ஒழுக்கம் விழுப்பம் தரும்





ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம்,
ஆசாரம் நன்மை ஆனால் அவனியில் தேவர் ஆவார்,
ஆசாரம் செய்யார் ஆகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார் போல் பேச்சுமாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.

இதன் பொருள் ---

     ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம் --- ஒழுக்கத்தோடு ஒருவர் வாழ்வாரானால் அவருக்கு நல்ல அறிவும், நல்ல பெயரும் உண்டாகும்.

     ஆசாரம் நன்மை ஆனால் அவனியில் தேவர் ஆவார் --- அந்த ஒழுக்கமானது தன்னோடு நில்லாமல், பிறருக்கும் நன்மை புரிவதாக அமைந்தால், இந்த உலகத்தில் அவர் மனிதராக வாழ்ந்தாலும், தெய்வத்தோடு ஒப்ப மதிக்கப்படுவர்.

     ஆசாரம் செய்யார் ஆகில் --- ஒழுக்க நெறியில் ஒருவர் வாழார் ஆகில்,

     அறிவொடு புகழும் அற்று --- அவருக்கு நல்லறிவும், நற்பெயரும் இல்லாமல்,

     பேசார் போல் பேச்சுமாகி --- நாக்கு உள்ளிழுத்து, வாய் பேசாத உமை ஆகி,  சைகைகளால் குறிப்புக் காட்டி வாழ்ந்து,

     பிணியொடு நரகில் வீழ்வார் --- நோய்களால் துன்பத்தை அடைந்து, மறுமையில் நரகத்தில் உழலுவார்.


No comments:

054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...