அற்பர் நட்பு ஆகாது




பருப்பதங்கள் போல் நிறைந்திடு நவமணிப்
     பதங்களைக் கொடுத்தாலும்,
விருப்பம் நீங்கிய கணவரைத் தழுவதல்
     வீணதாம்; விரை ஆர்ந்த
குருக்கொள் சந்தனக் குழம்பினை அன்பொடு
     குளிர் தர அணிந்தாலும்,
செருக்கு மிஞ்சிய அற்பர்தம் தோழமை
     செய்வது இங்கு ஆகாதே.

இதன் பொருள் ---

     மலையைப் போலக் குவியல் குவியலாக நிறைந்த நவரத்தினங்களைக் கொடுத்து உதவினாலும், மனத்தில் அன்பு இல்லாத கணவனைத் தழுவி, அவனோடு கூடி, ஒரு பெண் வாழ்வது பயனற்றது.

     அது போலவே, நல்ல நிறமும் மணமும் கொண்ட சந்தனக் குழம்பினை, அன்புடன், உடம்பில் குளிர்ச்சி உண்டாகும்படிப் பூசி, நட்புப் பாராட்டினாலும், செருக்கு மிகுந்த அற்பர்களைத் தோழமை கொள்வது கூடாது.

சிறுகாலையே அறம் செய்க

சிறுகாலையே செய்க ---      'அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. அறிவு ஒன்றே மனிதனை மனிதனாக வாழவைப்பது. அற...