புத்திமான்
பலவான் ஆவான்,
பலம் உளான் புத்தி அற்றால்,
எத்தனை
விதத்தினாலும்
இடர் அது வந்தே தீரும்,
மற்று
ஒரு சிங்கம் தன்னை
வருமுயல் கூட்டிச் சென்றே,
உற்றதோர்
கிணற்றில் சாயல்
காட்டிய உவமை போலே.
இதன்
பொருள் ---
அறிவு
உள்ளவன் தாழ்ந்தவனாய் இருந்தாலும்,
அவன்
தனது அறிவு நுட்பத்தால் ஒலிமை உடையவனாகவே கருதப்படுவான்.
இயல்பாகவே
உடல் வலிமை உடையவனாக இருந்து, உருவத்தில் பெரியவனாகவே இருப்பினும், ஒருவன் அறிவு இல்லாதவனாக
இருந்தால்,
அவனுக்குத்
துன்பம் வந்தே தீரும்.
இது
எவ்வாறு என்றால், வீரம் உள்ள ஒரு சிங்கத்தை, அது வாழுகின்ற காட்டிலே உள்ள
சிறிய முயலானது,
உபாயமாகக்
கூட்டிச் சென்று, ஆழமுள்ள ஒரு பெரிய கிணற்றைக் காட்டி, அதில் அந்தச் சிங்கத்தை விழுமாறு
செய்து கொன்றதைப் போல.
No comments:
Post a Comment