வாழ்வு வந்தபோது




வாழ்வு அது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்,
தாழ்வு அது வந்தது ஆனால் தளர்வரோ தக்கோர்? மிக்க
ஊழ்வினை வந்தது ஆனால் ஒருவரால் விலக்கப் போமோ?
ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ?

இதன் பொருள் ---

     உயர்ந்த வாழ்வானது வந்து நேர்ந்த போது மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்.

     தாழ்வு வந்த போதும் மனத் தளர்ச்சி அடைய வேண்டாம்.

     சான்றோர் அவ்வாறு தாழ்வு வந்ததைப் பற்றித் தளர்ச்சி அடைய மாட்டார்கள்.

     ஊழ்வினை காரணமாக வரும் அவைகளை (வாழ்வு, தாழ்வு) ஒருவராலும் விலக்க முடியாது.

     ஒருகாலத்தில் ஏழையாய் இருந்தவர்கள், பல்லக்கில் ஏறிச் செல்வதை நீங்கள் பார்த்தது இல்லையா?

     வாழ்வும் தாழ்வும் அவரவர் முன் செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப முறையே இறைவன் ஆணையால் வருபவை. வினை தீர்ந்தால் அவையும் தீரும். வாழ்வும் நிலையானது அல்ல. தாழ்வும் நிரந்தரமானது அல்ல.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...