திரு மாந்துறை
     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
      திருச்சியில் இருந்து லால்குடி செல்லும்
வழியில், லால்குடி அடைவதற்கு
முன்னால் 3 கி.மீ. தொலைவில்
திருமாந்துறை உள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல
நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவர்
             : ஆம்ரவனேசுவரர், மிருகண்டீசுவரர்
இறைவியார்
          : அழகம்மை, பாலாம்பிகை
தல
மரம்         : மாமரம் (ஆம்ரம்)
தீர்த்தம்               : காயத்ரி நதி
தேவாரப்
பாடல்கள்    : சம்பந்தர் - செம்பொனார்
தருவேங்கை
         ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில்
மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை
மாந்துறை என்றழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள
ஆடுதுறை என்ற ஊரிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியிலுள்ள மாந்துறை என்னும்
ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.
         கோயில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன்
காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும்
சித்திரங்களைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட
மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி,
மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி
தருகின்றன. நால்வருள், சுந்தரர்
கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு
மனைவிகளுடன இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும்
இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.
         இறைவன் ஆம்ரவனேசுவரர் சந்நிதி கிழக்கு
நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி
மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி
சுவாமி மீதுபடுகிறது. அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள்
நடைபெறுகின்றன.
         மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர்
வள்ளி, தெய்வானையுடன்
தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு
பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன்
உள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
     சிவபெருமான் திருமுடியைக் கண்டதாக பொய் கூறிய
பிரம்மா, தான் பெற்ற சாபத்தை
இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டார். 
     சூரியனுடைய மனைவி சம்யாதேவி தன் கணவனின்
உக்கிரமான ஒளியைப் பெறுத்துக் கொள்ள முடியாமல் இத்தலத்தில் தவமிருந்து சூரிய
ஒளியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றாள். 
     கெளதம முனிவரின் மனைவி அகலிகையை தீண்டியதால்
இந்திரனை கெளதம முனிவர் சாபமிட்டார். இந்திரன் தன்னுடைய சாபத்தை இத்தலத்தில் தவம்
செய்து நீக்கிக் கொண்டான். 
     தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் உண்டான
தோஷம் நீங்க சூரியன் வழிபட்டு பயன் அடைந்த தலம்.
         முன்னொரு காலத்தில்
இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த முனிவர்
ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால்
மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை
விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை
இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி
சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு
திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது.
சிவனும், பார்வதியும் அதனைப்
பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி
தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான்
தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக
சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.
கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை
சிற்பமாகக் காட்சியளிக்கிறது.
         மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும்
மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக
ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி
திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை
வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்
என்பது நம்பிக்கை.
     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "நீலம் கொள் தேத்துறையில்
அன்னம் மகிழ் சேக்கை
பல நிலவும் மாந்துறை வாழ் மாணிக்க மலையே" என்று போற்றி உள்ளார்.
         காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 307
மழபாடி
வயிரமணித் தூண் அமர்ந்து
         மகிழ்கோயில்
வலம்கொண்டு எய்தி,
செழுவாச
மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
         சென்று, தாழ்ந்து, எழுந்து, நின்று,
தொழுதுஆடிப்
பாடி, நறும் சொல்மாலைத்
         தொடை அணிந்து, துதித்துப் போந்தே,
ஒழியாத
நேசமுடன் உடையவரைக்
         கும்பிட்டுஅங்கு
உறைந்தார் சில்நாள்.
         பொழிப்புரை : அத்திருமழபாடியில்
அழகிய வயிரமணித் தூண் ஆக வீற்றிருந்தருளும் பெருமானாரின் கோயிலை வலம் வந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற
திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல
சொல்மாலைத் தொடை பாடிப் போற்றியும் வெளிப்போந்த நிலையில், இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக்
கும்பிட்டு, அத்திருப்பதியில் சில
நாள்கள் தங்கியிருந்தார் பிள்ளையார்.
பெ.
பு. பாடல் எண் : 308
அதன்மருங்கு
கடந்துஅருளால், திருக்கானூர்
         பணிந்துஏத்தி, ஆன்ற சைவ
முதன்மறையோர்
அன்பில் ஆலந்துறையின்
         முன்னவனைத் தொழுது
போற்றி,
பதம்நிறைசெந்
தமிழ்பாடி, சடைமுடியார்
         பலபதியும் பணிந்து
பாடி,
மதகரட
வரைஉரித்தார் வடகரைமாந்
         துறை அணைந்தார்
மணிநூல் மார்பர்.
         பொழிப்புரை : அப்பதியைக் கடந்து
சென்றவர், திருக்கானூரைப்
பணிந்து போற்றி, பெருமை பெற்ற
ஆதிசைவர் இருக்கும் திருஅன்பிலாலந்துறை இறைவரை வணங்கிப் போற்றி, வளம் மிக்க சொற்களமைந்த செந்தமிழ்ப்
பதிகத்தைப் பாடி, சிவபெருமானின் பல
பதிகளையும் வணங்கிப் போற்றி, அருவியென மதத்தைச்
சொரியும் மலையனைய யானையை உரித்த இறைவரின் `வடகரை மாந்துறையை\' அழகிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய
சம்பந்தர் சென்று சேர்ந்தார்.
         திருக்கானூரில்
அருளிய பதிகம், `வானார் சோதி' (தி.1 ப.73) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும்.
திருஅன்பிலாலந்துறையில் அருளிய பதிகம், `கணை
நீடெரி' (தி.1 ப.33) எனத் தொடங்கும் தக்கராகப்
பண்ணிலமைந்ததாகும். `சடை முடியார் பல
பதியும் பாடி' என்பதற்கேற்பப்
பிள்ளையார் வணங்கிய திருப்பதிகள் எவை என அறிதற்கியன்றிலது. பதம் - வளம் மிக்க
சொற்கள்: மந்திரம் என்றலுமாம். மாந்துறை - ஊர்ப்பெயர். காவிரியின் வட கரையில்
அமைந்திருத்தல் பற்றி அஃது அதற்கு அடைமொழியாயிற்று.
பெ.
பு. பாடல் எண் : 309
சென்றுதிரு
மாந்துறையில் திகழ்ந்துஉறையும்
         திருநதிவாழ் சென்னி
யார்தம்
முன்றில்பணிந்து, அணிநெடு மாளிகை
வலஞ்செய்து,
         உள்புக்கு முன்பு
தாழ்ந்து,
துன்றுகதிர்ப்
பரிதிமதி மருத்துக்கள்
         தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை
சிறப்பித்து, நிறைதமிழின்
         சொல்மாலை நிகழப்
பாடி.
         பொழிப்புரை : சென்றவர், திருமாந்துறையில் விளக்கம் பெற
வீற்றிருந்தருளும் கங்கையாறு தங்கப் பெற்று வாழ்வு அடைந்த சடையை உடைய இறைவரின்
திருமுற்றத்தை வணங்கி, அழகிய நீண்ட
திருமாளிகையை வலம் வந்து, உட்சென்று, திருமுன் விழுந்து பணிந்து, செறிந்த ஒளிர்க் கதிர்களையுடைய ஞாயிறும், சந்திரனும், தேவ மருத்துவர்களும் தொழுது வழிபட, இறைவர் எழுந்தருளிய நிலையைச் சிறப்பித்த
சொல்மாலையை நிலவி நிற்கும்படியாகப் பாடி,
         திருமாந்துறையில்
அருளியது, `செம்பொனார் தரு' (தி.2 ப.110) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில்
அமைந்ததாகும். 
     பரிதி, மதி, தேவ மருத்துவர்களும் வழிபட்டமை
இப்பதிகத்துள் வரும் ஆறாவது பாடலில் காணும் குறிப்பாகும்.
2.110  
திருமாந்துறை                பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
செம்பொன்
ஆர்தரு வேங்கையும் ஞாழலும்
         செருந்திசெண்
பகம்ஆனைக்
கொம்பும்
ஆரமும் மாதவி சுரபுனை
         குருந்தலர்
பரந்துஉந்தி
அம்பொன்
நேர்வரு காவிரி வடகரை
         மாந்துறை உறைகின்ற
எம்பி
ரான்இமை யோர்தொழு பைங்கழல்
         ஏத்துதல் செய்வோமே.
         பொழிப்புரை :வேங்கை , ஞாழல் , செருந்தி , செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும் , சந்தனமரம் , மாதவி மலர் , சுரபுன்னை மலர் , குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும்
காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும்
திருவடிகளை ஏத்துவோம் .
பாடல்
எண் : 2
விளவு
தேனொடு சாதியின் பலங்களும்
         வேய்மணி நிரந்துஉந்தி,
அளவி
நீர்வரு காவிரி வடகரை
         மாந்துறை உறைவானத்
துளவ
மான்மகன் ஐங்கணைக் காமனைச்
         சுடவிழித் தவன்நெற்றி
அளக
வாள்நுதல் அரிவைதன் பங்கனை
         அன்றிமற்று அறியோமே.
         பொழிப்புரை :விள முதலிய பயன்தரும்
மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள
மாந்துறையில், மால் மகனாகிய காமனைக்
கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை, அம்பிகை
பாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம்.
பாடல்
எண் : 3
கோடு
தேன்சொரி குன்றுஇடைப் பூகமும்
         கூந்தலின் குலைவாரி
ஓடு
நீர்வரு காவிரி வடகரை
         மாந்துறை உறைநம்பன்,
வாடி
னார்தலை யில்பலி கொள்பவன்,
         வானவர்
மகிழ்ந்துஏத்தும்
கேடு
இலாமணி யைத்தொழல் அல்லது
         கெழுமுதல் அறியோமே.
         பொழிப்புரை :தேன் சொரியும்
குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில்
மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம்
.
பாடல்
எண் : 4
இலவ
ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
         இளமருது இலவங்கம்
கலவி
நீர்வரு காவிரி வடகரை
         மாந்துறை உறைகண்டன்,
அலைகொள்
வார்புனல் அம்புலி மத்தமும்
         ஆடுஅர வுடன்வைத்த
மலையை
வானவர் கொழுந்தினை அல்லது
         வணங்குதல் அறியோமே.
         பொழிப்புரை :இலவம் முதலிய மரங்களை
அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை , பிறை , அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும்
ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம் .
பாடல்
எண் : 5
கோங்கு
செண்பகம் குருந்தொடு பாதிரி
         குரவுஇடை மலர்உந்தி
ஓங்கி
நீர்வரு காவிரி வடகரை
         மாந்துறை அறைவானை,
பாங்கி
னால்இடும் தூபமும், தீபமும்,
         பாட்டு,அவி, மலர்சேர்த்தித்
தாங்கு
வார்அவர் நாமங்கள் நாவினில்
         தலைப்படும் தவத்தோரே.
         பொழிப்புரை : கோங்கு , செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும்
காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை,
தூபம்
தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச்
சொல்லுவார் மேலான தவமுடையோராவர்.
பாடல்
எண் : 6
பெருகு
சந்தனம் கார்அகில் பீலியும்
         பெருமரம்
நிமிர்ந்துஉந்திப்
பொருது
காவிரி வடகரை மாந்துறைப்
         புனிதன்எம் பெருமானை,
பரிவி
னால்இருந்து இரவியும் மதியமும்
         பார்மன்னர்
பணிந்துஏத்த
மருத
வானவர் வழிபடு மலர்அடி
         வணங்குதல் செய்வோமே.
         பொழிப்புரை :சந்தனம் அகில் முதலிய
மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி , மதி , மன்னர்கள் , மருத்துக்கள் அன்போடுவழிபடும்
திருவடிகளை வணங்குவோம் .
பாடல்
எண் : 7
நறவம்
மல்லிகை முல்லையும் மௌவலும்
         நாள்மலர் அவைவாரி
இறவில்
வந்துஎறி காவிரி வடகரை
         மாந்துறை
இறைஅன்றுஅங்கு,
அறவன்
ஆகிய கூற்றினைச் சாடிய
         அந்தணன், வரைவில்லால்
நிறைய
வாங்கி வலித்துஎயில் எய்தவன்
         நிரைகழல் பணிவோமே.
         பொழிப்புரை :மல்லிகை முல்லை
முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக்
காய்ந் தவனும் , மேருவில்லால்
முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம் .
பாடல்
எண் : 8
மந்தம்
ஆர்பொழில் மாங்கனி மாந்திட
         மந்திகள், மாணிக்கம்
உந்தி
நீர்வரு காவிரி வடகரை
         மாந்துறை உறைவானை,
நிந்தி
யாஎடுத்து ஆர்த்தவல் அரக்கனை
         நெரித்திடு விரலானைச்
சிந்தி
யாமனத் தார்அவர் சேர்வது
         தீநெறி அதுதானே.
         பொழிப்புரை :மந்திகள் மாங்கனிகளை
உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை
, நிந்தித்து அவனை
மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர்
தீநெறி சேர்வர் .
பாடல்
எண் : 9
நீலமாமணி
நித்திலத் தொத்தொடு
         நிரைமலர்
நிரந்துஉந்தி
ஆலி
யாவரு காவிரி வடகரை
         மாந்துறை அமர்வானை,
மாலும்
நான்முகன் தேடியும் காண்கிலா
         மலர்அடி இணை,நாளும்
கோலம்
ஏத்திநின்று ஆடுமின் பாடுமின்
         கூற்றுவன் நலியானே.
         பொழிப்புரை :நீல மணிகளையும் , முத்துக்களையும் , மலர்களை யும் அடித்து வரும் காவிரி
வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய
இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள் . நம்மைக் கூற்றுவன் நலியான் .
பாடல்
எண் : 10
நின்று
உணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
         நெடுங்கழை  நறவுஏலம்
நன்று
மாங்கனி கதலியின் பலங்களும்
         நாணலின் நுரைவாரி
ஒன்றி
நேர்வரு காவிரி வடகரை
         மாந்துறை ஒருகாலம்
அன்றி
உள்அழிந்து எழும்பரிசு அழகிது
         அதுஅவர்க்கு இடம்ஆமே.
         பொழிப்புரை :சமணரும் தேரரும்
நிலையற்ற உரையினராவர் . நீண்ட மூங்கில் , தேன்
பொருந்திய வேலமரம் , மாங்கனி , வாழைக் கனி , நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும்
காவிரியின் வடகரையிலுள்ள திருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும்
பரமானந்த நிலையே மேலானது .
பாடல்
எண் : 11
வரைவ
ளங்கவர் காவிரி வடகரை
         மாந்துறை உறைவானைச்
சிரபு
ரம்பதி உடையவன், கவுணியன்,
         செழுமறை நிறைநாவன்,
அர
எனும்பணி வல்லவன், ஞானசம்
         பந்தன், அன்பு உறுமாலை
பரவி
டும்தொழில் வல்லவர் அல்லலும்
         பாவமும் இலர்தாமே.
         பொழிப்புரை :மலைவளங்களைக்
கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத்
தனாய் , சிறந்த வேதங்கள்
நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி
ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப்
பெறுவர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment