அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வம்பு அறாச்சில
(காஞ்சீபுரம்)
முருகா!
அடியேனைத் தொண்டர் கூட்டத்தில்
சேர்த்து அருள்
தந்த
தாத்தன தன்ன தனந்தன
தத்தத் தத்தத் ...... தனதானா
வம்ப
றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் ...... திரையாளர்
வன்க
லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் ...... றருளாலே
தம்ப
ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார்
தங்கு
ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ
வெம்ப
ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் ...... படமாசூர்
வென்ற
பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா
கம்ப
ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத் ...... தவறாதே
கம்பை
யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வமபு
அறாச் சில கன்னம் இடும், சம-
யத்துக் கத்துத் ...... திரையாளர்,
வன்
கலாத்திரள் தன்னை அகன்று,
மனத்தில் பற்று அற்று, ...... அருளாலே,
தம்
பராக்கு அற, நின்னை உணர்ந்து, உரு-
கிப் பொன் பத்மக் ...... கழல் சேர்வார்
தம்
குழாத்தினில், என்னையும் அன்பொடு
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?
வெம்
பராக்ரம, மின் அயில் கொண்டு, ஒரு
வெற்புப் பொட்டுப் ...... பட,மாசூர்
வென்ற
பார்த்திப! பன்னிரு திண்புய!
வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா!
கம்பராய்ப்
பணி மன்னு புயம் பெறு-
கைக்கு, கற்புத் ...... தவறாதே,
கம்பை
ஆற்றினில் அன்னை தவம் புரி
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
பதவுரை
வெம் பராக்ரம மின் அயில் கொண்டு ---
வெப்பமான ஆற்றலும், ஒளியும் கொண்ட
வேலாயுதத்தைக் கொண்டு
ஒரு வெற்புப் பொட்டுப் பட --- ஒப்பற்ற
கிரவுஞ்ச மலை பொடிபட,
மாசூர் வென்ற பார்த்திப --- மாமரமாய்
நின்ற சூரபன்மனை வென்ற அரசே!
பன்னிரு திண் புய --- வலிமை மிக்க
பன்னிரண்டு திருத்தோள்களை உடையவரே!
வெட்சிச் சித்ரத் திருமார்பா ---
வெட்சிமாலையை அணிந்த அழகிய திருமார்பினரே!
கம்பராய்ப் பணி மன்னு புயம் பெறுகைக்கு ---
ஏகாம்பரர் என்னும் பெயர் உடையவராய் விளங்குபவரது பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத்
தழுவும் பொருட்டு,
கற்புத் தவறாதே, கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி ---
கற்பு நிலை தவறாமல், கம்பா நதிக்கரையில்
காமாட்சி அம்மை தவம் செய்திருந்த
கச்சிச் சொக்கப் பெருமாளே --- காஞ்சி
மாநகரில் வாழும் பெருமையில் சிறந்தவரே!
வம்பு அறாச் சில கன்னம் இடும் --- வம்பு
வார்த்தைகள் நீங்காததும், சில பழைய
நூல்களிலிருந்து சொற்களைத் திருடுவதுமான
சமயத்துக் கத்துத் திரையாளர் ---
சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி கூச்சல் இடுபவருடைய
வன் கலாத் திரள் தன்னை அகன்று ---
வன்மையான கலகக் கூட்டத்தினின்று விலகி,
மனத்திற் பற்று அற்று --- மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும்
அறப்பெற்று,
அருளாலே தம் பராக்கு அற நின்னை உணர்ந்து
--- திருவருளினால், தம்மைத் தாமே நோக்கியுள்ள யாம் என்ற நோக்கு அற,
தேவரீரை
உணர்ந்து,
உருகி பொன் பத்மக் கழல் சேர்வார் தம் ---
உள்ளம் உருகி, அழகிய தாமரை மலரன்ன
உமது திருவடிகளைச் சேர்பவர்களுடைய
குழாத்தினில் என்னையும் அன்பொடு --- திருக்
கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு
வைக்கச் சற்றுக் கருதாதோ ---
கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கல் ஆகாதோ?
பொழிப்புரை
வெப்பமான ஆற்றலும், ஒளியும் கொண்ட வேலாயுதத்தைக் கொண்டு, ஒப்பற்ற கிரவுஞ்சமலை பொடிபட, மாமரமாய் நின்ற சூரபன்மனை வென்ற அரசே!
வலிமை மிக்க பன்னிரண்டு திருத்தோள்களை
உடையவரே!
வெட்சிமாலையை அணிந்த அழகிய
திருமார்பினரே!
ஏகாம்பரர் என்னும் பெயர் உடையவராய்
விளங்குபவரது பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு, கற்பு நிலை தவறாமல், கம்பா நதிக்கரையில் காமாட்சி அம்மை தவம்
செய்திருந்த, காஞ்சி மாநகரில்
வாழும் பெருமையில் சிறந்தவரே!
வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடுவதுமான
சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி கூச்சல் இடுபவருடைய வன்மையான கலைக்கூட்டத்தினின்று விலகி, மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும்
அறப்பெற்று, திருவருளினால், தம்மைத் தாமே நோக்கியுள்ள யாம் என்ற
நோக்கு அற, தேவரீரை உணர்ந்து, உள்ளம் உருகி, அழகிய தாமரை மலரன்ன உமது திருவடிகளைச்
சேர்பவர்களுடைய திருக் கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு கூட்டி வைக்க உன்
திருவுள்ளத்தில் சற்று நினைக்கல் ஆகாதோ?
விரிவுரை
இந்தத்
திருப்புகழ் மிவும் இனிமையானது. அடியவர் திருக்கூட்டத்தில் சேர்க்குமாறு
அருணகிரிப் பெருமான், அறுமுகப் பெருமானை
மிக உருக்கமாக வேண்டுகின்றார்.
நம்மை
வெகு எளிதாக சிவகதியில் சேர்ப்பது அடியார் கூட்டம் தான்.
சூரில்
கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்சூழாம்
சாரில், கதிஅன்றி வேறுஇலை காண், தண்டு தாவடிபோய்த்
தேரில்
கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில்
பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே. --- கந்தர் அலங்காரம்.
அடியார்
உறவும் அரன்பூசை நேசமும் அன்புமன்றிப்
படிமீதில்
வேறு பயன்உளதோ, பங்க யன்வகுத்த
குடியான
சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக்கலங்கள்
தடியால்
அடியுண்ட வாறுஒக்கும் என்றுஇனம் சார்ந்திலரே. --- பட்டினத்தார்.
எண்ணிலேன்
திருநாம அஞ்செழுத்தும்என் ஏழைமை அதனாலே நண்ணிலேன்
கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே
பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல்
ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே. --- திருவாசகம்.
பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்... --- அபிராமி பட்டர்.
வம்பறா
---
வம்பு
அறா. சமயவாதிகள் எப்போதும் இது தீது. அது குற்றம் என்று வம்பு வார்த்தைகளே பேசிக்
காலத்தைப் பாழாக்குவார்கள்.
சில
கன்னம் இடும்
---
கன்னம்
- திருடு. ஆன்றோர்கள் அருளிச் செய்த பழைய
நூல்களில் இருந்து சில சொற்களைத் திருடி, தாம்
பாடியதாக தம் பாடல்களில் சேர்த்துக் கொள்வார்கள்.
திருடி
யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன கவிபாடித்
திரியு
மவர் சிலர் புலவர் மொழிவது
சிறிது முணர்வகை யறியேனே” ---(கருட)
திருப்புகழ்.
…. அருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் பெறுவேனோ..... --- (சொரியுமுகிலை) திருப்புகழ்.
சமயத்துக்
கத்துத் திரையாளர் ---
திரை
- அலை. கடல் அலைபோல் ஆரவாரம் செய்து
சமயவாதிகள் தர்க்கம் செய்து கதறுவார்கள்.
அருணகிரிநாதருக்கு
இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு.
பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.
கலகல
கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு
சமயப் பங்க வாதிகள்
கதறிய
வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு
மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற
மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு
மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் --- (அலகில்) திருப்புகழ்.
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு மவிரோதம்
நிகழ்த
ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ ளெனவேதம்
சகர
சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ரறியாத
தனிமை
கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகம தருள்வாயே.. --- திருப்புகழ்.
வன்
கலாத் திரள் தன்னை அகன்று ---
இத்தகைய
வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு
விலகியவர்கள் உத்தம அடியார்கள்.
மனத்தில்
பற்று அற்று
---
பற்று
- தன் பொருளில் வைக்கும் விருப்பம்.
அவா
- பிறர் பொருளில் வைக்கும் விருப்பம்.
முதலில்
அவா நீங்க வேண்டும். பிறகு பற்றும் ஒழிய வேண்டும். பற்று அற்றால் வீடுபேறு
சித்திக்கும். உடைந்த ஓட்டில் பற்று வைத்திருந்தார்
பத்திரகிரியார். அப் பற்றையும் அகற்றிப் பரமன் அவருக்கு அருள் புரிந்தார். "அற்றது
பற்று எனில் உற்றது வீடு" என்கின்றார் நம்மாழ்வார்.
பற்று
பிறவியைத் தரும். மான்மீது பற்று வைத்து ஜடபரதர் பிறவி எடுத்தார். "பற்றற்ற
கண்ணே பிறப்பு அறும்" என்கின்றார் திருவள்ளுவர்.
அருளாலே
தம் பராக்கு அற ---
பிற
பொருளில் வைக்கும் நோக்கத்தை முதலில் களைந்து, திருவருளினால் யாம் என்று தம்மை
நோக்கும் பராக்கும் அறப் பெறவேண்டும்.
இராப்பகல்
பிறிது பராக்கு அற... --- (விரகற)
திருப்புகழ்.
அராப்புனை
வேணியன்சேய் அருள்வேண்டும், அவிழ்ந்த அன்பால்
குராப்புனை
தண்டையந்தாள் தொழல் வேண்டும், கொடிய ஐவர்
பராக்குஅறல்
வேண்டும், மனமும் பதைப்புஅறல் வேண்டும் என்றால்,
இராப்பகல்
அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.
--- கந்தர் அலங்காரம்.
பத்மக்
கழல் சேர்வார்
---
அடியார்கள், தாயவர் நட்பை விலக்கி, பற்றற்று, பராக்கு அற்று, இறையை உணர்ந்து, உள்ளம் உருகி, பரமன் பாதத்தை அடைவார்கள். பரமன் பாத கமலத்தைச் சேரும் படிமுறைகளை இங்கே
சுவாமிகள் விளக்குகின்றார்.
தம்
குழாத்தினில் என்னையும் அன்பொடு வைக்கச் சற்றுக்
கருதாதோ
….
அடியார்
குழுவில் அடியேனையும் சேர்த்து அருள் புரிய முருகா, நின் திருவுள்ளத்தில் சிறிது கருதலாகாதோ
என்று மிக உருக்கமாக அடிகளார் விண்ணப்பம் புரிகின்றார்.
ஒரு
குருட்டுப் பசு. இங்கும் அங்குமாக அலைகின்றது.
அதற்கு ஊர்சேரும் வழி தெரியவில்லை. ஒரு அருளாளன் அக் குருட்டுப் பசுவை, பசு மந்தையில் சேர்த்து விட்டான். முன்னும் பின்னும் இரு பக்கங்களிலும் உராய்ந்து
கொண்டு, அந்தக் கண் அற்ற பசு
ஊர் சேர்ந்தது. அதுபோல், ஞானக்கண் அற்றவர் எண்ணற்ற பெருமையுடைய
திருத்தொண்டர் கூட்டத்தில் சேர்ந்து விட்டால், எளிதாக முத்தி உலகம் சேர்ந்து விடலாம்.
தேவுடனே
கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துஉரைத்த
பாவுடனே
கூடியஎன் பருப்பொருளும் விழுப்பொருளாம்;
கோவுடனே
கூடிவரும் குருட்டு ஆவும் ஊர்புகுதும்;
பூவுடனே
கூடிய நார் புனிதர் முடிக்கு அணியாமால். --- சேக்கிழார் புராணம்.
வெம்
பராக்ரம மின் அயில் ---
வேலாயுதத்தின்
தன்மை அடியார்க்குத் தண்ணென்று குளிர்ச்சியாகத் திகழும். பகைவர்க்கு ஒருகோடி சூரிய வெப்பமாக விளங்கும்.
ஆலமாய்
அவுணருக்கு அமரருக்கு அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளி மீது
அரிய
தவமுநிவருக்கு இந்துவின் தண் என்று
அமைந்து அன்பருக்கு முற்றா
மூலமாம்
வினை அறுத்து அவர்கள் வெம் பகையினை
முடித்து
இந்திரர்க்கும் எட்டா
முடிவில்
ஆநந்தம் நல்கும் பதம் அளித்து எந்த
மூதண்டமும்
புகழும் வேல் --- வேல்விருத்தம்.
அயில்
- கூர்மை. ஆகுபெயராக வேலைக்
குறிக்கின்றது.
ஒரு
வெற்புப் பொட்டுப் பட ---
மாயையில்
ஒப்பற்று விளங்கி தவமுனிவர்கட்கும் இமையவர்கட்கும் பலகாலம் இன்னல் பல புரிந்து
கொண்டிருந்த கிரவுஞ்ச மலையை, முருகப் பெருமான்
வேலினால் துகள் புரிந்து அருளினார்.
வினைகள்
குவிந்து மலைபோல் நின்று துன்பம் செய்யும்.
அவ் வினைக் குன்றத்தை ஞானவேல் பொடியாக்கும்.
பொட்டுஆக
வெற்பைப் பொருத கந்தா, தப்பிப் போனது ஒன்றற்கு
எட்டாத
ஞானகலை தருவாய்; இரும் காம விடாய்ப்
பட்டார்
உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி
வேல்விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே. --- கந்தர் அலங்காரம்.
வெட்சிச்
சித்ரத் திருமார்பா ---
முருகனுக்கு
வெட்சி உகந்த மலர்.
கம்பராய்ப்
பணிமன்னு புயம்பெறுகைக்குக் கற்புத் தவறாதே கம்பையாற்றில் அன்னா தவம் புரி கச்சி ---
கம்பராய்
- ஏகாம்பரராய்.
கம்பர்
ஆய் பணி மன்னு புயம்.
ஏகாம்பரர்
ஆராய்ந்து அணிந்துள்ள பாம்புகள் நிலைத்துள்ள தோள்.
பணி
மன்னு புயம் --- தொண்டுகள் நிலைத்துள்ள தோள்.
காமாட்சியம்மை காஞ்சியில் ஓடும் கம்பாநதிக் கரையில் தனி மாமரத்தின் கீழ்
சிவலிங்கத்தை நிறுவி இடப்பாகம் பெறும் பொருட்டுத் தவம் புரிந்தார்.
இறைவர்
தேவியின் அன்பின் திறத்தை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டு, கம்பா நதியில் வெள்ளத்தைப்
பெருக்கினார். தேவி தனக்கு இடர்
விளைவிக்குமே என்று கருதாது, சிவலிங்கத்துக்கு
இடர் விளையும் என்று கருதி, அஞ்சி சிவலிங்கத்தைத்
தழுவிக் கொண்டாள். அம்பிகையின் அன்பினால்
சிவலிங்கம் குழைந்தது. சிவலிங்கத்தில்
அம்பிகையின் வளைத் தழும்பும், முலைச் சுவடும்
உண்டாகியது. இறைவர் தோன்றி அம்பிகைக்கு
இடப்பாகம் தந்து அருளினார்.
நதிகொ
ளகத்தில் பயந்து கம்பர் மெய்
கருக
இடத்தில் கலந்து இருந்தவள்.. --- (சலமலம்) திருப்புகழ்.
எள்கல்
இன்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத்
துஉள்கி உகந்துஉமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம்
காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப் பட்ட
கள்ளக்
கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. ---
சுந்தரர்.
பூதி
யாகிய புனித நீறு ஆடிப்
பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து,
காதில்
வெண்குழை கண்டிகை தாழ,
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி
தேவனார் ஆயும் மாதவஞ்செய்
அவ்வரம் கொலோ, அகிலம் ஈன்று அளித்த
மாது
மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு,
வளைத் தழும்புடன் முலைச்சுவடு அணிந்தார். --- பெரியபுராணம்.
கருத்துரை
கச்சி
மேவும் கருணைக் கடலே, அடியேனைத்
திருத்தொண்டர் கூட்டத்தில் சேர்த்து அருள்.
No comments:
Post a Comment