22. ஆகாத பகை
அரசர்பகை யும்,தவம் புரிதபோ தனர்பகையும்,
அரியகரு
ணீகர்பகையும்,
அடுத்துக் கெடுப்போர் கொடும்பகையும், உள்பகையும்,
அருள்இலாக்
கொலைஞர்பகையும்,
விரகுமிகும் ஊரில் உள் ளோருடன் பகையும், மிகு
விகடப்ர
சங்கிபகையும்,
வெகுசனப் பகையும்,மந் திரவாதி யின்பகையும்,
விழைமருத்
துவர்கள் பகையும்,
உரமருவு கவிவாணர் பகையும், ஆசான் பகையும்,
உறவின்முறை
யார்கள்பகையும்,
உற்றதிர வியம் உளோர் பகையும், மந் திரிபகையும்,
ஒருசிறிதும்
ஆகாதுகாண்!
வரநதியின் மதலை என இனியசர வணமிசையில்
வருதருண
சிறுகுழவியே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
வர நதியின் மதலை என இனிய சரவணமிசையில் வரு தருண சிறுகுழவியே --- உயர்ந்த நதியான கங்கையின் மகன் என அழகிய
சரவணப் பொய்கையில் வந்து உதித்த இளம் சிறு குழந்தையே!
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
அரசர்
பகையும் --- அரசாட்சி புரிவோர் பகையும்,
தவம் புரி தபோதனர்
பகையும் --- தவம் செய்யும்
துறவிகள் பகையும்,
அரிய கருணீகர்
பகையும் --- அருமையான ஊர்க் கணக்கர்
பகையும்,
அடுத்துக்
கெடுப்போர் கொடும் பகையும் --- கூடவே இருந்து கெடுக்கும் கொடியவரின் பகையும்,
உள் பகையும் --- நண்பர் போல் இருந்து கெடிக்கும் பகையும்,
அருள் இலாக்
கொலைஞர் பகையும் --- அருள் உணர்வு இல்லாத கொலையாளிகளின் பகையும்,
விரகு மிகும்
ஊரில் உள்ளோருடன் பகையும் --- வஞ்சக எண்ணம் மிக்க
ஊராருடன் பகையும்,
மிகு விகட ப்ரசங்கி
பகையும் --- பெரிய நகைச் சுவையாளனுடன் பகையும்,
வெகு சனப் பகையும் --- கூட்டமான மக்களின் பகையும்,
மந்திர வாதியின்
பகையும் --- மந்திரக்காரன்
பகையும்,
விழை
மருத்துவர்கள் பகையும் --- விரும்பத்தக்க மருத்துவர்களின் பகையும்,
உரம் மருவு
கவிவாணர் பகையும் --- அறிவில் சிறந்த கவிஞரின் பகையும்,
ஆசான் பகையும் --- ஆசிரியன் பகையும்,
உறவின்
முறையார்கள் பகையும் --- சுற்றத்தார் பகையும்,
உற்ற திரவியம்
உளோர் பகையும் --- பொருள் படைத்தோரின் பகையும்,
மந்திரி பகையும் --- அமைச்சரின் பகையும்,
ஒரு சிறிதும்
ஆகாது -- சற்றும் கூடாது.
No comments:
Post a Comment