வைதாலும் இனிமை தருவது




கதலி வீரர் களத்திடை வையினும்
குதலை வாயில் குழவிகள் வையினும்
மதன லீலையின் மங்கையர் வையினும்
இதம் உறச் செவிக்கு இன்பம் விளையுமே.

இதன் பொருள் ---

போர்க்களத்திலே விருதுக் கொடியை உடைய வீரர், ஊக்கம் பெற வேண்டி, ஒருவரை வைதாலும்,

சொல் நிரம்பாத மழலை மொழியை உடைய சிறு குழந்தைகள் வைதாலும்,

காம விளையாட்டின் போது அதில் ஈடுபட்டுள்ள பெண்கள் வைதாலும்,

கேட்பவர் காதுக்கு இதமாகவும், இனிமை பயப்பதாகவும் அமையும்.

கருத்து --- இப் பாடலின் மூன்றாவது அடி, "மதிகொள் நேய மடந்தையர் வையினும்" என்றும் சில பதிப்புக்களில் காணக் கிடக்கின்றது. அப்படியே கொண்டால், "அறிவும் அன்பும் நிறைந்த மனைவியானவள், ஊடலின் போது வைதாலும்" எனப் பொருள் கொள்ளலாம். 

No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...