும்மதிலும் எரியச்செற்றீர், பூம்புகலி
வரம்தோன்று
கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
பொழிப்புரை :பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை
மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்நாள்
அருளியவரே! தம்மோடு மகிழ்வில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் எரியச்செய்தவரே!
அழகிய புகலியில் அருள் நலம் தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
பாடல்
எண் : 9
சலந்தாங்கு
தாமரைமேல் அயனும்தரணி அளந்தானும்
கலந்துஓங்கி
வந்துஇழிந்தும் காணாவண்ணம் கனல்ஆனீர்,
புலந்தாங்கி
ஐம்புலனும் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு
கோயிலே கோயிலாக நயந்தீரே.
பொழிப்புரை :நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும்
பிரமனும், உலகை
அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும் காண இயலாதவாறு கனல்
உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய
புகலியுள் நன்மைகளைக் கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
பாடல்
எண் : 10
நெடிதுஆய
வன்சமணும் நிறைவுஒன்றுஇல்லாச் சாக்கியரும்
கடிதுஆய
கட்டுரையால் கழற,மேல்ஓர் பொருள்ஆனீர்,
பொடிஆரும்
மேனியினீர், புகலிமறையோர் புரிந்துஏத்த
வடிவுஆரும்
கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
பொழிப்புரை :காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய
சமணர்களும், நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால்
பழித்துப்பேச, மேலானதொரு மெய்ப்பொருளாக விளங்குபவரே! பொடி பூசியவரே!
புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே உம் கோயிலாகக்
கொண்டு மகிழ்ந்துள்ளீர்.
பாடல்
எண் : 11
ஒப்பரிய
பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில்
பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பஅரிய
தண்தமிழால் தெரிந்தபாடல் இவைவல்லார்
எப்பரிசில்
இடர்நீங்கி இமையோர் உலகத்து இருப்பாரே.
பொழிப்புரை :ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய
கோயிலுள் மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய ஞானசம்பந்தன்
சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால் ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை
ஓதவல்லவர் எவ்வகையிலும் இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.122
திருப்புகலி பண்
- செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
விடையது
ஏறி வெறிஅக் குஅரவு ஆர்த்த விமலனார்,
படைய
தாகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது,
கொடை
யில்ஓவார் குலமும் உயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள்
வேள்விப் புகைஉம்பர் உலாவும் புகலியே.
பொழிப்புரை :விடைமீதுஏறி, முடைநாறும் எலும்பு, பாம்பு
இவற்றை மாலையாக அணிந்துவரும் விமலரும், மழுவைப் படைக் கலனாகக் கொண்ட வரும் ஆகிய
சிவபிரானுக்குரிய இடம், கொடை வண்மை, குன்றா மரபினரும் ஆகிய, உயரிய, வேதங்களில்
வல்ல அந் தணர் வேட்கும் வேள்விப்புகை வானத்து உலாவும் புகலிப் பதியாகும்.
பாடல்
எண் : 2
வேலை
தன்னில் மிகுநஞ்சினை உண்டுஇருள் கண்டனார்,
ஞாலம்
எங்கும் பலிகொண்டு உழல்வார் நகர் ஆவது,
சால
நல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலை
மேவும் கிளித்தான் சொல்பயிலும் புகலியே.
பொழிப்புரை :கடலில் தோன்றிய மிக்க நஞ்சினை உண்டு
இருண்ட கண்டத்தினரும், உலகெங்கும் பலியேற்றுத் திரிபவருமான
சிவபிரானுக்குரிய நகர், மிகவும் நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக்
கேட்டு, சோலைகளில்
வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும்.
பாடல்
எண் : 3
வண்டு
வாழும் குழல்மங்கை ஓர்கூ றுஉகந்தார், மதித்
துண்டம்
மேவும் சுடர்த்தொல் சடையார்க்கு இடம்ஆவது,
கெண்டை
பாய மடுவில் உயர்கேதகை மாதவி
புண்ட
ரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.
பொழிப்புரை :வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை
நங்கையை தன் மேனியின் ஒரு கூறாக உகந்தவரும், பிறைமதி அணிந்த ஒளி மயமான தொல்சடை
முடியினரும், ஆகிய சிவபெரு மானுக்கு இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி
ஆடும் மடுக் களையும், தாழை, மாதவி மரங்களையும், தாமரை
மலரும் பொய்கை களையும் கொண்ட புகலியாகும்.
பாடல்
எண் : 4
திரியும்
மூன்று புரமும் எரித்து, திகழ்வானவர்க்கு
அரிய
பெம்மான் அரவக் குழையார்க்கு இடம் ஆவது,
பெரிய
மாடத் துஉயரும் கொடியின் மிடைவால், வெயில்
புரிவு
இலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.
பொழிப்புரை :வானத்தில் திரிந்து இடர்விளைத்த
முப்புரங்களை எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக்
குழை அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால்
வெண்மையான வெயிலொளி புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும்
புகலியாகும்.
பாடல்
எண் : 5
ஏவில்
ஆரும் சிலைப்பார்த் தனுக்குஇன் அருள்செய்தவர்,
நாவி
னாள்மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம்ஆவது,
மாவில்
ஆரும் கனிவார் கிடங்கில் விழ,வாளைபோய்ப்
பூவில்
ஆரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.
பொழிப்புரை :கணை பொருந்திய வில்லில் வல்ல
அருச்சுனனுக்கு அருள் செய்தவரும், கலைமகளின் மூக்கை அரிவித்தவரும், ஆகிய
சிவபிரானுக்குரிய இடம், மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக்
கண்டு வாளைமீன்கள் பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்றடையும்
புகலிப்பதியாகும்.
பாடல்
எண் : 6
தக்கன்
வேள்வி தகர்த்த தலைவன், தையலாளொடும்
ஒக்கவே
எம் உரவோன் உறையும் இடம் ஆவது,
கொக்கு
வாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்க
வாசப் புன்னை பொன்திரள் காட்டும் புகலியே.
பொழிப்புரை :தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும், எம்
உரவோனும் ஆகிய சிவபிரான் தையலாளொடு உறையும் இடம், மா, வாழை, பலா ஆகிய கனிகளின் மணத்துடன் கொன்றை, புன்னை
இவற்றின் மகரந்தம் பொன்திரள் போலத் தோன்றும் புகலியாகும்.
பாடல்
எண் : 7
* * * * *
பாடல்
எண் : 8
தொலைவுஇ
லாத அரக்கன் உரத்தைத் தொலைவித்து,அவன்
தலையும்
தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது,
கலையின்
மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்புஇலார்,
பொலியும்
அந்தண் பொழில்சூழ்ந்து அழகுஆரும் புகலியே.
பொழிப்புரை :அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவ
னது தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவ பிரானுக் குரிய இடம், கலை
உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத வண்மையுடையோர் விளங்கும் பொழில்
சூழ்ந்த புகலிப் பதியாகும்.
பாடல்
எண் : 9
கீண்டு
புக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழல்அன்னமாய்க்
காண்டும்
என்றார் கழல்பணிய நின்றார்க்கு இடம் ஆவது,
நீண்ட
நாரை இரைஆரல் வாரநிறை செறுவினில்
பூண்டு
மிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே.
பொழிப்புரை :கேழலாய் நிலத்தை அகழ்ந்து சென்ற
திருமால், அன்னமாய்ப்
பறந்து உயர்ந்து சென்ற நான்முகன் ஆகியோர் அடிமுடி காண்போம் எனச்சூளுரைத்து முயன்று
தோற்றுக் கழல்பணிய நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள் ஒழுகி ஓட, நிறைந்த
சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலிப்பதியாகும்.
பாடல்
எண் : 10
தடுக்கு
உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கண்
உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது,
மடுப்ப
டுக்கும் சுருதிப்பொருள் வல்லவர், வானுளோர்
அடுத்து
அடுத்துப் புகுந்துஈண்டும் அந்தண் புகலியே.
பொழிப்புரை :ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக்
கொண்டும் தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர் களும் இடுக்கண்பட்டவராய்
இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம் பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, வேதம்
வல்ல அந்தண ரும் வானுலகில் வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும்
புகலிப்பதியாகும்.
பாடல்
எண் : 11
எய்த
ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம்
இல்லாக் கவுணியன், ஞான சம்பந்தன்,
சீர்
செய்த
பத்தும் இவைசெப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல
இமையோர்கள் ஏத்த இருப்பார்களே.
பொழிப்புரை :உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன்
உறையும் புகலியை, வஞ்சனையற்ற கவுணியர்குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்புடன்
பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை, செப்பவல்லவர் சிவலோகத்தை அடைந்து நல்ல
தேவர்கள் ஏத்தப் புகழுடன் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
3.007
திருப்புகலி பண்
- காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கண்ணுத
லானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண்ணிசை
பாடநின்று ஆடினானும், பரஞ் சோதியும்,
புண்ணிய
நான்மறை யோர்கள்ஏத் தும்புக லிந்நகர்ப்
பெண்ணின்நல்
லாளொடும் வீற்றிருந்த பெருமான்அன்றே.
பொழிப்புரை :நெற்றிக் கண்ணையுடையவனும் , திருவெண்
ணீற்றினைப் பூசியுள்ளவனும் , திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப் பண்ணுடன்
இசைபாட நடனம் ஆடுபவனும் ஆகி , மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள் , சிவபுண்ணியர்களாகிய
, நான்கு
வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின்
நல்லவளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான் .
பாடல்
எண் : 2
சாம்பலோ
டும்தழல் ஆடினா னும், சடை யின்மிசைப்
பாம்பினோ
டும்மதி சூடினா னும், பசு ஏறியும்,
பூம்படு
கல்இள வாளைபா யும்புக லிந்நகர்க்
காம்புஅன
தோளியொ டும்இருந் தகட வுள்அன்றே.
பொழிப்புரை :மகாசங்கார காலத்தில் சாம்பலோடு
நெருப்பில் ஆடியவனும் , சடைமுடியில் பாம்போடு சந்திரனைச்
சூடியுள்ளவனும் , இடபவாகனத்தில் ஏறியுள்ளவனுமான சிவபெருமான் , மலர்ப்
பொய்கையில் இள வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில்
போன்ற தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான் .
பாடல்
எண் : 3
கருப்புநல்
வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்,
மருப்புநல்
ஆனையின் ஈர்உரி போர்த்தம ணாளனும்,
பொருப்புஅன
மாமணி மாடம்ஓங் கும்புக லிந்நகர்
விருப்பின்நல்
லாளொடும் வீற்றிருந் தவிம லன்அன்றே.
பொழிப்புரை :நல்ல நீண்ட கரும்பு வில்லையுடைய மன்மதன்
எரியும்படி நெற்றிக் கண்ணால் விழித்தவனும் , அழகிய தந்தத்தை யுடைய யானையின் வலிய
தோலினை உரித்துப் போர்த்திக் கொண்ட மணாளனுமாகிய சிவபெருமான் , மலைகள்
போன்று உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில் தன்மீது
விருப்பமுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனே யாவான் .
பாடல்
எண் : 4
அங்கைஇ
லங்குஅழல் ஏந்தினா னும், அழ காகவே
கங்கையைச்
செஞ்சடை சூடினா னும், கட லின்இடைப்
பொங்கிய
நஞ்சுஅமுது உண்டவ னும், புகலிந்நகர்
மங்கைநல்
லாளொடும் வீற்றிருந்த மண வாளனே.
பொழிப்புரை :உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும் , அழகுறக்
கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும் , திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக
உண்டவனும் , திருப்புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
சிவபெருமானே யாவான் .
பாடல்
எண் : 5
சாமநல்
வேதனும், தக்கன்தன் வேள்வி தகர்த்தானும்,
நாமம்நூ
றுஆயிரம் சொல்லிவா னோர்தொழும் நாதனும்,
பூமல்கு
தண்பொழின் மன்னும்அந் தண்புக லிந்நகர்க்
கோமள
மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே.
பொழிப்புரை :நல்ல சாமவேதத்தை அருளியவனும் , சிவனை
நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும் , நூறாயிரம் திருநாமங்களைச் சொல்லித்
தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும் , பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள்
நிலைபெற்றி ருக்கும் அழகும் , குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில்
அழகிய இளம் பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவ பெருமானேயாவான் .
பாடல்
எண் : 6
இரவுஇடை
ஒள்எரி ஆடினா னும், இமை யோர்தொழச்
செருஇடை
முப்புரம் தீஎரித்த சிவலோகனும்,
பொருவிடை
ஒன்றுஉகந்து ஏறினானும், புகலிந்நகர்
அரஇடை
மாதொடும் வீற்றிருந்த அழகன்அன்றே.
பொழிப்புரை :மகாசங்காரம் என்று சொல்லப்படும்
நள்ளிரவில் ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும் , தேவர்கள் தொழுது வேண்டப் போர் முகத்தில்
முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோக நாதனும் , இடபவாகனத்தில்
உகந்து ஏறியவனும் , திருப்புகலி நகரில் பாம்பு போன்ற
இடையினையுடைய உமாதேவியோடு வீற்றிருந் தருளும் அழகிய சிவபெருமானேயாவான் .
பாடல்
எண் : 7
சேர்ப்பது
திண்சிலை மேவினானும், திகழ் பாலன்மேல்
வேர்ப்பது
செய்தவெங் கூற்றுஉதைத் தானும், வேள்விப்புகை
போர்ப்பது
செய்தஅணி மாடம்ஓங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி
யோடுஉடன் வீற்றிருந்த பரமன்அன்றே.
பொழிப்புரை :திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிட
மாகக் கொண்டவனும், பாலனான மார்க்கண்டேயர் மீது சினம்
கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும், வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய
மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும்
எல்லோருக்கும் மேலானவ னான சிவபெருமானேயாவான் .
பாடல்
எண் : 8
கல்நெடு
மால்வரைக் கீழ்அரக் கன்இடர் கண்டானும்,
வில்நெடும்
போர்விறல் வேடன்ஆ கிவிச யற்குஒரு
பொன்நெடுங்
கோல்கொடுத் தானும், அந் தண்புக லிந்நகர்
அன்னம்அன்
னந்நடை மங்கையொ டும்அமர்ந் தான்அன்றே.
பொழிப்புரை :கல் போன்று திண்ணிய நெடிய பெரிய
திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தானும் , வில்லேந்திப்
போர்புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு பொன்மயமான
பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும் , அழகிய குளிர்ச்சியான திருப்புகலி நகரில்
அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவ னான சிவபெருமானேயாவான்
.
பாடல்
எண் : 9
பொன்நிற
நான்முகன் பச்சையான் என்றுஇவர் புக்குஉழித்
தன்னைஇன்
னான்எனக் காண்பரிய தழல் சோதியும்,
புன்னை
பொன் தாதுஉதிர் மல்கும்அந் தண்புக லிந்நகர்
மின்இடை
மாதொடும் வீற்றிருந்த விமலன்அன்றே.
பொழிப்புரை :பொன்னிறப் பிரமனும், பச்சைநிறத்
திருமாலும் என்ற இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை இன்னா னெனக்
காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற பெருமான், புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை
உதிர்க்க அழகிய, குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற இடையையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானே யாவான்.
பாடல்
எண் : 10
பிண்டியும்
போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததுஓர்
தொண்டரும்
காதல்செய் சோதிஆ யசுடர்ச் சோதியான்,
புண்டரீ
கம்மலர்ப் பொய்கைசூழ்ந்த புகலிந்நகர்
வண்டுஅமர்
கோதையோ டும்இருந்த மணவாளனே.
பொழிப்புரை :அசோக மரத்தையும் , அரசமரத்தையும்
போற்றும் சமணர்கள் , புத்தர்கள் சொல்லும் உரைகளைப் போற்றாது
ஒப்பற்ற தொண்டர்கள் பக்தியுடன் வழிபாடு செய்கின்ற சோதிச் சுடராய் ஒளிரும் இறைவன்
தாமரைகள் மலரும் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வண்டுகள் மொய்க்கின்ற
கூந்தலையுடைய உமாதேவியோடு எழுந்தருளியுள்ள மணவாளனான சிவபெருமானே யாவான் .
பாடல்
எண் : 11
பூங்கமழ்
கோதையோ டும்இருந்தான் புகலிந்நகர்ப்
பாங்கனை
ஞானசம் பந்தன்சொன்ன தமிழ் பத்துஇவை
ஆங்குஅமர்வு
எய்திய ஆதியாக இசை வல்லவர்
ஓங்கு
அமராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே.
பொழிப்புரை :பூ மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை
ஒரு பாகமாகக் கொண்ட திருப்புகலி நகர் இறைவனை , ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்ப்பாக்கள்
பத்தினைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித் துதிக்க
வல்லவர்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும் தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது
உண்மையே ஆகும் .
திருச்சிற்றம்பலம்
1. 075
திருவெங்குரு பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
காலைநன்
மாமலர் கொண்டு அடிபரவிக்
கைதெழு மாணியைக் கறுத்தவெம்காலன்
ஓலம்அதுஇட,முன் உயிரொடும் மாள
உதைத்தவன், உமையவள் விருப்பன், எம்பெருமான்,
மாலைவந்து
அணுக ஓதம் வந்து உலவி
மறிதிரை சங்கொடு பவளம் முன்உந்தி
வேலை
வந்து அணையும் சோலைகள்சூழ்ந்த
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய
நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால்
தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்துவந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித்
தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய
எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து
வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற்
சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி
வீற்றிருந்தருள்கின்றான்.
பாடல்
எண் : 2
பெண்ணினைப்
பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல்
பிறையொடும் அரவினை அணிந்து, அழகாகப்
பண்ணினைப்
பாடி ஆடி, முன் பலிகொள்
பரமர் எம்அடிகளார், பரிசுகள்பேணி
மண்ணினைமூடி
வான்முகடு ஏறி
மறிதிரை கடல்முகந்து எடுப்ப
மற்றுஉயர்ந்து
விண்அளவு
ஓங்கி வந்து இழிகோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று, செஞ்டைமேல்
பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப்பாடி ஆடியவராய்ச்
சென்று, மகளிரிடம்
பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு
வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள
நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள், வீற்றிருந்தருள்கிறார்.
பாடல்
எண் : 3
ஓர்இயல்பு
இல்லா உருவம் அதுஆகி,
ஒண்திறல் வேடன் அது உருவு அதுகொண்டு,
காரிகை
காணத் தனஞ்சயன தன்னைக்
கறுத்து, அவற்கு அளித்துஉடன் காதல்செய்பெருமான்,
நேரிசையாக
அறுபதம் முரன்று,
நிரைமலர்த் தாதுகள் மூசவிண்டு உதிர்ந்து,
வேரிகள்எங்கும்
விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய்
மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மைகாண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச்
சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய
சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின்
மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன்
உதிருவதால் தேன் எங்கும் விம்மிவழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும்
சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.
பாடல்
எண் : 4
வண்டுஅணை
கொன்றை வன்னியும் மத்தம்
மருவிய கூவிளம் எருக்கொடுமிக்க
கொண்டு
அணிசடையர், விடையினர், பூதம்
கொடுகொட்டி குடமுழாக் கூடியும் முழவப்
பண்திகழ்வாகப்
பாடியொர் வேதம்
பயில்வர், முன் பாய்புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறைசூடி
உமையவளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி
இலை, ஊமத்தம்
மலர், வில்வம், எருக்கம்பூ
ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை ஊர்தியரும், பூதகணங்கள்
கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப்
பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை
வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு
வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.
பாடல்
எண் : 5
சடையினர்மேனி நீறு அதுபூசி,
தக்கைகொள் பொக்கணம் இட்டு, உடனாகக்
கடைதொறும்வந்து
பலியது கொண்டு,
கண்டவர் மனம் அவை கவர்ந்து, அழகாகப்
படைஅது
ஏந்தி, பைங்கயல் கண்ணி
உமையவள் பாகமும் அமர்ந்து, அருள்செய்து
விடையொடு
பூதம் சூழ்தரச் சென்று ,
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு
பூசியவராய், தக்கை என்னும் இசைக்கருவியை வைத்துக் கட்டியுள்ள
துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று, தம்மைக்
கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில்
ஏந்தியவராய் விளங்கும் பெருமானார், பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை
ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய், விடையூர்தியோடு
பூதகணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.
பாடல்
எண் : 6
கரைபொரு
கடலில் திரை அதுமோதக்
கங்குல் வந்துஏறிய சங்கமும் இப்பி
உரைஉடைமுத்தம் மணல்இடைவைகி
ஓங்குவான் இருள்அறத் துரப்ப எண்திசையும்
புரைமலி
வேதம் போற்று பூசுரர்கள்
புரிந்தவர் நலங்கொள் ஆகுதியினில்
நிறைந்த
விரைமலி
தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :கரையை அலைக்கும் கடலின் திரைகள்
மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப்
புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும்
துரத்தி ஒளி செய்ய, எண் திசைகளிலும் பரவி நிறைந்த
வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும் வேள்விகளைப் புரிய, அவ்வேள்விகளின்
ஆகுதியால் எழும் மணம் மிக்கபுகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு என்னும்
சீகாழிப்பதியில் பெருமான் உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.
பாடல்
எண் : 7
வல்லி
நுண்இடையாள் உமையவள் தன்னை
மறுகிடவருமத களிற்றினை மயங்க
ஒல்லையில்
பிடித்துஅங்கு உரித்துஅவள்வெருவல்
கெடுத்தவர், விரிபொழின் மிகுதிரு ஆலில்
நல்அறம்
உரைத்து ஞானமோடு இருப்ப,
நலிந்திடல் உற்று வந்த அக்கருப்பு
வில்லியைப்
பொடிபட விழித்தவர், விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :கொடி போன்று நுண்ணிய இடையினை உடைய
உமையம்மை அஞ்சுமாறு வந்த மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை உரித்து
அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும், விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய
ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு நல்லறங்களை உரைத்து, யோக
நிலையில் ஞானமாத்திரராய் வீற்றிருக்க, திருமால் பிரமர் தம் கடுஞ்சொற்களால்
நலிவுற்று மலர்க்கணை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு வில்லையுடைய காமன்
எரிந்து பொடிபடுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி வெங்குரு என்னும்
சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.
பாடல்
எண் : 8
பாங்கிலா
அரக்கன் கயிலை அன்றுஎடுப்பப்
பலதலை முடியொடு தோள் அவைநெரிய
ஓங்கிய
விரலால் ஊன்றி, அன்றுஅவற்கே
ஒளிதிகழ் வாள்அது கொடுத்து, அழகுஆய
கோங்கொடு
செருந்தி கூவிளம் மத்தம்
கொன்றையும் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கை
பொன்மலர்ஆர் விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன்
கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும்
கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப்பாடிய
அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவ ரும், அழகிய
கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த
மலர், கொன்றை
ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின்
பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில்
வீற்றிருந்தருள்கிறார்.
பாடல்
எண் : 9
ஆறுஉடைச்
சடைஎம் அடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற்குஆகிச்
சேறுஇடைத்
திகழ்வா னத்து இடை புக்கும்
செலவு அறத் தவிர்ந்தனர், எழில்
உடைத்திகழ்வெண்
நீறு
உடைக்கோல மேனியர், நெற்றிக்
கண்ணினர், விண்ணவர் கைதொழுது ஏத்த
வேறு
எமைஆள விரும்பிய விகிர்தர்,
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :கங்கை நதியைச் சடையிற் சூடிய எம்
தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று
நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும், முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து
சென்றும் தம் செயல் அழிந்தனர். அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும், நெற்றிக்கண்ணரும், விண்ணவர்
கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய
அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.
பாடல்
எண் : 10
பாடுஉடைக்
குண்டர் சாக்கியர் சமணர்
பயில் தரும் அறவுரை விட்டு அழகாக
ஏடுஉடை
மலராள் பொருட்டு வன்தக்கன்
எல்லைஇல் வேள்வியைத் தகர்த்து
அருள்செய்து,
காடுஇடைக்
கடிநாய் கலந்து உடன்சூழக்
கண்டவர் வெருவுற விளித்து, வெய்தாய
வேடுஉடைக்
கோலம் விரும்பிய விகிர்தர்,
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை :துன்பங்களைத் தாங்குதலே தவத்தின்
அடையாளம் எனக்கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக்
கருதாது, அழகிய
இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன்
இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில்
காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர்
பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர்
வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.
பாடல்
எண் : 11
விண்ணியல்
விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை,
நண்ணிய
நூலன், ஞானசம் பந்தன்,
நவின்ற இவ்வாய்மொழி, நலம்
மிகுபத்தும்
பண்இயல்பாகப்
பத்திமையாலே
பாடியும் ஆடியும் பயிலவல்லோர்கள்,
விண்ணவர்
விமானம் கொடுவர ஏறி,
வியன்உலகுஆண்டு வீற்றிருப்பவர் தாமே.
பொழிப்புரை :வானளாவிய விமானத்தை விரும்பி, வெங்குரு
என்னும் சீகாழிப்பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி, அறம்
பொருள் இன்பம் வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன்
அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசை
யோடும் பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற
அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
1.060 திருத்தோணிபுரம் பண்
- பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வண்தரங்கப்
புனல்கமல மதுமாந்தி, பெடையினொடும்
ஒண்தரங்க
இசைபாடும் அளிஅரசே, ஒளிமதியத்
துண்டர்அங்கப்
பூண்மார்பர் திருத்தோணி புரத்துஉறையும்
பண்டரங்கர்க்கு
என்நிலைமை பரிந்துஒருகால் பகராயே.
பொழிப்புரை :வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில், மலர்ந்த
தாமரை மலர்களின் விளைந்ததேனை வயிறார உண்டு, தன் பெண் வண்டோடு களித்து, சிறந்த
அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு
கொண்டு, ஒளிபொருந்திய
இளம்பிறையை முடியிற் சூடியவரும், எலும்பு மாலைகளை அணிகலனாகப் பூண்ட
மார்பினருமாகிய, திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு, அவரிடம்
எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக.
பாடல்
எண் : 2
எறிசுறவம்
கழிக்கானல் இளங்குருகே, என்பயலை
அறிவுறாது
ஒழிவதுவும் அருவினையேன் பயன்அன்றே,
செறிசிறார்
பதம்ஓதும் திருத்தோணி புரத்து உறையும்
வெறிநிறார்
மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.
பொழிப்புரை :எதிர்ப்பட்டனவற்றைக் கொல்லும்
இயல்பினவாகிய சுறா மீன்கள் நிறைந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில்
வாழும் இளங்குருகே! என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும்
நீக்குதற்கரிய என் வினைப்பயன் அன்றோ? அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி, பத
மந்திரங்களை ஓதிப்பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரும் முடிமீது மணமும்
நிறமும் பொருந்திய மலர்க்கண்ணி சூடியவருமான சிவபிரானாருக்கு என் நிலைமையைக்
கூறுவாயாக.
பாடல்
எண் : 3
பண்பழனக்
கோட்டகத்து வாட்டம்இலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின்
வாரணமே, கடுவினையேன் உறுபயலை,
செண்பகம்சேர்
பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துஉறையும்
பண்பனுக்குஎன்
பரிசுஉரைத்தால் பழிஆமோ மொழியாயே.
பொழிப்புரை :பண்படுத்தப்பட்ட வயல்களின் கரைகளில்
முளைத்த சம்பங்கோரைகளின் இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக்
கொண்டையை உடைய கோழியே! சண்பக மரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகளின்
பயனாய் அவனைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால்
உனக்குப் பழி விளையுமோ? மொழிவாயாக.
பாடல்
எண் : 4
காண்தகைய
செங்கால்ஒண் கழிநாராய், காதலால்
பூண்தகைய
முலைமெலிந்து பொன்பயந்தாள் என்று,வளர்
சேண்தகைய
மணிமாடத் திருத்தோணி புரத்துஉறையும்
ஆண்தகையாற்கு
இன்றேசென்று அடிஅறிய உணர்த்தாயே.
பொழிப்புரை :உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த
கால்களை உடைய நாரையே! `காதல் மிக்கூர்தலால் அணிகலன்களைப்
பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து பசலை நோய் பூக்கப்பெற்று உன் அடியவள்
வருந்துகிறாள்` என்று வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை
இன்றே சென்று அடைந்து என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக.
பாடல்
எண் : 5
பாராரே
எனைஒருகால், தொழுகின்றேன், பாங்குஅமைந்த
கார்ஆரும்
செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்,
தேர்ஆரும்
நெடுவீதித் திருத்தோணி புரத்துஉறையும்
நீர்ஆரும்
சடையாருக்கு, என்நிலைமை நிகழ்த்தீரே.
பொழிப்புரை :அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த
செழு மையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத்
தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும்
பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய
கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக்
கூறுவீர்களாக.
பாடல்
எண் : 6
சேற்றுஎழுந்த
மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த
அன்னங்காள், விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த
திருத்தோணி புரத்துஈசன், துளங்காத
கூற்று
உதைத்த திருவடியே கூடுமா கூறீரே.
பொழிப்புரை :வளமான சேற்றிடை முளைத்து மலர்ந்த தாமரை
மலர்மேல் நெற்பயிர்கள் தம் கதிர்களையே சாமரையாக வீச, அரச போகத்தில் வீற்றிருக்கும்
அன்னங்களே! விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த
திருத்தோணிபுரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை
உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களாக.
பாடல்
எண் : 7
முன்றில்வாய்
மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள், பிரிவுஉறுநோய்
அறியாதீர், மிகவல்லீர்,
தென்றலார்
புகுந்துஉலவும் திருத்தோணி புரத்துஉறையும்
கொன்றைவார்
சடையார்க்கு,என் கூர்பயலை கூறீரே.
பொழிப்புரை :வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய
பனைமரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய
அன்றிற் பறவைகளே! நீவிர் பிரிவுத்துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக
வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய
சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக.
பாடல்
எண் : 8
பால்நாறும்
மலர்ச்சூதப் பல்லவங்கள் அவைகோதி
ஏனோர்க்கும்
இனிதாக மொழியும் எழில் இளம்குயிலே,
தேன்ஆரும்
பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துஅமரர்
கோனாரை
என்னிடைக்கே வர,ஒருகால் கூவாயே.
பொழிப்புரை :பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட
மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய
இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும்
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு
ஒருமுறையேனும் கூவுவாயாக.
பாடல்
எண் : 9
நற்பதங்கள்
மிகஅறிவாய், நான்உன்னை வேண்டுகின்றேன்,
பொற்புஅமைந்த
வாய்அலகில் பூவைநல்லாய், போற்றுகின்றேன்,
சொற்பதம்சேர்
மறையாளர் திருத்தோணி புரத்துஉறையும்
வில்பொலிதோள்
விகிர்தனுக்கு, என் மெய்ப்பயலை விளம்பாயே.
பொழிப்புரை :அழகமைந்த வாயாகியஅலகினை உடைய நாகண
வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய
செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால், இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கிறேன்.
சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில்வல்ல மறையவர் வாழும்
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற் பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என்
உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக.
பாடல்
எண் : 10
சிறைஆரும்
மடக்கிளியே, இங்கேவா, தேனொடுபால்
முறையாலே
உணத்தருவன், மொய்பவளத் தொடுதரளம்
துறைஆரும்
கடல் தோணி புரத்துஈசன், துளங்கும்இளம்
பிறையாளன்
திருநாமம், எனக்குஒருகால் பேசாயே.
பொழிப்புரை :அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என்
பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ
செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள
திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை `ஒரு
முறை` என்
செவி குளிரப் பேசுவாயாக.
பாடல்
எண் : 11
போர்மிகுத்த
வயல்தோணி புரத்து உறையும் புரிசடைஎம்
கார்மிகுத்த
கறைக்கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார்மிகுத்த
வரைமார்பன், சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த
தமிழ்வல்லார் சிவலோகம் சேர்வாரே.
பொழிப்புரை :தூற்றாப் பொலிகளை மிகுதியாகக் கொண்ட
வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய முறுக்கேறிய சடையினையும் கருமை
நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை, வளமையான தாமரை மலர் மாலையைச் சூடிய மலை
போன்ற மார்பினனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த புகழ் பொருந்திய இத்தமிழ்த்
திருப்பதிகத்தை ஓதி நினையவல்லவர் சிவலோகம் சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
3.
100திருத்தோணிபுரம் பண் -பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கரும்புஅமர்
வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டுஅருளி,
அரும்புஅமர்
கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால்,
பெரும்பகலே
வந்துஎன் பெண்மை கொண்டு பேர்த்தவர் சேர்ந்தஇடம்,
சுரும்புஅமர்
சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
பொழிப்புரை :சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட
மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது அன்பிற்குரிய மனையாளாகிய
இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின்
அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த அற்புதம்
செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு
திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம் வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற
நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் ஆகும்.
பாடல்
எண் : 2
கொங்குஇயல்
பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுஉமையாள்
பங்குஇய
லும்திரு மேனி எங்கும் பால்வெள்ளை நீறு அணிந்து,
சங்குஇயல்
வெள்வளை சோர வந்து,என் சாயல்கொண் டார் தமது ஊர்,
துங்குஇயல்
மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணி புரந்தானே.
பொழிப்புரை : இயற்கைமணம் பொருந்திய அழகிய கூந்தலையும், கொவ்வைக்கனி
போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா தேவியைத் தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி
முழுவதும் பால்போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான் எனது உள்ளத்தில்
புகுந்து என் வளையல் கழன்று விழுமாறு செய்து, எனது தோற்றப் பொலிவினைக் கெடுத்து
வீற்றிருந்தருளும் ஊர் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம்
என்னும் திருத்தலமாகும்.
பாடல்
எண் : 3
மத்தக்
களிற்றுஉரி போர்க்கக் கண்டு மாதுஉமை பேதுறலும்,
சித்தந்
தெளியநின்று ஆடி, ஏறுஊ,ர் தீவண்ணர் சில்பலிக்கு என்று
ஒத்தபடி
வந்து,என் உள்ளம் கொண்ட ஒருவர்க்கு இடம்போலும்,
துத்தநல்
இன்னிசை வண்டு பாடும் தோணி புரந்தானே.
பொழிப்புரை : மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப்
போர்த்துக் கொண்டதைக் கண்ட உமாதேவி அஞ்சவும், அவள் பயம் நீங்கி மனம் தெளியச்
சிவபெருமான் திருநடனம் செய்தார். அவர் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்புப் போன்ற
சிவந்த மேனியர். சிறுபிச்சை ஏற்க அதற்கேற்ற பிட்சாடனர் கோலத்தில் வந்து எனது
உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட ஒப்பற்றவராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துத்தம்
என்னும் நல்ல இன்னிசையை, வண்டுகள் பாடுகின்ற திருத்தோணிபுரம்
என்னும் திருத்தலமாகும்.
பாடல்
எண் : 4, 5, 6, 7
* * * * * * * * * *
பாடல்
எண் : 8
வள்ளல்
இருந்த மலை அத னைவலம் செய்தல் வாய்மையென
உள்ளம்
கொள்ளாது கொதித்து எழுந்து, அன்று எடுத்தோன் உரம் நெரிய,
மெள்ள
விரல்வைத்து, என் உள்ளம் கொண்டார் மேவும் இடம்போலும்,
துள்ஒலி
வெள்ளத்தின் மேல் மிதந்த தோணி புரந்தானே.
பொழிப்புரை : வேண்டுவோர் வேண்டுவதே வரையாது வழங்கும்
வள்ளலான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற கயிலைமலையை வலஞ்செய்து செல்லலே
உண்மைநெறி என்பதை உள்ளத்தில் கொள்ளாது, தனது திக்விஜயத்திற்கு இடையூறாக உள்ளது
என்று கோபம் கொண்டு அன்று திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனின்
நெஞ்சு நெரியும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய, என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், பிரளய காலத்தில் அலைகள் துள்ளி வருவதால்
உண்டாகிய ஒலியுடன் கூடிய வெள்ளத்தின்மேல் மிதந்து நிலைபெற்ற திருத்தோணிபுரம்
என்னும் திருத்தலமாகும்.
பாடல்
எண் : 9
வெல்பற
வைக்கொடி மாலும் மற்றை விரைமலர் மேல் அயனும்
பல்பற
வைப்படி யாய் உயர்ந்தும் பன்றிய தாய்ப்ப ணிந்தும்
செல்வுஅறநீண்டு,எம்
சிந்தை கொண்ட செல்வர் இடம்போலும்,
தொல்பற
வைசுமந்து ஓங்கு செம்மைத் தோணி புரந்தானே.
பொழிப்புரை : கருடக்கொடியுடைய திருமாலும், நறுமணமிக்க
தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய் உருக்கொண்டு கீழே
அகழ்ந்து சென்றும், அன்னப் பறவையாய் உருவெடுத்தும், காணற்கரியராய்
நெருப்புருவாய் நீண்டு எம் உள்ளத்தைக் கவர்ந்த செல்வரான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், தொன்மையான பறவைகள் சுமந்து ஓங்கியுள்ள
நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
பாடல்
எண் : 10
குண்டிகை
பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்
மண்டைகை
ஏந்தி மனங்கொள் கஞ்சி ஊணரும் வாய்மடிய,
இண்டை
புனைந்து,எருது ஏறிவந்து,என் எழில்கவர்ந் தார்இடமாம்,
தொண்டுஇசை
பாடல் அறாத தொன்மைத் தோணி புரந்தானே.
பொழிப்புரை : கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகியவற்றுடன் மலைகளில்
வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும் உண்கலத்தில்
கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் அடங்க, இண்டை
மாலை புனைந்து, இடப வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள் நீங்காத
பழமைவாய்ந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
பாடல்
எண் : 11
தூமரு
மாளிகை மாட நீடு தோணி புரத்து இறையை,
மாமறை
நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன், வாய்மையினால்
நாமரு
கேள்வி நலந்திகழும் ஞான சம்பந் தன்சொன்ன,
பாமரு
பாடல்கள் பத்தும் வல்லார் பார்முழுது ஆள்பவரே.
பொழிப்புரை : தூய்மையான வெண்ணிற மாளிகைகள், மாடங்கள்
நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
சிவபெருமானைப் போற்றி, நான்கு வேதங்களும், அவற்றின்
ஆறு அங்கங்களும் வல்லவனும், தானுண்ட ஞானப்பாலை நாவால் மறித்து
உண்மையான உபதேச மொழிகளாக நமக்குக் கேள்வி ஞானத்தைப் புகட்டி நன்மையைச்
செய்கின்றவனுமான திருஞானசம்பந்தன் அருளிய பாட்டிலக்கணங்கள் பொருந்திய இப்பாடல்கள்
பத்தினையும் பத்தியுடன் ஓத வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும் பேறு
பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
2.001திருப்பூந்தராய் பண்
- இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
செந்நெல்
அங்கழ னிப்பழ னத்துஅய லேசெழும்
புன்னை
வெண்கிழி யில்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி
நல்இமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு
செஞ்சடை யில்பிறை பாம்புடன் வைத்ததே.
பொழிப்புரை :செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய
சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான
துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும்
சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும்
திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய
பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.
பாடல்
எண் : 2
எற்று
தெண்திரை எறிய சங்கினொடு இப்பிகள்
பொன்தி
கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி
நல்இமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்றம்
ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.
பொழிப்புரை :எறிகின்ற தெளிந்த கடல் அலைகளில் ஏறிவந்த
சங்குகளும் இப்பிகளும் பொன்போல் விளங்கும் தாமரைகள் மலர்ந்த வயல்களில் வந்து
புகும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய
திருவடிகளை உடைய இறைவரே! அயிராவணம் முதலிய ஊர்திகள் இருக்க விடையேறி வருதல் உமக்கு
ஏற்ற தன்மைத் தாகுமோ? சொல்வீராக.
பாடல்
எண் : 3
சங்கு
செம்பவ ளத்திரள் முத்துஅவை தாங்கொடு
பொங்கு
தெண்திரை வந்துஅலைக் கும்புனல் பூந்தராய்த்
துங்க
மால்களிற் றின்உரி போர்த்துஉகந் தீர்சொலீர்
மங்கை
பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பதே.
பொழிப்புரை :பொங்கி வரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு
செம்பவளம் முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து வீசும் நீர்வளம் சான்ற பூந்தராய்
என்னும் சீகாழிப்பதியில் உயரிய பெரிய களிற்றுயானையை உரித்து அதன் தோலைப் போர்த்து
மகிழ்ந்துறையும் இறைவரே! உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில்
ஒன்றுவித்துள்ள மாண்பு யாதோ? சொல்வீராக.
பாடல்
எண் : 4
சேம
வன்மதில் பொன்அணி மாளிகை சேண்உயர்
பூம
ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம
னும்அர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன்
வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.
பொழிப்புரை :பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும்
பொன்னால் அழகுறுத்தப்பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர்மணம் கமழும் சோலைகளும்
சூழ்ந்துள்ள பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், திங்களும் பாம்பும் தங்கிய
செஞ்சடையுடையவராய் எழுந்தருளிய இறைவரே! உயிர்கட்குப் போகத்தின் மேல் அவாவினை
விளைக்கும் மன்மதன் வெண்பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து அழித்தது ஏனோ? சொல்வீராக.
பாடல்
எண் : 5
பள்ளம்
மீன்இரை தேர்ந்துஉழ லும்பகு வாயன
புள்ளு
நாள்தொறும் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு
மான்மறி ஏந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள
நீர்ஒரு செஞ்சடை வைத்த வியப்பதே.
பொழிப்புரை :நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை
இரையாகத் தேர்ந்து கொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள், நாள்தோறும், பல
இடங்களிலிருந்தும் வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும்
சீகாழிப்பதியில், துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய செங்கையை உடைய சிவபிரானே!
பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய
வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
பாடல்
எண் : 6
மாதுஇங்கிய
மங்கையர் ஆட மருங்குஎலாம்
போதில்
அங்கமலம் மதுவார் புனல் பூந்தராய்ச்
சோதி
அம்சுடர் மேனிவெண் ணீறுஅணி வீர்சொலீர்
காதி
ல்அம்குழை சங்கவெண் தோடுஉடன் வைத்ததே.
பொழிப்புரை :அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர்
மருங்கெலாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம் நிறைந்துள்ள தேனை ஒழுக
விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், ஒளி
மிக்க அழகிய தமது திருமேனியில் வெண்ணீறு அணிந்து எழுந்தருளிய இறைவரே! காதுகள்
இரண்டனுள் ஒன்றில் குழையையும் ஒரு காதில் சங்கத்தோட்டையும் அணிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
பாடல்
எண் : 7
• * * * *
பாடல்
எண் : 8
வருக்கம்
ஆர்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள்
சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு
மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன்
ஆற்றல் அழித்துஅருளாக்கிய ஆக்கமே.
பொழிப்புரை :இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண்
குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும்
கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில்
எழுந்தருளியிருந்து, செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல்
காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய
ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
பாடல்
எண் : 9
வரிகொள்
செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை
நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி
பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய
மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே.
பொழிப்புரை :மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய
கயல்மீன்கள் பாயும் நீர் நிலை சூழ்ந்ததும், மதில்கள் சூழ்ந்து நீண்டு உயர்ந்த
மாடமாளிகைகள் விளங்குவதுமான பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், வேதங்களைப்
பாடியும், இசைப்
பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசியும் எழுந்தருளிவிளங்கும் இறைவரே! கரிய திருமாலும்
பிரமனும் உம்மைத் தேடிக் காண இயலாமைக்குரிய காரணம் யாதோ? சொல்வீராக.
பாடல்
எண் : 10
வண்டல்
அம்கழ னிம்மடை வாளைகள் பாய்புனல்
புண்டரீகம்
மலர்ந்து மதுத் தரு பூந்தராய்த்
தொண்டர்
வந்துஅடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர்
சாக்கியர் கூறிய தாம்குறி இன்மையே.
பொழிப்புரை :வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின்
மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள் மலர்ந்து தேனைத் தரும்
பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த
பழமையான திருவடிகளை உடைய இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும்
பொருளற்ற பழிமொழிகட்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
பாடல்
எண் : 11
மகர
வார்கடல் வந்துஅண வும்மணல் கானல்வாய்ப்
புகலி
ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ
னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர்
தீவினை, நல்வினை யோடுஉட னாவரே.
பொழிப்புரை :சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர்
வந்து சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளைக் கொண்டுள்ள புகலிப்பதியில் தோன்றிய
ஞானசம்பந்தன், அழகு மிக்க பூந்தராயில் எழுந்தருளிய இறைவரைப் பரவிப் பாடிய
இப்பதிகப் பாடல் பத்தையும் ஓதவல்லவர் தீவினை அகல்வர். அவர்கள் நல்வினை உடையவர்
ஆவர்.
திருச்சிற்றம்பலம்
3.002
திருப்பூந்தராய் பண்
- காந்தார பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பந்து
சேர்விர லாள்,பவ ளத்துவர்
வாயி னாள்,பனி மாமதி போல்முகத்து
அந்தம்
இல்புக ழாள்,மலை மாதொடும், ஆதிப்பிரான்
வந்து
சேர்விடம், வானவர் எத்திசையும்
நிறைந் துவலம் செய்து, மாமலர்
புந்தி
செய்துஇறைஞ் சிப்பொழி, பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :பந்து வந்தணைகின்ற விரல்களையும் , பவளம்
போன்று சிவந்த வாயினையும் , குளிர்ந்த முழுமதி போன்ற முகத் தையும் , அளவற்ற
புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும்
சிவ பெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும் . அங்குத் தேவர்கள்
எல்லாத் திசைகளிலும் நிறைந்து , வலம் வந்து , மனத்தால் , நினைந்து , உடலால் , வணங்கி , சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர் .
அத்தலத்தினை நாம் வணங்குவோமாக !
பாடல்
எண் : 2
காவி
அம்கருங் கண்ணி னாள்,கனித்
தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்நகைத்
தூவி
அம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்,
தேவி
யும்திரு மேனிஓர் பாகமாய்,
ஒன்றுஇ ரண்டுஒரு மூன்றொடு சேர்பதி
பூவில்
அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும், கொவ்வைக்கனிபோல்
சிவந்த வாயினையும், ஒளிவீசுகின்ற முத்துப் போன்ற வெண்மையான
பற்களையும், இறகுகளையுடைய பெண் அன்னப்பறவை போன்ற நடையையும், பின்னிய
மென்மையான கூந்தலையும் உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு
இறைவன் எழுந்தருளியுள்ள இடம், மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற
பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய். தாமரை மலரில்
வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும் அத்திருத்தலத்தை நாம்
வணங்குவோமாக !
பாடல்
எண் : 3
பைஅ ராவரும் அல்குல் மெல்இயல்
பஞ்சின் நேர்அடி வஞ்சிகொள் நுண்இடைத்
தைய
லாள்ஒரு பால்உடை எம்இறை சாரும்இடம்,
செய்எ
லாம் கழு நீர்கம லம்மலர்த்
தேறல் ஊறலில் சேறு உலராதநல்
பொய்இ
லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :பாம்பின் படம் போன்ற அல்குலையும் , பஞ்சு
போன்ற மென்மையான அடியையும் , வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும்
உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன்
விரும்பி எழுந்தருளியுள்ள இடம் , செங்கழுநீர்ப் பூக்கள் , தாமரைப்
பூக்கள் இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத வயல்களையும் , பொய்ம்மையிலாத
அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம்
வணங்குவோமாக !
பாடல்
எண் : 4
முள்ளி
நாள்முகை மொட்டுஇயல் கோங்கின்
அரும்பு தேன்கொள் குரும்பைமூ வாமருந்து
உள்
இயன்றபைம் பொன்கல சத்து இயல் ஒத்தமுலை
வெள்ளி
மால்வரை அன்னதுஓர் மேனியின்
மேவி னார்பதி, வீமரு தண்பொழில்
புள்
இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :தாமரைமொட்டு, கோங்கின் அரும்பு, ஊறும்
தேனை உள்ளே கொண்ட இளநீர், மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய
பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திருமுலைகளை யுடைய உமாதேவியாரை, திருநீறு
பூசப் பெற்றமையால் வெள்ளிமலைபோல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு
சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற, மலர்கள்
நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம்
வணங்குவோமாக !
பாடல்
எண் : 5
பண்
இயன்றுஎழு மென்மொழி யாள்பகர்
கோதை ஏர்திகழ் பைந்தளிர் மேனிஓர்
பெண்இயன்ற
மொய்ம்பில் பெருமாற்கு இடம், பெய்வளையார்
கண்இ
யன்றுஎழு காவிச் செழுங்கரு
நீலம் மல்கிய காமரு வாவிநல்
புண்ணியர்
உறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற
மென்மொழியாளாய், நிறைந்த கூந்தலையும் , பசுந்தளிர் போன்ற மேனியையுமுடைய
உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளி
யிருக்கும் இடம், வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள்
நிறைந்த அழகிய குளங்களையுடையதும், பசு புண்ணியங்கள், பதி
புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப் பூந்தராய்.
அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !
பாடல்
எண் : 6
வாள்நி
லாமதி போல்நுத லாள்மட
மாழை ஒண்க ணாள்வண்த ரளந்நகை
பாண்
நிலாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்
சேண்நி
லாத்திகழ் செஞ்சடை எம்அண்ணல்
சேர்வது, சிக ரப்பெருங் கோயில்சூழ்
போழ்நிலா
நுழை யும்பொழில் பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற
நெற்றியையும் , மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான முத்துக்களைப் போன்ற
பற்களையும் , பாட்டில் விளங்குகின்ற இனிய இசைபோன்ற மொழியினையும் உடைய
பாவையாகிய உமாதேவி யோடு , வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற
சிவந்த சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடமாவது , உயர்ந்த
சிகரத்தையுடைய பெருங் கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய
திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !
பாடல்
எண் : 7
கார்உ
லாவிய வார்குழ லாள்கயல்
கண்ணி னாள்புயல் கால்ஒளி மின்இடை
வார்உ
லாவிய மென்முலை யாள்மலை மாதுஉடனாய்
நீர்உ
லாவிய சென்னி யன்மன்னி
நிகரும் நாமம் முந் நான்கு நிகழ்பதி
போர்உ
லாஎயில் சூழ்பொழில் பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும், கயல்மீன்
போன்ற கண்களையும், மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற
இடையையும் கச்சணிந்த மென்மையான கொங்கைகளையும் உடைய மலைமகளான உமாதேவியோடு, கங்கையைத்
தாங்கிய முடியையுடைய சிவபெருமான் நிலைபெற்றிருக்கும் பதி,
பன்னிரு
திருப்பெயர்கள் கொண்டு தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த, போர்க்கருவிகள்
பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த, சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய்.
அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !
பாடல்
எண் : 8
காசை
சேர்குழ லாள்கயல் ஏர்தடம்
கண்ணி. காம்புஅன தோள்கதிர் மென்முலைத்
தேசு
சேர்மலை மாதுஅம ருந்திரு மார்புஅகலத்து
ஈசன்
மேவும் இருங்கயி லை எடுத்
தானை அன்றுஅடர்த் தான், இணைச்
சேவடி
பூசை
செய்பவர் சேர்பொழில் பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :காயாம்பூப் போன்ற கருநிறமுடைய
கூந்தலையும், கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும், மூங்கில்
போன்ற தோள்களையும், கதிர்வீசும் மென்மை வாய்ந்த
கொங்கைகளையும், உடைய ஒளி பொருந்திய மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட
அழகிய அகன்ற மார்பினையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப்
பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும்
வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும், ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய்
என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !
பாடல்
எண் : 9
கொங்கு
சேர்குழ லாள்நிழல் வெண்நகைக்
கொவ்வை வாய்க்கொடி ஏர்இடை யாள்உமை
பங்கு
சேர்திரு மார்பு உடையார், படர் தீ உருவாய்
மங்குல்
வண்ணனும் மாமல ரோனும்
மயங்க நீண்டவர்,
வான்மிசை வந்துஎழு
பொங்கு
நீரில் மிதந்தநல் பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :மணம் பொருந்திய கூந்தலையும், ஒளி
பொருந்திய வெண்ணிறப் பற்களையும், கொவ்வைக்கனி போன்ற வாயினையும், கொடி
போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய
மார்பினையுடையவராய், கார்மேக வண்ணனான திருமாலும், தாமரை
மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய்
ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும் இடம், வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும்
அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !
பாடல்
எண் : 10
கலவ
மாமயி லார்இய லாள்,கரும்பு
அன்ன மென்மொழி யாள்,கதிர்
வாள்நுதல்
குலவு
பூங்குழ லாள்,உமை கூறனை, வேறுஉரையால்
அலவை
சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்,
ஆக்கி னான்தனை நண்ணலும் நல்கும்நல்
புலவர்
தாம்புகழ் பொன்பதி பூந்தராய் போற்றுதுமே.
பொழிப்புரை :தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க், கரும்பு
போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும், கதிர் வீசுகின்ற ஒளியுடைய
நெற்றியுடையவளும், வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய
கூந்தலையுடையவளுமான உமாதேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான். கூறத்தகாத
சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும், சமணர்களையும் பிறக்கும்படி செய்தவன்
அவனே. அப்பெருமானை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால்
சிவபோகத்தைத் தருவான். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள்
போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக.
பாடல்
எண் : 11
தேம்பல்
நுண்இடை யாள்,செழுஞ் சேல்அன
கண்ணி யோடு அண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொ
ழில்திகழ் பொன்பதி பூந்தராய் போற்றுதும்என்று
ஓம்பு
தன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞான சம்பந்தன் ஒண்தமிழ் மாலைகொண்டு
ஆம்படி
இவை ஏத்தவல் லார்க்குஅடை யாவினையே.
பொழிப்புரை :மெலிந்த சிற்றிடையையும் , செழுமையான
சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள் தலைவனான சிவபெருமான்
வீற்றிருக்கும் இடம் , தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன்
விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய் . அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப்
பெருமையைப் போற்றி வளர்க்கின்ற முத்தமிழ் , நான்மறை இரண்டிற்குமுரிய
திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய இப்பதிகத்தினைத்
தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை வினைகள் வந்தடையா .
திருச்சிற்றம்பலம்
----- தொடரும் -----
No comments:
Post a Comment