அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வேத வெற்பிலே
(திருக்கழுக்குன்றம்)
திருக்கழுக்குன்றத்து
முருகா!
அடியேனுக்கு நல்லறிவு
தந்து ஆட்கொள்
தான
தத்த தான தத்த தான தத்த ...... தனதான
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
வேத
வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ......
முடிதோய
ஆத
ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி ......
புகல்வாயே
காது
முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ......
யிமையோரை
ஓது
வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
வேத
வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் ...... அபிராம!
வேடுவச்சி பாத பத்ம மீது செச்சை ......
முடிதோய,
ஆதரித்து
வேளை புக்க ஆறு இரட்டி ...... புய நேய!
ஆதரத்தொடு ஆதரிக்க ஆன புத்தி ......
புகல்வாயே,
காதும்
உக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாம்,
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி ......
இமையோரை
ஓது
வித்த நாதர் கற்க, ஓது வித்த ......
முநிநாண,
ஓர் எழுத்தில் ஆறுஎழுத்தை ஓது வித்த ......
பெருமாளே.
பதவுரை
வேத வெற்பில --- வேதாசலமாகிய திருக்கழுக்குன்ற
மலை மேலும்,
புனத்தில் --- வள்ளிநாயகியாரது தினைப்புனத்திலும்,
மேவி நிற்கும் --- விரும்பி நிற்கும்,
அபிராம --- சிறந்த பேரழகுடையவரே!
வேடுவச்சி --- வேட்டுவகுல விளக்காகிய வள்ளியம்மையாருடைய,
பாத பத்ம மீது --- திருவடித் தாமரை மீது,
செச்சை முடி தோய --- வெட்சி மலரை அணிந்துள்ள தேவரீருடைய
திருமுடி படியுமாறு பணிந்த,
ஆதரித்து வேளை புக்க --- அன்பு வைத்து தக்க சமயம்
அறிந்து சென்ற,
ஆறு இரட்டி புய நேய --- பன்னிரு புயாசலங்களையுடைய
நண்பரே!
காதும் --- மறநெறி நின்றாரைக் கொல்லுந் தன்மை
யுடையவரும்,
உக்ர --- பயங்கரமான வருமாகிய,
வீர பத்ரகாளி வெட்க --- வீரபத்ரகாளி அம்மையார்
நாணுமாறு,
மகுடம் ஆகாச முட்ட --- திருமுடி ஆகாயத்தில முட்டுமாறு
வளர்ந்து நின்று,
வீசி விட்ட காலர் --- தங்கன் முதலியோரை எடுத்து
வீசி எறிந்த வீரபத்திரர்,
பத்தி இமையோரை --- அன்பின் மிக்க தேவர்கள் முதலியோரை,
ஓதுவித்த நாதர் கற்க --- வேதசிவாகமங்களைக் கற்பித்த
சிவபெருமான் கற்றுக் கொள்ளுமாறும்,
ஓதுவித்த முனி நாண --- பிரணவ மந்திரார்த்தத்தைச்
சொல்வதற்கு முயன்ற பிரமதேவன் வெட்குமாறும்,
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த --- ஓர் எழுத்தாகிய
பிரணவமந்திரத்தில் ஆறெழுத்துக்களையும் அடக்கி உபதேசித்த,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
ஆதரத்தோடு
--- கருணையோடு,
ஆதரிக்க --- அடியேனைக் காப்பாற்றும் பொருட்டு,
ஆன புத்தி புகல்வாயே --- அடியேனுக்குத் தகுந்த
அறிவைச் சொல்லியருள்வீர்.
பொழிப்புரை
வேத மலையாகிய திருக்கழுக்குன்றத்திலும், வள்ளியம்மையாருடைய தினைப் புனத்திலும்
விரும்பி வாழுகின்ற கட்டழகின் மிக்கவரே!
வேட்டுவ குலத்தில் அவதரித்த
வள்ளிநாயகியாரது திருவடித் தாமரையில் வெட்சிமலைரைச் சூடியுள்ள உமது திருமுடி தோய
வணங்கி, அவ்வம்மையார் மீது
அன்பு வைத்து சமயமறிந்து தினைப்புனம் சென்ற பன்னிருபுயா சலங்களை உடைய நண்பரே!
கொல்லுந் தன்மையும் பயங்கரமும், வீரமும் உடைய பத்ரகாளி நாணுமாறும், மகுடம் ஆகாயம் வரை செல்லுமாறும்
பேருருக் கொண்டு, தக்கனாதியரை எடுத்து
வீசி எறிந்த வீரபத்திரர், அன்புமிக்க அமரர்
முதலியோருக்கு வேத சிவாகமங்களைக் கற்பித்த சிவபெருமான் கற்கவும், பிரணவ மந்திரார்த்தத்தை விளக்க முயன்ற
பிரமதேவன் நாவும், ஓ என்ற ஓரெழுத்தில்
ஆறு எழுத்தையும் ஓதுவித்த பெருமிதமுடையவரே!
அன்புடன் அடியேனைக் காப்பாற்றுதற்கு ஆன
நல்லறிவைப் புகன்று அருள்வீர்.
விரிவுரை
வேதவெற்பு
---
இது
திருக்கழுக்குன்றம், வேதங்கள் மலையுருக்
கொள்ள அதன்மீது வேத அதிபராகிய சிவபெருமான் எழுந்தருளியதால் வேதாசலம் எனப்படும். அசலம்
- மலை.
அஷ்ட
வசுக்கள், நந்தி, இந்திரன், பசு, வராகம் முதலியோர் இத்தலத்தில வழிபட்டு
நற்பேறு பெற்றனர். சண்டர் பிரசண்டர் என்னும் இருவரும் கிருதயுகத்திலும், சம்பாதி சடாயு என்னும் இருவர்
திரேதாயுகத்திலும், சம்புகுத்தர்
மாகுத்தர் என்னும் இருவரும் துவாபரயுகத்திலும், கழுகு உருவுடன் வழிபட்டு நற்கதி
பெற்றனர். இக்கலியுகத்தில் புஷா,
விருத்தா
என்னுந் தவசிகள் கழுகு உருவுடன் இன்றும் இருந்து வருவது கண்கூடு. பன்னிரண்டு
ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் சங்கு தீர்த்தம் என்ற அழகிய தடாகம் ஒன்று
உண்டு. இப்பொழுதும் அத்தீர்த்தத்தில் முழுகி மலைவலம் வந்து நோய் தீரப் பெறுவோர்
பலர்.
மிகப் புனிதமான
க்ஷேத்திரம், மாணிக்கவாசகருக்கு
சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம்.
“கணக்கிலந்
திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக் குன்றிலே”
காதும்
உக்ர …....... கால ---
தக்கன்
சிவபெருமானிடம் தவமிருந்து வரம் பல பெற்று தருக்குற்று, சிவபெருமானை மதியாது தேவர்களைப் பொருள்
படுத்தி வேள்வி செய்யத் தொடங்க,
நன்றி
கொன்றார் எய்து நெறி இதுவே என்று உலகம் உணர, சிவபெருமான் வீரபத்திரரை
யுண்டாக்கியனுப்பி தக்கயாகத்தை யழித்த வரவாற்றைக் கந்தபுராணத்திலும்
சிவமகாபுராணத்திலும் காண்க.
பத்தி
இமையோர்
---
வரிசையாயுள்ள
தேவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஓதுவித்த
நாதர்
---
சகல
தேவர்களையும் ஓதுவித்தவர் சிவபெருமானேயாவார்.
ஓதுவித்த
முனிநாண
---
“பிரணவ மந்திரப்
பொருள் யாது” என்று பிரமதேவனை குமாரக் கடவுள் வினாவ, பிரணவப் பொருள் முருகவேளே என்று உணராத
பிரமன், முருகவேளுக்கு
அதனையுரைக்கத் தொடங்கினான். அவ்வாறு தொடங்கிய அவன், ஆறுமுகக் கடவுள் சிவபெருமானுக்கே அதனை
உபதேசிக்கும்போது, தன் அறியாமையை எண்ணி
நாணங் கொண்டனன்.
ஓரெழுத்தில்
ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே ---
ஓரெழுத்து
பிரணவ மந்திரம், ஓ, இதில் ஆறெழுத்தாவன, அ, உ, ம, நாதம், விந்து, கலை என்பன. இதன் விரிவை தக்கோர் வாய்க்
கேட்டுத் தெளிக.
கருத்துரை
வேதவெற்பிலும் தினைப்புனத்திலும் வாழும்
அழகரே! வள்ளி மணவாளரே! சிவனாருக்கு ஒரு
மொழி யுரைத்த குருபரரே! அடியேனுக்கு நல்லறிவைப் புகன்று ஆட்கொள்வீர்.
No comments:
Post a Comment