கொண்டநல்
கலைகளோடு
குணம்இலாக் கோதைமாரைக்
கண்டு
விண்டு இருப்பது அல்லால்
கலக்கல் ஆகாது, புல்லின்
உண்டு
என மதுவை உண்ண
ஒவியப் பூவில் வீழ்ந்த
வண்டு
இனம் பட்டபாடு
மனிதரும் படுவர் தாமே.
இதன்
பொருள் ---
கொண்ட நல் கலைகளோடு --- ஆராய்ந்து அறிந்து
கொண்ட நல்ல சாத்திரப் பயிற்சியோடு,
குணம் இலாக் கோதைமாரைக் கண்டு -- நல்ல குணங்கள் பொருந்தி இராத பெண்களைக்
கண்டு,
விண்டு இருப்பது அல்லால் --- அவரிடம் இருந்து
விலகியே இருக்கவேண்டுமே அல்லாது,
கலக்கல் ஆகாது --- (அவர்கள் அழகை விரும்பி மணம்
புரிந்துகொண்டு) அவரோடு கூடுதல் தகாது,
புல்லின் --- (அவ்வாறு இன்றி மணம் புரிந்து) கலந்தால்,
ஓவியப் பூவில் --- ஓவியமாகத் தீட்டப்பட்ட மலரில்
மதுவை உண்டு என --- தேன் உள்ளது என்று எண்ணி,
உண்ண --- அதனை உண்ணும் பொருட்டு,
வீழ்ந்த --- அதிலே விழுந்து அடிபட்டு வருந்திய
வண்டு இனம் பட்டபாடு --- வண்டுக் கூட்டங்கள் பட்ட
துன்பத்தினை
மனிதரும் படுவர் தாமே --- (நல்லறிவும் நற்குணமும்
இல்லாத பெண்ணை மணந்து கலந்த) மனிதரும் அடைந்து வருந்துவர்.
கருத்து --- இதுவே பெண்களுக்கும் பொருந்தும். நல்லறிவும் நற்குணமும் இல்லாத ஆடவனை, அவனது அழகு மற்றும் செல்வம் கருதி மணத்தல் துன்பம் தரும் என்று கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment