திரு ஓத்தூர்
தொண்டை நன்னாட்டுத்
திருத்தலம்.
செய்யாறு, திருவத்தூர், திருவத்திபுரம் என்று அறியப்படுகிறது
காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே 28 கி.மீ. தொலைவில் வந்தவாசி செல்லும்
சாலையில் இத் திருத்தலம் இருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், ஆரணி ஆகிய இடங்களிலிருந்து இத் திருத்தலத்திற்கு
பேருந்து வசதிகள் இருக்கின்றன.
திருக்கோயில் ஊருக்குச் சற்று தள்ளி, திருவோத்தூர் என்னும் பகுதியில்
சேயாற்றின் கரையில் உள்ளது. ஓத்து என்றால் வேதம். வேதத்திற்குப் பொருள்
சொல்லப்பட்ட தலம். ஆதலின், திருவோத்தூர் ஆனது. இப்போது திருவத்திபுரம் என்று
மருவி உள்ளது.
இறைவன்
-- வேதபுரீசுவரர், வேதநாதர்
இறைவி
-- பாலகுசாம்பிகை, இளமுலைநாயகி
தலமரம் --
பனை
பதிகம் -- திருஞானசம்பந்தர்
- பூத்தேர்ந்து
இத்திருக்கோயில் 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது.
இராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து
2வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன்
மண்டபத்திற்கும், 2வது கோபுர
வாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. நந்தி
சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி
காட்சியளிக்கறது. இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும்
வேதத்தை ஓதுவிக்கும் போது, தக்கவர் தவிர வேறு
யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இறைவன் சுயம்புலிங்கமாக வேதபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் காட்சி அளிக்கிறார்.
ஆவுடை சதுர வடிவமான அமைப்புடையது.
வெளிப் பிராகாரம் வலம் வரும்போது
வடக்குப் பிராகாரத்தில் தலமரமான பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத்
தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள் (2) திருப்பனையூர் (3) திருவன்பார்த்தான் பனங்காட்டூர்
(திருப்பனங்காடு) (4) புறவார் பனங்காட்டூர்
என்பன. உள் சுற்றுப் பிராகாரத்தில் தென்கிழக்கில் கருங்கல்லால் ஆன பனைமரமும், அதனடியில் ஒரு சிவலிங்கமும், சம்பந்தர் ஆண்பனை பெண்பனை ஆகுமாறு
பாடிக்கொண்டு நிற்கும் காட்சியும் சிற்பமாக அமைந்துள்ளதைக் காணலாம்..
உள் பிராகாரத்தில் வலம் வரும்போது
விநாயகர், சுப்பிரமணியர், நாகநாதர், நடராஜர், நாயன்மார்கள், சப்தமாதாக்கள் ஆகியோரின் சந்நிதிகள்
உள்ளன. இப்பிபராகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இந்த இலிங்கங்களை தரிசனம்
செய்தால் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவானைக்கா, சிதம்பரம் மற்றும் காளத்தி ஆகிய
தலங்களைத் தரிசித்த பலனுண்டு. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தனிக் கோயிலாகத் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் காட்சி தருகின்றனர்.
மகா மண்டபத்தின் நடுவில் நின்றால்
சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், நவக்கிரகம் ஆகிய இவை அனைத்தையும் ஒரே
நேரத்தில் தரிசனம் செய்யலாம். இவ்வமைப்பு வேறு எங்கும் காணமுடியாது. மேலும்
உட்பிராகாரத்தில் உயரமான பீடத்தில் அமைந்துள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் நாகதோஷம்
நிவர்த்தியாகும்.
அம்மன் பாலகுஜாம்பிகை தனிக்கோயிலில்
தரிசனம் தருகிறாள். சுற்றுப் பிராகாரம் உள்ளது. நின்ற திருக்கோலத்தில் நான்கு
திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். ஆலயத்திற்கு வெளியே உள்ள சேயாறும், வெளிப் பிராகாரத்திலுள்ள கல்யாணகோடி தீர்த்தமும்
இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக உள்ளன. சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள்
சந்நிதியும் இருக்கிறது
முருகப் பெருமான் இறைவனை பூஜித்த
தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர்
சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன்
மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதப்
பெருமான் அருளிய திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.
வள்ளல் பெருமான் தாம் பாடியருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "ஓகை இலா வீ
தூரமா ஓட,
மெய்த்தவர்கள்
சூழ்ந்த திருவோத்தூரில் வேதாந்த உண்மையே" என்று பாடி உள்ளார்.
காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருவோத்தூரில் ஓர் அன்பர் இருந்தார். அவர்
சிவபெருமானுக்கு எனப் பனைகள் அமைத்து வளர்த்தார். அப் பனைகள் ஆண் பனைகள் ஆகிக் காயாது
இருந்தன. அதைக் கண்ட சமணர்கள்,
"உமது
ஆம் பனைகள் காய்க்குமா? சிவனருளால் காய்க்கச்
செய்ய முடியுமா?" என்று பரிகசித்தனர்.
அதனால் அன்பர் மனக் கவலை உற்றார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது
சிவனடியார் வருந்தி அவரிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் திருக்கோயிலினுள் ஆண்டவனை
நினைந்து உருகினார். "பூத்தேர்ந்து ஆயன கொண்டு" என்னும்
திருப்பதிகத்தைப் பாடினார். திருக்கடைக்
காப்பிலே, "குறும்பை ஆண் பனை ஈன்
குலை" என்று அருளிச் செய்தார். ஆண் பனைகள் எல்லாம் பெண் பனைகளாக மாறின.
ஒவ்வொன்றிலும் குலைகள் தொங்கின,
காய்கள்
பழுத்தன. சமணர்களில் சிலர் சிவநெறி நின்றனர். பலர் ஊரை விட்டு ஓடினர். பனைகள்
பிள்ளையார் அருள் பெற்றதால், தங்கள் கால முடிவில்
சிவமாயின.
திருஞானசம்பந்தப்
பெருமான் திருவோத்தூருக்கு எழுந்தருளி, திருப்பதிகம்
பாடிப் பணிந்த வரலாற்றை, தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடியருளிய
பெரியபுராணத்தின் வழி வழிபட்டு மகிழலாம்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரியபுராணப்
பாடல் எண் : 973
மங்கை
பாகர் திருவருளால்
வணங்கிப் போந்து, வடதிசையில்
செங்கண்
விடையார் பதிபலவும்
பணிந்து, புகலிச் செம்மலார்
துங்க
வரைகள் கான்பலவும்
கடந்து, தொண்டைத்
திருநாட்டில்
திங்கள்
முடியார் இனிதுஅமரும்
திருவோத் தூரைச்
சேர்வுற்றார்.
பொழிப்புரை : ஞானசம்பந்தர்
உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவருளால் வணங்கி விடைபெற்றுச் சென்று, சிவந்த கண்களையுடைய விடையை ஊர்தியாகக்
கொண்ட இறைவரின், வடக்கில் உள்ள பதிகள்
பலவற்றையும் வணங்கிச் சென்று, பெரிய மலைகளையும்
காடுகள் பலவற்றையும் கடந்து, திருத் தொண்டை
நாட்டில் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய இறைவர் இனிதாய் விரும்பி
வீற்றிருக்கின்ற `திருவோத்தூரைச்\' சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 974
தேவர்
முனிவர்க்கு ஓத்துஅளித்த
திருவோத் தூரில், திருத்தொண்டர்
தாஇல்
சண்பைத் தமிழ்விரகர்
தாம்அங்கு அணையக்
களிசிறந்து,
மேவுங்
கதலி தோரணங்கள்
விளக்கு நிரைத்து
நிறைகுடமும்
பூவும்
பொரியும் சுண்ணமும்முன்
கொண்டு போற்றி
எதிர்கொண்டார்.
பொழிப்புரை : தேவர்களுக்கும்
முனிவர்களுக்கும் மறைகளை ஓதுவித்து அருள் செய்த திருவோத்தூரில் வாழும்
திருத்தொண்டர் கள், குற்றம் அற்ற
சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ்வல்லுநரான ஞானசம்பந்தர் அங்கு வரவே, மிகவும் மகிழ்ந்து, வாழைகளையும் தோரணங்களையும்
விளக்குகளையும் நிரல்பட அமைத்து,
நிறை
குடங்களையும் பூவும் பொரியும் சுண்ணமும் என்ற இவற்றையும் முன்னே ஏந்திப்
போற்றிசெய்து எதிர் கொண்டனர்.
பெ.
பு. பாடல் எண் : 975
சண்பை
வேந்தர் தண்தரளச்
சிவிகை நின்றும்
இழிந்துஅருளி,
நண்பின்
மிக்க சீர்அடியார்
சூழ, நம்பர் கோபுரஞ்சூழ்
விண்பின்
னாகமுன் ஓங்கும்
வியன்பொன் புரிசை
வலங்கொண்டு,
பண்பு
நீடிப் பணிந்துஎழுந்து
பரமர் கோயில்
உள்அடைந்தார்.
பொழிப்புரை : சீகாழியில் தோன்றிய
பிள்ளையார், முத்துச்
சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய
அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர,
இறைவரின்
கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும்
வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப்
பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 976
வார
ணத்தின் உரிபோர்த்த
மைந்தர் உமையாள்
மணவாளர்,
ஆர
ணத்தின் உட்பொருளாய்
நின்றார் தம்முன்
அணைந்து, இறைஞ்சி,
நார
ணற்கும் பிரமற்கும்
நண்ணற்கு அரிய
கழல்போற்றும்
கார
ணத்தின் வரும்இன்பக்
கண்ணீர் பொழியக்
கைதொழுதார்.
பொழிப்புரை : சீகாழியில் தோன்றிய
பிள்ளையார், முத்துச்
சிவிகையினின்றும் இழிந்து, அன்பின் சிறப்புடைய
அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவர,
இறைவரின்
கோபுரத்தைச் சூழ்ந்து, வானமும் கீழ்ப்படும்
வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து வணங்கிப்
பண்பில் நீடிப் பணிந்து, எழுந்து, இறைவரின் திருக்கோயிலினுள் சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 977
தொழுது, விழுந்து, பணிந்து, எழுந்து,
சொல்மா லைகளால்
துதிசெய்து,
முழுதும்
ஆனார் அருள்பெற்றுப்
போந்து வைகி, முதல்வர்தமைப்
பொழுது
தோறும் புக்குஇறைஞ்சி,
போற்றி செய்துஅங்கு
அமர்வார்முன்
அழுது
வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்துஒன்று
அறிவிப்பார்.
பொழிப்புரை : தொழுது நிலத்தில் விழுந்து
பணிந்து எழுந்து, சொல் மாலைகளால்
போற்றி, எல்லாமாய் நின்ற
இறைவரின் திரு வருள் பெற்று, வெளியே வந்து
தங்கியிருந்தவராய், இறைவரைக் காலங்கள்
தோறும் சென்று வணங்கிப் போற்றி,
அங்கு
விரும்பி இருப்பவரான அப்பிள்ளையாரின் திருமுன்பு, ஒரு தொண்டர் அழுது நின்று, சமணர்களின் தன்மை பற்றிய ஒரு செய்தியை
அறிவிக்கத் தொடங்கி,
பெ.
பு. பாடல் எண் : 978
"அங்கை அனல்ஏற்
றவர்க்குஅடியேன்
ஆக்கும் பனைகள்
ஆனஎலாம்,
மங்குல்
உறநீண்டு, ஆண்பனையாய்க்
காயா ஆகக் கண்டு, அமணர்
இங்கு
நீர்இட்டு ஆக்குவன
காய்த்தற்கு அடைவுஉண்
டோ? என்று
பொங்கு
நகைசெய்து இழித்துஉரைத்தார்,
அருள வேண்டும்"
எனப்புகல.
பொழிப்புரை : `உள்ளங்கையில் தீயினைக் கொண்ட இறைவற்கு
அடியவனாகிய யான், வளர்க்கும் பனை
மரங்கள் எல்லாம் மேக மண் டலம் பொருந்த நீண்டு வளர்ந்தும், ஆண் பனைகளாய்க் காய்க்காது இருப்பதைக்
கண்ட சமணர்கள், `இங்கு நீவிர் வைத்து
வளர்க்கும் பனை மரங்கள் காய்ப்பதற்கு வழியுண்டோ?' என்று எள்ளி மிகவும் நகைத்து, இழிவாய்ப் பேசுகின்றனர்; தாங்கள் அவ்விழிவைப் போக்கி அப் பனைகள்
காய்க்குமாறு அருள் செய்ய வேண்டும்'
என
விண் ணப்பிக்க,
பெ.
பு. பாடல் எண் : 979
பரம
னார்தம் திருத்தொண்டர்
பண்பு நோக்கி, பரிவுஎய்தி,
விரவு
காத லொடும்விரைந்து
விமலர் கோயில்
புக்குஅருளி,
அரவும்
மதியும் பகைதீர
அணிந்தார் தம்மை
அடிவணங்கி,
இரவு
போற்றித் திருப்பதிகம்
இசையில் பெருக
எடுத்துஅருளி.
பொழிப்புரை : சிவபெருமானது
திருத்தொண்டரின் அடிமைத் திறத்தைத் திருவுளங்கொண்ட திருஞானசம்பந்தர், மிகவும் இரங்கி, பொருந்திய பெருவிருப்பத்துடன் விரைந்து
சென்று, இறைவரின்
திருக்கோயிலுக்குள் புகுந்து, பாம்பையும்
பிறைச்சந்திரனையும் பகை தவிர்த்துத் தலையில் சூடிய சிவபெருமானின் திருவடிகளில்
விழுந்து வணங்கித் திருவருளை இரந்து `பூத்தேர்ந்தாயன\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பண்
இசை பெருகப் போற்றியருள,
குறிப்புரை : `பூத்தேர்ந்தாயன' எனத் தொடங்கும் பதிகம் பழந்தக்கராகப்
பண்ணிலமைந்ததாகும் (தி.1. ப.54).
பெ.
பு. பாடல் எண் : 980
விரும்பு
மேன்மைத் திருக்கடைக்காப்பு
அதனில் விமலர்
அருளாலே
"குரும்பை ஆண்
பனைஈனும்"
என்னும் வாய்மை
குலவுதலால்
நெருங்கும்
ஏற்றுப் பனைஎல்லாம்
நிறைந்த குலைக
ளாய்க்குரும்பை
அரும்பு
பெண்ணை ஆகி இடக்
கண்டோர் எல்லாம்
அதிசயித்தார்.
பொழிப்புரை : விரும்பத்தக்க மேன்மை
பொருந்திய திருக்கடைக்காப்பில்,
இறைவரின்
திருவருளால் `குரும்பைகளை ஆண்
பனைகள் ஈனும்' என்னும் வாய்மை
பொருந்தி விளங்குதலால், நெருங்கிய
அவ்வாண்பனைகள் எல்லாம், நிறைந்த குலைகளை
உடையனவாய்க் குரும்பையுடைய பெண் பனைகளாக மாறி விடவே, கண்டவர் அனைவரும் வியப்படைந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 981
சீரின்
மன்னும் திருக்கடைக்காப்பு
ஏற்றி, சிவனார் அருள்பெற்று,
பாரில்
நீடும் ஆண்பனைமுன்
காய்த்துப் பழுக்கும்
பண்பினால்,
நேரும்
அன்பர் தம்கருத்து
நேரே முடித்துக்
கொடுத்துஅருளி,
ஆரும்
உவகைத் திருத்தொண்டர்
போற்ற, அங்கண்
இனிதுஅமர்ந்தார்.
பொழிப்புரை : சிறப்பால் நிலைபெற்ற திருக்கடைக்காப்புச்
சாத்திப் பதிகத்தை நிறைவாக்கி, இறைவரின் திருவருளைப்
பெற்று, உலகத்தில் நீடிய
ஆண்பனைகள் முன்னே காய்த்துப் பழுக்கும் தன்மை வர, விரும்பும் அன்பரின் கருத்தை நேர்பட
முடித்துத் தந்து நிறைவான மகிழ்ச்சியடைய, திருத்தொண்டர்
போற்ற, அந்நகரத்தில் இனிதாய்
எழுந்தருளியிருந்தார் ஞானசம்பந்தர்.
பெ.
பு. பாடல் எண் : 982
தென்னாட்டு
அமண்மாசு அறுத்தார்தம்
செய்கை கண்டு
திகைத்து, அமணர்
அந்நாட்
டதனை விட்டுஅகல்வார்
சிலர்,"தம் கையில்
குண்டிகைகள்
என்ஆ
வனமற்று இவைஎன்று
தகர்ப்பார், இறைவன் ஏறுஉயர்த்த
பொன்னார்
மேனிப் புரிசடையான்
அன்றே" என்று
போற்றினார்.
பொழிப்புரை : பாண்டிய நாட்டில்
சமணமான குற்றத்தை நீக்கிய ஞானசம்பந்தரின் இச் செயலைக் கண்டு, திகைத்த சமணர்களிற் சிலர், அந்நாட்டை நீங்கிச் செல்பவர்களாகி, சிலர் தம் கையில் ஏந்திய தம் சமயச்
சின்னங்களுள் ஒன்றான நீர்க் குண்டிகைகளை இவற்றால் என்ன பயன் என்று கூறி
உடைத்தெறிந்து, `முழுமுதல் கடவுளாவார்
விடைக்கொடியை யுயர்த்திய பொன்போன்ற மேனியையுடைய புரிந்த சடையையுடைய சிவபெருமானே!\' என்று போற்றினர்.
பெ.
பு. பாடல் எண் : 983
பிள்ளை
யார்தம் திருவாக்கில்
பிறத்தலால், அத் தாலம்முன்பு
உள்ள
பாசம் விட்டுஅகல,
ஒழியாப் பிறவி
தனைஒழித்துக்
கொள்ளு
நீர்மைக் காலங்கள்
கழித்துச் சிவமே
கூடினவால்,
வள்ள
லார்மற்று அவர்அருளின்
வாய்மை கூறின்
வரம்புஎன்னாம்.
பொழிப்புரை : திருஞானசம்பந்தரின்
உண்மைத் திருவாக்கி னால் பெண்பனையாய அப்பனைமரங்களுள், பனையாய்ப் பிறப் பதற்குரியதான வினைநீங்க, ஓயாமல் தொடர்ந்து வருகின்ற பிறவிப் பிணி
நீங்கி, உடம்பு இருப்பதற்குக்
காரணமான ஏன்ற வினையை நுகரும் கால அளவு நீங்கியபின், சிவப்பேற்றை அடைந்தன. இந் நிலையைக் காண, வள்ளலாரான பிள்ளையாரின் அருளிப் பாட்டை
எடுத்துக் கூறுவது என்பது ஒரு வரம்புக்கு உள்ளாகுமோ? ஆகாது.
குறிப்புரை : இவ்வாற்றான் ஓரறிவு
முதல் ஆறறிவு ஈறாக உள்ள அனைத்துயிர்களுமே வினைவயத்தால் தோன்றின என்பதும், அவ் வினைநீங்கியபின் அவை
வீடுபெறற்குரியன என்பதும் விளங்கும். உமாபதிசிவம் முள்ளிச் செடிக்கு முத்தி
கொடுத்த வரலாற்றையும் நினைவு கூர்க.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
1.054 திருவோத்தூர் பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பூத்தேர்ந்து, ஆயன கொண்டு, நின் பொன்னடி
ஏத்தா
தார்இல்லை, எண்ணுங்கால்,
ஓத்தூர்
மேய ஒளிமழு வாள்அங்கைக்
கூத்தீர், உம்ம குணங்களே.
பொழிப்புரை :திருஓத்தூரில் அழகிய
கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத்
தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற
திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.
பாடல்
எண் : 2
இடைஈர்
போகா இளமுலை யாளைஓர்
புடையீ
ரே,புள்ளி மான்உரி
உடையீ
ரே,உம்மை ஏத்துதும்
ஓத்தூர்ச்
சடையீ
ரே,உம தாளே.
பொழிப்புரை :திருஓத்தூரில்
சடைமுடியோடு விளங்கும் இறைவரே, ஈர்க்கு இடையில்
செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே, உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.
பாடல்
எண் : 3
உள்வேர்
போல நொடிமையி னார்திறம்
கொள்வீர், அல்குல்ஓர் கோவணம,
ஒள்வா
ழைக்கனி தேன்சொரி ஓத்தூர்க்
கள்வீ
ரே,உம காதலே.
பொழிப்புரை :ஒளிசிறந்த வாழைக்
கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய்
விளங்கும் கள்வரே, உம் காதல் மிக நன்று.
பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக்
கொள்வீர்.
பாடல்
எண் : 4
தோட்டீ
ரே, துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீ
ரே, அடி யார்வினை
ஓட்டீ
ரே, உம்மை ஏத்துதும்
ஓத்தூர்
நாட்டீ
ரே, அருள் நல்குமே.
பொழிப்புரை :செங்காந்தட்பூவை
அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலைநாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை
ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.
பாடல்
எண் : 5
குழைஆர்
காதீர், கொடுமழு வாட்படை
உழைஆள்
வீர், திரு வோத்தூர்
பிழையா
வண்ணங்கள் பாடிநின்று ஆடுவார்
அழையா
மேஅருள் நல்குமே.
பொழிப்புரை :குழையணிந்த காதினை
உடையவரே, கொடிய மழு என்னும்
வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே, திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப்
பாடல்கள் பல பாடிநின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.
பாடல்
எண் : 6
மிக்கார்
வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார், தம்மக்க ளீர்என்று
உட்கா
தார்உள ரோதிரு வோத்தூர்
நக்கீ
ரே, அருள் நல்குமே.
பொழிப்புரை :திருவோத்தூரில்
மகிழ்ந்து உறையும் இறைவரே, நீர் பலிகொள்ள
வருங்காலத்து, உம்திருமுன் அன்பு
மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு
அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக, அவர் தமக்கு அருள் நல்குவீராக.
பாடல்
எண் : 7
தாதுஆர்
கொன்றை தயங்கு முடிஉடை
நாதா
என்று நலம்புகழ்ந்து,
ஓதா
தார்உள ரோ, திரு வோத்தூர்
ஆதீ
ரே, அருள் நல்குமே.
பொழிப்புரை :திருவோத்தூரில்
முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை
உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.
பாடல்
எண் : 8
என்தான்
இம்மலை என்ற அரக்கனை
வென்றார்
போலும் விரலினால்,
ஒன்றார்
மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார்
மேல்வினை ஏகுமே.
பொழிப்புரை :இக்கயிலைமலை
எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம் பொருந்தாத
திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது
திருவோத்தூர் என்று ஊர்ப்பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள்
போகும்.
பாடல்
எண் : 9
நன்றா
நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார்
போலும் திசையெலாம்,
ஒன்றாய்
ஒள்எரி யாய்மிக வோத்தூர்
நின்றீ
ரே, உமை நேடியே.
பொழிப்புரை :திருவோத்தூரில்
விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன். திருமால்
ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும், அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து
எய்த்தனர். அவர்தம் அறிவுநிலை யாதோ?
பாடல்
எண் : 10
கார்
அமண்கலிங் கத்துவர் ஆடையர்
தேரர்
சொல்அவை தேறன்மின்,
ஓர்அம்
பால்எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீர்அ
வன்கழல் சேர்மினே.
பொழிப்புரை :கரிய நிறத்தவராகிய
சமணர்களும், கலிங்க நாட்டுத்துவர்
ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர்.
முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க
சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.
பாடல்
எண் : 11
குரும்பை
ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு
கொன்றை அடிகளை,
பெரும்பு
கலியுள் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு
வார்வினை வீடே.
பொழிப்புரை :திருவோத்தூரில், ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும்
அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க
திருப்புகலி என்னும் பெயருடைய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த
இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment