மானம்
உள்ளோர்கள் தங்கள்
மயிர் அறின் உயிர் வாழாத
கான்
உறு கவரி மான்போல்
கனம்பெறு புகழே பூண்பார்,
மானம்
ஒன்று இல்லார் தாமும்
மழுங்கலாய்ச் சவங்கள் ஆகி
ஈனமாம்
கழுதைக்கு ஒப்பாய்
இருப்பர் ஈது உண்மை தானே.
இதன்
பொருள் ---
தன்
உடலில் இருந்து ஒரு மயிர் விழுந்தாலும் உயிர் வாழாது மடிகின்ற கவரி மானைப் போல, மானமுள்ளவர்கள், அது போகும் இடத்து, தன்னுடைய உயிரை விட்டாவது, மிகுந்த புகழைத்
தேடிக் கொள்வார்கள்.
மானம்
வெட்கம் ஏதும் இல்லாதவர்கள், அறிவு மழுங்கிப் போய், பிணங்கள் போல வாழ்ந்து, தாழ்மையான கழுதைக்கு
நிகர் என்று சொல்லும்படி உயிர் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.
இதுவே
உண்மை ஆகும்.
No comments:
Post a Comment