ஒப்புடன் முகம்




விருந்து உபசரிப்பு

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து, உண்மை பேசி,
உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும்.
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே. 4.

மனம் ஒத்த அன்புடன், முகம் மலர்ந்து, உபசாரங்கள் செய்து, உண்மையான சொற்களைப் பேசி, உப்பு இல்லாத கூழை வார்த்தாலும், அதனை உட்கொள்வது அமுதம் போல இனிமையைத் தரும். உடலுக்கும் நலத்தைச் செய்யும்.

முப்பழம் என்று சொல்லக் கூடிய மா, பலா, வாழை என்னும் பழ வகைகளோடு, பால் சோற்றையும், உள்ளத்தில் அன்பு இல்லாமல், முகம் சுளித்து விருந்தாக இடுவார்கள் ஆயின்,  அன்போடு இடப்படாத அந்த பகட்டான உணவை உண்டால், முன்னே வயிற்றை முட்டிக் கொண்டு இருந்த பசியோடு, முன்பு இருந்ததை விடக் கொடிய பசியானது உண்டாகும்.

அன்போடு இடுவதே விருந்து ஆகும். "முகம் குழைந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருவள்ளுவர் வாய்மொழி இங்கு வைத்து எண்ணத்தகும்.

அதிதி தேவோ பவ. விருந்தினர்களை இறைவனாகவே எண்ணி, அருச்சனை செய்து உபசரித்து விருந்து படைக்க வேண்டும். உபசாரங்கள் என்பது பதினாறு வகைப்படும். அவை, தவிசு அளித்தல், கை கழுவ நீர் அளித்தல், கால் கழுவ நீர் தரல், முக்குடி நீர் தரல், நீராட்டல், ஆடை சாத்தல், முப்புரி நூல் தரல், சந்தனக் குழம்பு தருதல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும்புகை காட்டல், விளக்கு இடல், கருப்பூரம் ஏற்றல், அமுதம் ஏந்தல், அடைக்காய் தருதல், மந்திரமலரால் அருச்சித்தல். இது மகேசுர பூசை எனப்படு

1 comment:

  1. உண்மையில் பயனுள்ள. மிக்க நன்றி.

    ReplyDelete

52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...