திருச்சிராப்பள்ளி - 0346. வெருட்டி ஆட்கொளும்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வெருட்டி ஆட்கொளும் - திருசிராப்பள்ளி

முருகா!
எனை ஆட்கொண்டு அருளிய உனது திருவடி மலரைக் கனவிலும் நனவிலும் மறவேன்.

தனத்த தாத்தன தனதன தனதன
     தனத்த தாத்தன தனதன தனதன
     தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான

வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை
     நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்
     விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய ...... மிலரானால்

வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
     பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
     விசித்ர மேற்படு முலையினு நிலையினு ...... மெவரோடும்

மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
     அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு
     மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு ...... மவமேயான்

 மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு      
     தடத்து மோக்ஷம தருளிய பலமலர்
     மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு ...... மறவேனே

இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய
     சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற
     இரக்ஷை வாய்த்தருள் முருகப னிருகர ...... குகவீரா

இலக்ஷு மீச்சுர பசுபதி குருபர
     சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்
     இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி ...... களிகூரத்

திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
     எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
     செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும்

செருப்ப ராக்ரம நிதிசர வணபவ
     சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு
     திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

வெருட்டி ஆட்கொளும் விடமிகள், புடைவையை
     நெகிழ்த்து அணாப்பிகள், படிறிகள், சடுதியில்
     விருப்பம் ஆக்கிகள், விரவிய திரவியம் ...... இலர்ஆனால்

வெறுத்து நோக்கிகள், கபடிகள், நடம்இடு
     பதத்தர், தூர்த்திகள், ம்ருகமத பரிமள
     விசித்ர மேற்படு முலையினும் நிலையினும், .....எவரோடும்

மருட்டி வேட்கை சொல் மொழியினும், விழியினும்,
     அவிழ்த்த பூக்கமழ் குழலினும், நிழலினும்,
     மதிக்க ஒணாத் தளர் இடையினும் நடையினும், ...... அவமேயான்

மயக்கமாய், பொருள் வரும்வகை க்ருஷிபணு,
     தடத்து மோக்ஷம் அது அருளிய, பலமலர்
     மணத்த வார்க்கழல் கனவிலும் நனவிலும் ...... மறவேனே.

இருட்டு இலாச் சுரர் உலகினில் இலகிய
     சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற
     இரக்ஷை வாய்த்து அருள் முருக! பனிரு கர! ...... குக!வீரா!

இலட்சுமி ஈச்சுர! பசுபதி குருபர!
     சமஸ்த ராச்சிய ந்ருப! புகழ் வயம் இயல்
     இலக்கர் ஏய்ப்படை முகடு எழு ககபதி ...... களிகூர,

திருட்டு ராக்கதர் பொடிபட, வெடிபட,
     எடுத்த வேல் கொடு கடுகிய, முடுகிய,
     செருக்கு வேட்டுவர் திறையிட, முறையிட, ...... மயில்ஏறும்

செருப் பராக்ரம! நிதி! சரவணபவ!
     சிவத்த பாற்கரன் இமகரன் வலம்வரு
     திருச்சிராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.

பதவுரை

      இருட்டு இலா சுரர் உலகினில் --- இருள் இல்லாத, தேவ லோகத்தில்

     இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் --- விளங்கி நிற்கும், ஆயிரங் கண்களை உடைய இந்திரனுடைய,

     மிடி அற --- வறுமைத் துயரம் நீங்குமாறு,

     இரட்சை வாய்த்து அருள் முருக ---    அவனுக்குப் பாதுகாப்பைத் தந்தருளிய முருகக் கடவுளே!

       பன் இரு கர --- பன்னிரண்டு கரங்களையுடையவரே!

     குக --- குக மூர்த்தியே!

     வீரா --- வீரரே!

      இலட்சுமி ஈச்சுர --- இலட்சுமீகரம் விளங்குந் தலைவரே!

      பசுபதி குருபர --- சிவபெருமானுக்கு குருமூர்த்தியே!

      சமஸ்த ராச்சிய ந்ருப --- சகல ராஜ்யங்களுக்கும் அரசரே!

      புகழ் வயம் இயல் --- புகழும் வெற்றியும் பொருந்திய

     இலக்கர் ஏய்படை முகடு எழு ---  இலக்கம் வீரர்கள் கூடிய சேனையின் மேலே பறந்து உலவும்

     ககபதி களி கூர --- பறவையரசனாகிய கருடன் மகிழ்ச்சி மிகவும் அடைய,

     திருட்டு ராட்சதர் பொடிபட வெடிபட --- திருட்டுத்தனமுள்ள இராட்சதர்கள் பொடியாகுமாறும், பூமி வெடிக்குமாறும்,

     எடுத்த வேல் கொடு --- திருக்கரத்தில் எடுத்த வேலாயுதத்தைக் கொண்டு

     கடுகிய முடுகிய --- கடுமையுடன் துரத்திக்கொண்டு வந்த

     செருக்கு வேட்டுவர் திறைஇட --- அகங்கரித்த வேடர்கள்,  திறை தந்து வணங்கும்படியும்,

     முறை இட --- முறையிட்டு வேண்டும்படியும் செய்த

     மயில் ஏறும் செரு பராக்ரம ---  மயிலின்மீது ஏறுகின்ற போர் வீரரே!

         நிதி --- செல்வமே!

         சரவணபவ --- சரவணபவ!

         சிவந்த பாற்கரன் இமகரன் வலம் வரும் --- சிவந்த ஒளியையுடைய சூரியனும், சந்திரனும் வலம் வருகின்ற

     திரிச்சிராப்பள்ளி மலைமிசை நிலைபெறு பெருமாளே --- திரிச்சிராப்பள்ளி என்ற மலையின்மீது நிலைத்து வாழுகின்ற பெருமையின் மிகுந்தவரே!

         வெருட்டி ஆட்கொள்ளும் விடமிகள் --- தம்பால் வந்தவர்களை வெருட்டி அடிமைப்படுத்தவல்ல நஞ்சை ஒத்தவர்கள்,

     புடைவையை நெகிழ்ந்து அணாப்பிகள் --- ஆடையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள்,

     படிறிகள் --- பொய் சொல்லுபவர்கள்,

     சடுதியில் விருப்பம் ஆக்கிகள் --- வெகுவேகத்தில் தம்மிடம் விருப்பம் வரும்படிச் செய்பவர்கள்,

     விரவிய திரவியம் இலர் ஆனால் வெறுத்து நோக்கிகள் --- நிறைந்த செல்வம் இல்லாதவராயின் வெறுப்புடன் பார்ப்பவர்கள்,

     கபடிகள் --- வஞ்சனை நினைவு உடையவர்கள்,

     நடம் இடு பதத்தர் --- நடனஞ் செய்யுங் காலை உடையவர்கள்,

     தூர்த்திகள் --- காமமுடையவர்கள் ஆகிய பொது மாதரின்,

     ம்ருகமத பரிமள விசித்ரம் மேல்படு முலையிலும் நிலையிலும் --- கஸ்தூரி முதலிய நறுமணம் வீசும் அழகு மேம்பட்டு விளங்கும் தனத்திலும், நிற்கின்ற வகையிலும்,

     எவரோடும் மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் --- யாரையும் மயக்குவித்து ஆசை வார்த்தைகளைச் சொல்லும் சொற்களினாலும், கண்களினாலும்,

     அவிழ்த்து பூ கமழ் குழலினும் நிழலினும் --- மலர்ந்த பூக்கள் மணக்கும் கூந்தலிலும், ஒளியிலும்,

     மதிக்க ஒணா தளர் இடையினும் நடையினும் --- மதிக்க முடியாத தளர்ந்த இடையினும் நடையினாலும்,

     அவமே யான் மயக்கம் ஆய் --- அடியேன் வீணாக மயக்கமடைந்து,

     பொருள் வரும் வகை க்ரிஷி பணும் தடத்து --- பொருளைச் சேகரிக்க வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த வேலையில்,

     மோட்சம் அது அருளிய---  அடியேனுக்கு வீடு பேற்றை அருள் புரிந்த

     பல மலர் மணத்த வார்கழல் கனவிலும் நனவிலும் மறவேனே --- பல மலர்கள் நறுமணம் வீசும் நீண்ட திருவடிகளை, அடியேன் கனவிலும் நனவிலும் மறக்கமாட்டேன்.

பொழிப்புரை

         இருளே இல்லாத தேவவுலகில் விளங்கும் ஆயிரங் கண்களுடைய இந்திரனுடைய வறுமை நீங்குமாறு பாதுகாவல் செய்தருளிய முருகக் கடவுளே!

     பன்னிரு கரங்களை உடையவரே!

     குகப் பெருமாளே!

     வீர மூர்த்தியே!

     இலட்சுமிகரம் விளங்கும் தலைவரே!

     பசுபதியாம் சிவபெருமானுடைய குருநாதரே!

     எல்லா ராஜ்யங்கட்கும் அரசரே!

     புகழும் வெற்றியும் உடைய இலக்கம் வீரர்கள் சேர்ந்த சேனையின் மேலே பறந்து உலவும், பறவை யரசனாகிய கருடன் மிகுந்த மகிழ்ச்சியடைய, திருட்டுக் குணமுடைய அசுரர்கள் அடிபட்டுச் சிதறிப் போகுமாறு, எடுத்த வேலினால், வேகத்துடன் துரத்தி வந்த அகங்காரமுள்ள வேடர்கள் வணங்கியும் முறையிட்டும் துதிக்க மயி்லில் ஏறும் போர் வீரரே!

     செல்வமே!

     சரவணபவரே!

     சிவந்த சூரியனும், சந்திரனும் வலம் வருகின்ற திரிசிராப்பள்ளி மலையின் மீது நிலையாக அமர்ந்துள்ள பெருமிதம் உடையவரே!

         தம்மிடம் வந்தவர்களை வெருட்டி அடிமைப் படுத்த வல்ல விஷமிகள், உடையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள், பொய் சொல்லுபவர்கள், அதிவேகமாக மோகத்தை யுண்டாக்குபவர்கள், திரண்டுள்ள பணத்தைக் கொடுக்கவில்லையானால், வெறுப்பாகப் பார்ப்பவர்கள், வஞ்சனை உடையவர்கள், நடனம் ஆடும் காலை உடையவர்கள், காமிகள் ஆகிய பொது மாதர்களின், கஸ்தூரி வாசனை வீசும் அழகு மேம்பட்ட தனத்திலும், அவர்கள் நிற்கும் நிலையிலும், யாரையும் மயக்கி ஆசை வார்த்தைகளைச் சொல்லுகின்ற சொற்களிலும், கண்களிலும், விரிந்த மலர் மணக்கும் கூந்தலிலும், ஒளியிலும், மதிக்க முடியாத தளர்ந்த இடையிலும், ஆடையிலும், அடியேன் வீணாக மயங்கி, அவர்கட்குத் தரும்பொருட்டு பொருளைத் தேடுகின்ற காலத்து, அடியேனுக்கு வீடு பேற்றை வழங்கிய, மலர்களின் நறுமணம் வீசும் உமது நீண்ட திருவடிகளைக் கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன்.

விரிவுரை

இத்திருப்புகழ் அருணகிரியாரின் சரித்திரக் குறிப்பு உடையது.

முதல் மூன்று அடிகளில் பொதுமகளிரது இயல்புகளைக் கூறினார்.

நான்காம் அடியில் தாம் மாதர் மயக்கில் சிக்குண்டிருந்த போது முருகப் பெருமானுடைய திருவடி அவரை ஆட்கொண்டது எனக் கூறுகின்றார். அத்தகைய திருவடியைக் கனவிலும் நனவிலும் மறவேன் என்று நன்றி பாராட்டும் முறையில் பாடுகின்றார்.

இருட்டிலாச் சுரருலகு ---

தேவவுலகில் இருள், துன்பம், வெப்பம் இவைகள் இரா. புண்ணியஞ் செய்தவர்கள் அங்கு இன்பத்தை நுகர்வர்.

சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற இரட்சை வாய்த்து அருள் முருக:-

ஆயிரம் கண்களுடைய இந்திரன் சூரபன்மனால் நாடு நகரம் கவரப் பெற்று வறியவன் ஆனான். அவனுடைய வறுமையையும் சிறுமையையும் போக்கி கந்தவேள் காத்தருளினார்.

இலக்கர் ஏய்ப்படை ---

நவவீரர்கள் நவசக்திகளிடம் தோன்றியபோது வேர்வையில் இலட்சம் வீரர்கள் தோன்றினார்கள். இவர்கள் முருகப் பெருமானுடைய பரிசனங்கள்.

வேடுவர் திறையிட முறையிட ---

இரவில் முருகவேள் வள்ளியம்மையைக் களவு கொண்டு சென்றபோது, வேலவன் என்று அறியாத வேடர்கள் துரத்திக் கொண்டு போய் போர் புரிந்தார்கள். முருகனால் அழிந்தார்கள். வள்ளிபிராட்டியால் உய்வு பெற்று எழுந்தார்கள். முருகன் என்பதை உணர்ந்தபின் அவரது அடிமலர் மீது வீழ்ந்து ‘ஐயனே! எங்கள் குலதெய்வமே! நீர் எங்கட்கு மருமகனாக நாங்கள் என்ன தவஞ் செய்தோமோ? தாயே பிள்ளைக்கு நஞ்சு ஊட்டினால், யார் என்ன செய்ய முடியும்? வேலியே பயிரை மேயலாமா? எங்கள் குடிக்குப் பழி வரலாமா? தேவரீர் எங்கள் சீறூருக்கு எழுந்தருளி, எங்கள் குலக்கொடியை நாங்கள் தர நீர் மணம் செய்துகொள்ள வேண்டும்” என்று வணங்கி முறையிட்டார்கள்.

கருத்துரை

திரிசிராப்பள்ளி மேவுந் தேவா! உனது அடிமலரைக் கனவிலும் நனவிலும் மறவேன்.

ள் வரும்வகை க்ருஷிபணு

     எடுத்த வேற்கொடு கடுகிய, முடுகிய,

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...